புலிகளோடு நடைபெற்ற 3 தசாப்தகால யுத்தங்கள் முடிவடைந்து 18 மாதங்கள் ஆகின்ற நிலையிலும், புலிகளைத் தாம் முற்றாக அழித்துவிட்டோம் என இலங்கை கங்கணம் கட்டி அலைகிறது. இந்நேரத்தில் சுமார் 2,500 படையினர் அடங்கலாக முப்படைகளின் பாரிய போர் ஒத்திகை ஒன்று கடந்த 21ம் திகதி முதல் 9 நாட்களாக நடைபெற்றுவருகிறது. மன்னார் அடங்கலாக சாலைதுறையில் இந்த பாரிய ஒத்திகை இடம்பெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவகள் தெரிவிகின்றன. இலங்கை வரலாற்றில் முப்படைகளும் இணைந்து முதல் தடவையாக இவ்வாறானதொரு பாரிய போர் ஒத்திகை ஒன்றை நீர் காகங்கள் என்ற பெயரில் நடத்திவருவது ஏன்? இதன் பின்னணி தான் என்ன?
குறிப்பாக இங்கு நடைபெற்று வரும் பாரிய படை ஒத்திகையில், வானில் இருந்து குதித்து குறிப்பிட்ட ஒரு இடத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கையும், சிறுபடகுகள் மூலம் ஊடறுத்துச் சென்று தாக்குதல் நடத்துவதும், மற்றும் தரையிறக்கம் செய்வதுமே மேற்கொள்ளப்படுவதாக இலங்கைப் பாதுகாப்புச் செயலகம் தெரிவித்துள்ளது. வான் படையினர் மற்றும் கடல் படையினரின் உதவியோடு, இராணுவத்தின் கமாண்டோப் படைப்பிரிவினர், திடீரென இடங்களைக் கைப்பற்றுவது எவ்வாறு என்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னணி தான் என்ன?
இலங்கை அரசானது வெளிநாட்டுப் படை ஒன்று இலங்கைக்குள் திடீரென ஊடுருவலாம் என்ற அச்சத்தில் உள்ளதா? பிறநாடுகளின் படையாக இருக்க வாய்ப்பே இல்லை. அவ்வாறு எந்த நாடும் இலங்கை மீது படையெடுக்கவேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஆனால் அப்படி இருந்தும் இவ்வாறானதொரு நடவடிக்கை ஏன் என்ற கேள்வி தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்கள் மத்தியிலும் எழுகின்றது. அப்படியாயின் புலிகளின் புலிகளின் அணிகள் பிற நாடுகளில் இருந்து இலங்கைக்குள் எப்போதும் ஊடுருவலாம் என்ற அச்சத்தில் இலங்கை தற்போது இருப்பது அம்பலமாகிறது.
புலிகள் புதிதாக ஆள் பலத்தை திரட்டி, அணி ஒன்றைத் திரட்டி தம்மைத் தயார்ப்படுத்தி வருவதற்கு பல காலம் பிடிக்கும். அப்படியாயின் இந்நிலையில் இலங்கை அரசானது தற்போது அவசர அவசரமாக இந்த ஒத்திகையைச் செய்துபார்க்கவேண்டிய அவசியம் இல்லை. கணிசமான அளவு போராளிகள் தப்பிச் சென்றிருந்தால் மட்டுமே, இலங்கை அரசானது இது குறித்து கவலையடைய வேண்டும். அப்படியாயின் தற்போது இலங்கை இராணுவம் இவ்வாறு ஒத்திகை பார்த்து எந்த விடயத்தை தானே வெளிக்கொண்டுவர முனைகிறது
source:athirvu
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment