கன்னியாகுமரி : அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜெருசலேம் செல்ல கிறிஸ்தவர்களுக்கு அரசு சலுகை செய்து தரப்படும் என்ற அதிரடி அறிவிப்பை கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது : தற்போது, அரசு சார்பில், இஸ்லாமியர்கள் மெக்காவிற்கு செல்ல சலுகை அளிப்பதுபோல், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஜெருசலேம் செல்ல கிறிஸ்தவர்களுக்கு சலுகை அமைத்து கொடுப்போம் என்றும், இந்த மாவட்டத்தில், தனியார் நிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்களை அமைப்பதற்கு அனுமதி மறுப்பது குறித்து பரிசீலித்து இதற்கு தகுந்த தீர்வு காண்போம், கிறிஸ்தவ ஆலயங்களை அதிகளவில் இந்த மாவட்டத்தில் ஏற்படுத்துவோம், ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு, ஆதிதிராவிடர்களுக்கு உரிய சலுகைகள் மறுக்கப்படுவதாகவும், இந்த குறையை களைவதற்காகவே கமிஷன் ஒன்று செயல்பட்டு வந்தாலும், ஆனால் இதனால் முறையாக செயல்பட அதிகார வர்க்கத்தினர் அனுமதிப்பதில்லை என்றும், தாங்கள் இதற்கு தீர்வு கண்டு, ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் வாழ்வில் ஒளியேற்ற பாடுபடுவோம் என்று அவர் கூறினார்.
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment