Monday, December 20, 2010

வேர்ட் - சின்ன சின்ன விஷயங்கள்



நாம் அன்றாடம் பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பு சார்ந்த சின்ன சின்ன தகவல்கள் இங்கு தரப்படுகின்றன. உங்கள் நினைவை ரெப்ரெஷ் செய்து கொள்வதற்காக. தெரிந்ததுதானே என்று ஒதுக்க வேண்டாம்.  வேர்ட் தொகுப்பைத் திறந்தவுடன் உங்களுக்கு, அதன் மெனு மற்றும் டூல்பார்கள் அமைந்திருக்கும் விதம் பிடிக்கவில்லையா? கவலைப்படாதீர்கள்; உங்கள் விருப்பப்படி மாற்றிவிடலாம்.  எந்த டூல் பாரின் இடத்தை மாற்ற விரும்புகிறீர்களோ, அந்த டூல்பாரின் ஓரத்தில் மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். கர்சர்  நான்கு கால்கள் கொண்ட ஒரு அடையாளமாக மாறும். அப்படியே அழுத்தி இழுத்து, எங்கே இருக்க வேண்டுமோ அங்கே விட்டுவிடவும்.  மெனுபாரில், நிறைய பட்டன்கள் உள்ளன. சிலவற்றைப் பார்த்தவுடன் அவை எதனைக் குறிக்கின்றன என்று தெரியும். ஆனால் பல பட்டன்கள் எதற்காக என்று தெரிவதில்லை. இவற்றின் பெயர் மற்றும் பயன்பாடு அறிய,  மவுஸின் கர்சரை இந்த பட்டன் அருகே கொண்டு செல்லுங்கள். உடனே அந்த பட்டனின் பெயர் தெரியும்.
டாகுமெண்ட்டில் ரூலர் இல்லையா? ரூலரைக் கொண்டு வரவும் மறைக்கவும் View  மெனு சென்று Ruler   என்பதில் கிளிக் செய்திடுங்கள்.  
டாகுமென்ட் அமைக்க,புதிய பைலாக   காலியாக உள்ள பக்கம் ஒன்றைத் திறந்தவுடன் அதில் தரப்பட்டிருக்கும் மார்ஜின் உங்களுக்குப் பிடிக்கவில்லையா?  அதனை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களா? அப்படி யானால் File  மெனுவில் Page Setup  செல்லவும். அங்கு Margins   டேப்பில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் மார்ஜின் வெளியைக் கூட்டவும் குறைக்கவும் வசதிகள் தரப்பட்டிருக்கும். மாற்றிக் கொள்ளலாம். காலியாக இருக்கும் போதுதான் மாற்ற வேண்டும் என்பதில்லை. டாகுமெண்ட் உருவானபின்னும் மேலே சொன்ன வழியில் மாற்றலாம். மாற்றுவதற்கேற்ப உங்கள் டாகுமெண்ட் தோற்றமும் மாறும். நீங்கள் மாற்றிக் கொள்ளும் மார்ஜின் நீங்கள் உருவாக்கும் அனைத்து டாகுமென்ட்களிலும் வர வேண்டும் எனத்திட்டமிட்டால் மார்ஜின் செட் செய்த பின்னர் Default  என்பதில் கிளிக் செய்திடுங்கள். இதனை அழுத்தும்போது வேர்ட் உங்கள் நார்மல் டெம்ப்ளேட் மாற்றப்படுவதால் உங்கள் டாகுமென்ட் அனைத்தும் மாற்றம் பெரும் என்ற எச்சரிக்கைச் செய்தியினைத் தரும். ஏற்றுக் கொள்ளுங்கள்.
வேர்ட் திறந்தவுடன் கிடைக்கும் எழுத்து வகை (பொதுவாக டைம்ஸ் நியூ ரோமன்  என்ற எழுத்துதான் இருக்கும்.) உங்களுக்குப் பிடிக்கவில்லையா? நீங்கள் எப்போதும் ஏரியல் அல்லது வெர்டனா அல்லது முற்றிலும் வேறாக ஒரு தமிழ் எழுத்து வகையினை தொடக்க எழுத்தாக வைத்துக் கொள்ள திட்டமிட்டால் கீழே குறித்துள்ள படி செயல்படவும். Format மெனுவில் இருந்து Font  என்பதை செலக்ட் செய்திடவும். நீங்கள் பிரியப்படும் எழுத்துவகையைத் தேர்ந்தெடுக்கவும். தமிழ் பாண்ட் ஆக இருந்தாலும் தேர்ந்தெடுக்கவும். மேலும் அதன் சைஸ், தடிமனாக அல்லது சாய்வாக மற்றும் பிற பண்புகளைத் தேர்ந்தெடுத்தபின்    Default  என்பதைத் தேர்ந்தெடுங்கள். இதனை அழுத்தும்போது வேர்ட் உங்கள் நார்மல் டெம்ப்ளேட் மாற்றப்படுவதால் உங்கள் டாகுமென்ட் அனைத்தும் மாற்றம் பெரும் என்ற எச்சரிக்கைச் செய்தி யினைத் தரும். கவலைப்படாமல் ஓகே கிளிக் செய்து வெளியேறுங் கள். இனி நீங்கள் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்க  புதிய பக்கத்தினைத் திறக்கையில், அது நீங்கள் தேர்ந்தெடுத்த எழுத்து வகையுடன் தான் திறக்கப்படும்

source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails