Wednesday, March 9, 2011

பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட அமெரிக்க சாமியார் திடீர் மாயம்


வாஷிங்டன்:அமெரிக்காவில், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாருக்கு, பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் திடீரென மாயமானார்.அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் 200 ஏக்கர் பரப்பளவில் "பர்சனா தாம்' என்ற ஆசிரமம் உள்ளது. 90ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த ஆசிரமத்தில், ஏராளமான இந்தியர்கள் தங்கியுள்ளனர். இந்த ஆசிரமத்தின் நிறுவனர் பிரகாஷானந்த் சரஸ்வதி. தற்போது 80 வயதாகும் பிரகாஷானந்த் மீது ஆசிரமத்தில் தங்கியிருந்த ஷியாமா ரோஸ்(30) உள்ளிட்ட இரண்டு பெண்கள் கற்பழிப்பு புகார் செய்தனர். தங்களை 12 வயது முதல் பாலியல் ரீதியாக இந்த சாமியார் கொடுமைப்படுத்தியதாக, இந்த பெண்கள் 2008ம் ஆண்டு புகார் செய்தனர். 45 கோடி ரூபாய் ஜாமீன் பத்திரத்தின்படி, இவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், 31 வயதான கேத்தி டோனிசென் என்ற பெண், தன்னிடம் சாமியார் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் கூறினார். இதையடுத்து, பிரகாஷானந்த் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, நேற்று முன்தினம் பிரகாஷானந்த் ஆஜராகவில்லை. எனவே, அவருக்கு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. மீண்டும் 45 கோடி ரூபாய் ஜாமீன் பத்திரத்தை தாக்கல் செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சாமியார் பிரகாஷானந்த் உடல் நலம் குன்றி இருந்ததாகவும், அவர் தற்போது, எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்றும், அவர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். பிரகாஷானந்தின் பாஸ்போர்ட் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், அவர் வெளிநாடு தப்பித்து செல்வதற்கு வழியில்லை என்று தெளிவாக்கினர்

source:dinamalar

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails