Tuesday, March 1, 2011

ஆபத்தை முன்கூட்டியே கண்டறியும் கருவி அறிமுகம்

ஆபத்தை முன்கூட்டியே கண்டறியும் உபகரணம் அறிமுகம்

பாதசாரிகள் மற்றும் முன்னால் வரும் வாகனங்களை இணங்கண்டு கொள்வதுடன் அவை மோதலாம் என்ற நிலையில் அது தொடர்பில் எச்சரிக்கை சமிக்ஞை எழுப்புவது மட்டுமல்லாமல், உடனடியாக தானியங்கி முறையில் நிறுத்திக் கொள்ளவும் கூடிய உபகரணமொன்றினை கார் தயாரிப்பு நிறுவனமான வொல்வோ உருவாக்கியுள்ளது. 

இதனை தனது கார்களில் அந்நிறுவனம் பொருத்தியுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளும் வெற்றியடைந்துள்ளன. 

ராடார் மற்றும் கமரா தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இக்காரானது முன்னால் வரும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளை இணங்கண்டு கொள்கின்றது. 

அவற்றின் மீது கார் மோதலாம் என்ற நிலையில் எச்சரிக்கை சமிக்ஞை எழுப்படும். அதை சாரதி பொருட்படுத்தாத நிலையில் கார் தானாக நிறுத்தப்படும். 

எனினும் இவ்வுபகரணமானது இரவிலும் மோசமான காலநிலையின் போதும் இயங்காது என வொல்வோ தெரிவிக்கின்றது

source:pathivu

 ----
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails