Tuesday, March 29, 2011

"நிர்வாண நகரத்தில் கோவணம் கட்டியவன் ஆண்டி'


 "நிர்வாண நகரத்தில் கோவணம் கட்டியவன் ஆண்டி' என்ற கதையாக, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வைப் பின்பற்றி, சட்டசபை தேர்தலையொட்டி, பா.ஜ., இலவசங்களை அறிவித்துள்ளது. இது, ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியாக உள்ளது.என்னதான் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினாலும், தலையால் தண்ணீர் குடித்தாலும், மூன்று தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறுவதே பெரிய விஷயம். நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்கப் போவதில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, திராவிடக் கட்சிகளுக்கு, நாங்களும் சளைத்தவர்களல்ல என்ற ரீதியில் இலவசங்களை அறிவித்துள்ளது வேதனையாக உள்ளது. நெஞ்சை நெருடுவது போல உள்ளது. "யூ டூ பி.ஜே.பி.,' என கேட்கத் தோன்றுகிறது.குஜராத்தில் கடந்த சட்டசபை தேர்தலின்போது, தமிழகத்தைப் பின்பற்றி, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இலவச கலர் "டிவி' தருவோம்' என்றதாம் காங்கிரஸ். நரேந்திர மோடியோ, "அந்தக் கலர் "டிவி'க்கு வரி விதிப்பேன்' என்றாராம்.ஓசியில் "டிவி' கொடுப்போம் என்ற காங்கிரஸ் தோற்றது. இலவச "டிவி'க்கு வரி விதிப்பேன் என்ற நரேந்திர மோடி வென்றார்.கடந்த 2006 சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., அறிவித்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும், இரண்டு ஏக்கர் நிலமும், ஒரு ரூபாய் அரிசியும் தான் தங்களை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதாக, கருணாநிதியும், அவர் கட்சியினரும் கருதிக்கொண்டு இருக்கின்றனர்.ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் தான், தி.மு.க.,வை மீண்டும் அரியணையில் அமர்த்தியது.இலவசங்களுக்காக இளித்துக்கொண்டு மக்கள் ஓட்டளித்து விடுவர் என்றால், தி.மு.க., போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடியிருக்க வேண்டுமே! மைனாரிட்டி அரசாகத் தானே கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்து இருந்தது.இலவசங்கள் ஆட்சியில் அமர்த்திவிடும் என்றால், தலைநகரில் உள்ள தொகுதிகளில் தலைவர்கள் போட்டியிடாமல், ஏன் வெளி மாவட்டங்களைத் தேடி ஓடுகின்றனர். அவர்களைப் பின்பற்றி, பா.ஜ.,வும் இலவசங்களை அறிவித்துள்ளது, கேட்பதற்கே கேவலமாக உள்ளது.

source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails