Thursday, March 17, 2011

டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !


 'கிச்சன் கில்லாடி' பகுதிக்கு வந்து குவிந்த 'ரெசிபி'க்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, இங்கே பரிமாறுகிறார் 'சமையல் திலகம்' ரேவதி சண்முகம்... கூடவே அவருடைய கமென்ட்ஸ்!

வாசகிகள் பக்கம்

 பாசிப்பருப்பு கோசுமல்லி

100 கிராம் ஊறிய பாசிப்பருப்பு,  100 கிராம் வெள்ளரி துருவல்,  100 கிராம் மாங்காய் துருவல்,  100 கிராம் தேங்காய் துருவல் ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, அதை பாசிப்பருப்பு கலவையில் சேர்த்தால்... ஆரோக்கியமான சாலட் தயார். அப்படியே சாப்பிடலாம்.

- ஜி.பத்மாவதி, திருப்பூர்

கமென்ட்: துருவிய முள்ளங்கி, பொடியாக நறுக்கிய குடமிளகாய் சேர்த்தால் இன்னும் டேஸ்ட்டாக இருக்கும்.

 

வல்லாரைக் கீரை சாலட்

100 கிராம் வல்லாரைக் கீரை, 50 கிராம் சின்ன வெங்காயம், ஒரு பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி, கலந்து கொள்ளவும். இதனுடன், ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், சிறிது எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துப் பிசிறி வைக்கவும். பத்து நிமிடம் கழித்து சாப்பிடவும். அருமையாக இருக்கும். மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

- மாலதி, மதுரை-10

கமென்ட்: கீரையை அப்படியே சாப்பிடும்போது கசப்பாக இருக்கும். துருவிய கேரட், வெள்ளரி போன்ற காய்கறிகளைச் சேர்த்து செய்யலாம். கசப்புத் தன்மை குறைவதோடு, கூடுதல் சத்துக்களும் கிடைக்கும்!

 

 

நீங்களும் டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடியா..? இரண்டே நிமிடத்தில் செய்யக்கூடிய அறுசுவை தரும் அருமையான ரெசிபியை, உங்கள் குரலில் இங்கே பதிவு செய்யுங்கள் இரண்டே நிமிடத்தில்! பிரசுரமாகும் சிறந்த ரெசிபிகளுக்கு வழக்கம் போலவே சிறப்பான பரிசு உண்டு! பரிசுக்குரிய ரெசிபிகளோடு மற்ற ரெசிபிகளும் விகடன் டாட் காம் (www.Vikatan.com) மூலம் உலகம் முழுக்க உங்கள் குரலிலேயே வலம் வரும்!

உடனே உங்கள் செல்போனிலிருந்து 04442890002 என்ற எண்ணை அழுத்துங்கள். இணைப்பு கிடைத்தவுடன், கணினி குரல் ஒலிக்கும். பீப் ஒலிக்குப் பிறகு, உங்களுடைய ரெசிபியைச் சொல்லுங்கள். நினைவிருக்கட்டும்... இரண்டே நிமிடங்களுக்குள் சொல்ல வேண்டும்.

வழக்கமான செல்போன் கட்டணங்களுக்கு உட்பட்டது.

source:vikatan


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails