Thursday, September 30, 2010

அயோத்தி வழக்கு தீர்ப்பை நீதிபதிகள் படிக்க துவங்கினர்

அலகாபாத் : அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக, கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கின் இறுதித் தீர்ப்பை, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நீதிபதிகள் எஸ்.யு.கான் தலைமையில் நீதிபதிகள் சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் இன்று மாலை 4 மணி அளவில் படிக்க ஆரம்பித்தனர் .


தீவிர பாதுகாப்பு : தீர்ப்பை ஒட்டி அலகாபாத் ஐகோர்ட் வளாகத்தில் உச்சகட்ட உஷார் நிலை அமல் படுத்தப்பட்டிருந்தது. கோர்ட்டுக்குள் வழக்கில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர்களும் ஒரு முறை கோர்ட்டுக்குள் சென்று விட்டால், தீர்ப்பு முழுமையாக வாசிக்கப்பட்ட பிறகு தான் வெளியே வர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்களுக்கு தீர்ப்பின் பிரதிகள் லக்னோ மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடத்தில் வழங்கப்பட்டது.


முன்னதாக நிருபர்களிடம் பேசிய லக்னோ கலெக்டர் சுனில் அகர்வால், 3 நீதிபதிகளும் தனித்தனியாக தீர்ப்பு வழங்கியிருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் பத்திரிகையாளர்கள் தீர்ப்பு குறித்த தகவல்களை வெளியிடும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என லக்னோ கலெக்டர் மற்றும் போலீஸ் டி.ஐ.ஜி., வேண்டுகோள் விடுத்திருந்தனர்.


அமைச்சரவை கூட்டம் : இதற்கிடையில் டில்லியில் இன்று மாலை 5 மணிக்கு பாதுகாப்பு தெ?டர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. அயோத்தி தீர்பபை அடுத்து ஏற்படக்கூடிய நிலைமையை சமாளிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது

source:dinamalar
--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails