Friday, September 3, 2010

வேர்ட்: டிப்ஸ்


 

வேர்ட் : ஹைபன்
வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு செல்கையிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை. ஏனென்றால், சில தொலைபேசி எண்கள் இது போன்ற டேஷ்களைக் கொண்டு அமைத்திருப்போம். இவை பிரிக்கப்பட்டால் அவை சரியாக அமையாது. எனவே பிரிக்க முடியாத ஹைபன்கள் இந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.
இதற்கு அந்த ஹைபன் அல்லது டேஷ் அமைக்கையில் கண்ட்ரோல் மற்றும் ஷிப்ட் கீகளை ஒரு சேர அழுத்திக் கொண்டு அமைக்க வேண்டும். பிரிக்க முடியாத ஹைபன்களை வேறு ஒரு வகையிலும் அமைக்கலாம்.
1. Insert மெனு சென்று Symbol  என்றிருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது இன்ஸெர்ட் சிம்பல் டயலாக் பாக்ஸைக் கொடுக்கும்.
2. இந்த சிறிய விண்டோவில் Special Characters டேப்பில் கிளிக் செய்திடவும்.
3. இதன் பின் நான் பிரேக்கிங் ஹைபன் கேரக்டரை ஹைலைட் செய்திடவும்.
4. பின்னர் இன்ஸெர்ட் என்பதில் கிளிக் செய்திடவும்.
5.அடுத்து கேன்சல் என்பதில் கிளிக் செய்வதன் மூலம் டயலாக் பாக்ஸை மூடவும்.
சுருக்கமாக சில டிப்ஸ்கள்:
வேர்ட் டாகுமெண்ட்டில் உடனடியாக ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ள எப்7 அழுத்தவும்.
ஹைபன் பயன்படுத்திய சொற்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் ஹைபன் டைப் செய்திடுகையில் கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்திக் கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட இரண்டு சொற்கள் வரி ஓரங்களில் பிரியாமல் அமைய வேண்டும் என்றால் கண்ட்ரோல்+ஷிப்ட்+ஸ்பேஸ் பயன்படுத்துங்கள்.
திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத் திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும்.
வேர்ட் பாரா பார்மட்டிங்:
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் ஒரு பாரா முழுவதும் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்கிறீர்களா? முழு பாராவின் வரிகளுக்கிடையேயான இடைவெளியை அதிகப்படுத்தவோ, குறைக்கவோ விரும்புகிறீர்களா? பாரா இன்டென்ட் எதனையேனும் மாற்ற விரும்புகிறீர்களா? இடது, வலது, நடு என பாரா இணையாக அமைவதை மாற்றி அமைக்க எண்ணமா? இதற்கெல்லாம் முழு பாராவினையும் நீங்கள் செலக்ட் செய்திட வேண்டியதில்லை. பாராவில் ஒரு சிறு பகுதியை செலக்ட் செய்து, தேவையான மாற்றத்திற்கான கட்டளையைத் தரவும். அது அப்படியே பாரா முழுவதும் மேற்கொள்ளப்படும்.
கரப்ட் ஆன வேர்ட் பைல்
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க முயற்சிக்கிறீர்கள். அப்போது அந்த டாகுமெண்ட் பைல் கரப்ட் ஆகிக் கெட்டுப் போய்விட்டதாகவும், அதனைத் திறக்க முடியாதெனவும் ஒரு எர்ரர் மெசேஜ் கிடைக்கிறது. நிச்சயமாக கம்ப்யூட்டரில் வேர்ட் பயன்படுத்துபவர் அனைவருக்கும் இந்த எர்ரர் செய்தியினை நிச்சயம் சந்தித்திருப்பார்கள்.
இதை அப்படியே விட்டுவிட முடியுமா? கெட்டுப் போனதை எப்படி சரி செய்வது?
உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கேற்ப, பைல் மெனு சென்று ஓப்பன் பிரிவு அல்லது ஆபீஸ் பட்டன் அழுத்தி ஓப்பன் பிரிவு தேர்ந்தெடுத்து அழுத்தவும். இப்போது கரப்ட் பைல் எந்த டைரக்டரி அல்லது போல்டரில் உள்ளதோ, அங்கு சென்று அந்த பைலின் பெயரில் சிங்கிள் கிளிக் செய்து, ஓப்பன் விண்டோவில் கீழாக வலது பக்கம் பார்க்கவும். அங்கு Open  என்ற இடத்தில் சிறிய கீழ் நோக்கிய அம்புக்குறி இருக்கும். அதனைக் கிளிக் செய்தால் கிடைக்கும் சிறிய மெனுவில் Open and Repairஎன்று ஒரு பிரிவினைக் காணலாம். இதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது பைல் சரி செய்யப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கை எதிர்பார்த்த விளைவினைத் தரவில்லை என்றால் மீண்டும் Open Dialogue Box ஆணிது செல்லவும். கரப்ட் ஆன பைலைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Files of type  என்ற இடத்தில் கீழ் விரி அம்புக் குறியினைத் திறந்து கிடைக்கும் மெனுவில் 'Recover text from any file' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நிச்சயம் உங்கள் பைலில் உள்ள டெக்ஸ்ட்டாவது உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. இதில் ஏற்கனவே நீங்கள் ஏற்படுத்திய பார்மட்டிங் சமாச்சாரங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, டெக்ஸ்ட் மட்டுமே கிடைக்கும். ஒன்றுமே இல்லாததற்கு இது பரவாயில்லை அல்லவா!
வேர்டில் தனி பாண்ட் மெனு:
வேர்ட் தொகுப்பின் மெனு பாரில், நேரடியான செயல்பாடுகளுக்குப் பல மெனுக்கள் இருந்தாலும், எழுத்துரு பைல்களைக் கொண்டிருக்கும் போல்டருக் கென பாண்ட்ஸ் மெனு தனியே இல்லை. ஏனென்றால் இதனை நாம் அடிக்கடி கிளிக் செய்து பார்ப்பதில்லை. ஆனால் ஒரு சிலர் இதனை அடிக்கடி அணுகிப் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு பாண்ட்ஸ் என்று தனியே ஒரு மெனுவினை, கிளிக் செய்தால் கிடைக்கும், பைல்ஸ், டேபிள் மெனுக்கள் போல, அமைத்தால் எளிதாக இருக்கும் அல்லவா! அதற்கான வழிகளை இங்கு காணலாம்.
1. வேர்ட் தொகுப்பினைத் திறந்து கொள்ளுங்கள். பின் Tools மெனு சென்று Customize  பிரிவைத் தேர்ந்தெடுங்கள். வேர்ட் Customize dialog box னைக் காட்டும்.
2. இதில் Commands என்னும் டேப் கிளிக் செய்திடவும்.
3. இங்கு Categories  என்னும் பட்டியலில் உள்ளவற்றில் Builtin Menu என்பதைத் தேர்ந்தெடுக் கவும்.
4. Commands என்னும் பட்டியலில் Fonts  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இப்போது Fonts என்னும் ஆப்ஷனை, மவுஸால் பிடித்து இழுத்து, உங்கள் மெனு பாரில் எங்கு பாண்ட்ஸ் மெனு வேண்டுமோ அங்கு விட்டுவிடவும்.
6. அடுத்து Close என்பதில் கிளிக் செய்திடவும்.


source:dinamaalr


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails