
லேப்டாப்பில் கீ போர்டினைப் பயன்படுத்து பவர்களுக்கு அடிக்கடி எழும் பிரச்னை, அவர்கள் விரல் அல்லது கைகளின் அடிப்புறம், டச்பேடில் தாங்கள் அறியாமலே அழுத்தப்பட்டு, டெக்ஸ்ட் கர்சர் இழுத்துச் செல்லப்படுவதுதான். சில லேப்டாப்களில், டச்பேட் அருகேயே ஒரு சிறிய ஸ்விட்ச் தரப்பட்டு, அதனை இயக்கினால், டச்பேட் இயக்கம் நிறுத்து வகையில் அமைக்கப் பட்டிருக்கும். ஆனால் பல லேப்டாப் மாடல்களில் இந்த ஸ்விட்ச் தரப்பட்டி ருக்காது. இதற்கு சாப்ட்வேர் புரோகிராம்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. அவை குறித்து ஏற்கனவே இந்த பகுதியில் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஒரு புரோகிராம் இணைய தளத்தில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பெயர் டச்பேட் பால் (Touchpad Pal) இது டச்பேடைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கும் பணியினைச் சிறப்பாக மேற்கொள்கிறது. இதனை இன்ஸ்டால் செய்து இயக்கிவிட்டால், டெக்ஸ்ட்டினை கீ போர்ட் மூலம் உள்ளிடுகையில், தானாகவே டச்பேடின் இயக்கத்தினை நிறுத்திவிடுகிறது. இதனால், டச்பேடில் நம்மை அறியாமலேயே விரல்கள் பட்டு, கர்சர் இழுத்தடிக்கப்படுவது நடைபெறுவதில்லை. இந்த மாற்றத்தினை, இந்த புரோகிராம், சிஸ்டம் ட்ரேயில் தெரிவிக்கிறது. டச்பால் புரோகிராமினை விண்டோஸ் 16 மற்றும் 32 பிட் சிஸ்டம் புரோகிராம்களில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 தொகுப்புகளிலும் இயங்குகிறது. மெமரியில் 10 எம்பி இடத்தை மட்டுமே எடுத்துக் கொள்கிறது. இதனை இலவசமாகப் பெறhttp://tpp.desofto.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்
No comments:
Post a Comment