Friday, February 29, 2008

திருத்தீட்டானுங்கையா துருட்த்திட்டானுங்க

அல்லாவின் வார்த்தைகளை திருத்தபோகும் இஸ்லாமிய உலகம்

உமர் குறிப்பு: எனக்கு ஒரு சகோதரர் இந்த செய்தியை அனுப்பி, இதை மொழிபெயர்த்து பதிக்கும் படி கேட்டுக்கொண்டதின் பேரில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது மேலோட்டமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, எந்த கேள்விக்கும் ஆங்கில மூலம் தான் ஆதாரம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த செய்திக்கு என் கருத்தை கட்டுரையின் கடைசியில் கொடுத்துள்ளேன்.

Turkey strives for 21st century form of Islam
21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாமுக்காக போராடுகிறது துருக்கி தேசம்

1. ஷரியா சட்டத்தை திருத்தி எழுதவும் மற்றும் குர்‍ஆனை வரையறைக்கவும் முடிவு
2. இஸ்லாமிய நம்பிக்கையின் மற்றும் மேற்கத்திய கோட்பாடுகளின் உருகுநிலை

ஆசிரியர்: Ian Traynor, Europe editor
பத்திரிக்கை: The Guardian,
செய்தி வெளிவந்த நாள்: Wednesday February 27 2008

துருக்கி தேசம் மிகவும் தைரியமாக ஷரியா சட்டத்தின் அடிப்படையை திருத்தி எழுத முயற்சி எடுத்துள்ளது. அதே நேரத்தில் இந்த நவீன காலத்திற்கு ஏற்றாற்போல அதிகாரபூர்வமாக "குர்‍ஆனின் வசனங்களுக்கு புதிய விளக்கத்தை(Quran Re-interpretation)" கொடுக்க முயற்சி எடுத்துள்ளது.

துருக்கி நாட்டில் அமைதியான இஸ்லாமிய அரசாங்கம் நடத்திக்கொண்டு இருக்கும் பிரதம மந்திரி " Recep Tayyip Erdogan" என்பவர் "இஸ்லாய சட்டத்துறையில்" நவீன கால கோட்பாடுகளுக்கேட்ப சீர்திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார். 21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாமை உருவாக்குவோம் என்றுச் சொல்லி, ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய கோட்பாடுகள், தத்துவங்கள் மூலமாக இஸ்லாமிய நம்பிக்கையையும், பாரம்பரியத்தையும்(ஹதீஸ்) சிறிது தாழ்வான நிலைக்கு கொண்டுவர முயற்சி எடுத்துள்ளார்.

இதன் பயனாக, மிகவும் ஆர்வமான இந்த சோதனையை செய்யஇருக்கும் நிபுனர்கள், "பெண்களுக்கு எதிராக உள்ள வேறுபாடு காணும் இஸ்லாமிய கண்டிப்பை குறைப்பார்கள் என்றும்", இஸ்லாமிய சட்டத்தில் உள்ள சில மிகவும் கடினமான தண்டனைகளாகிய கல்லெரிந்து கொல்லுதல், கைகள் கால்களை வெட்டி எடுத்துவிடுதல்(amputation) போன்ற தண்டனைகளை இரத்து செய்வார்கள் என்றும் தெரிகிறது. இஸ்லாம் நவீன கால மார்க்கம் என்பதை வரையறை வகுப்பார்கள் என்றும் தெரிகிறது. ஐரோப்பிய ஐக்கியத்தில்(European Union) அங்கம் வகிக்கவேண்டும் என்ற ஆர்வத்தால், மத்திய கிழக்கு நாடுகளின் மீது சார்ந்துக்கொண்டு, மேற்கத்திய நாடுகளுக்கும் கிழக்கத்திய நாடுகளுக்கும் இடையில் மையமாக உள்ள துருக்கி நாடு முடிவு செய்துள்ளது.

அங்காரா பல்கலைக்கழகத்தின்(Ankara University) இஸ்லாமிய அறிஞர்களின் தீர்த்திருத்த குழு, மத இலாகாவின் இயக்குனரின் கீழ் வேலை செய்யப்போகிறார்கள். இந்த மத இலாகா ஒரு அரசாங்க பிரிவாகும் இது துருக்கி நாட்டில் உள்ள 8000 மசூதிகளை மேற்பார்வையிடுகிறது, மட்டுமல்லாமல் "இமாம்களை" நியமிக்கிறது. இஸ்லாமிய சட்டதுறைக்கும், ஷரியா சட்டத்திற்கும் அடிப்படையாக உள்ள "ஹதீஸ்களின்" பல வசனங்களுக்கு "புதிய விளக்கத்தை அல்லது மறுவிளக்கத்தை (ReInterpretation)" கொடுப்பார்கள், மட்டுமல்லாமல், முகமது நபி அவர்களைப் பற்றி சொல்லப்பட்ட ஆயிரமாயிரமாக உள்ள செய்திகளுக்கும்(aphorisms), அபிப்பிராயங்களையும்(comments) குறித்து உண்மையான விளக்கத்தை கொடுக்கப்போகிறார்கள். மறுபரிசீலனை செய்துக்கொண்டு இருக்கும் ஒரு குழுவில் அங்கம் வகிக்கும் முஸ்தபா அக்யோல் சொல்லும் போது "நாங்கள் கிட்டத்தட்ட எங்கள் வேலையை முடித்துவிட்டோம்" என்றார். இவர் எர்டகோனின் ஆளும் கட்சியின் "விடுதலை முகாம் (Liberal Camp)" பற்றி விமர்சனம் செய்தவர்.

இவர் சொல்கிறார் "அவர்களுக்கு பெண்கள் சம்மந்தப்பட்ட, அதாவது பெண்களுக்கு எதிராக உள்ள ஹதீஸ்கள் பற்றி பிரச்சனை உள்ளது. அவர்கள் இப்படிப்பட்ட ஹதீஸ்களை தொகுப்புகளிலிருந்து நீக்கிவிடக்கூடும், மற்றும் இவ்வித ஹதீஸ்கள் "அதிகார பூர்வமற்றது" என்று அறிவிக்கக்கூடும். இப்படி செய்வது மிகவும் "தைரியமான" செயல் தான். அல்லது, இவ்வித ஹதீஸ்களின் கீழே சில "பின் குறிப்புகளை" கொடுத்து, இந்த ஹதீஸ்களை வேறு வகை சரித்திர கண்ணோட்டத்தில் படித்து புரிந்துக்கொள்ளவேண்டும் என்று எழுதக்கூடும்".

"International Institute of Strategic Studies" என்ற நிறுவனத்தில் வேலை செய்யும் "Fadi Hakura" என்ற துருக்கி நிபுனர் இந்த திட்டத்தைப் பற்றி விவரிக்கும் போது, "இது துருக்கி சுன்னி இஸ்லாமை இப்போதுள்ள சமூக மற்றும் நன்னெறி சார்ந்த வழிகளுக்கு முழுவதும் ஒத்துப்போவதாக" மாற்றும் திட்டம் என்று கூறினார்.

"அவர்கள் இதை ஒரு புரட்சி(Revolution) என்று பார்க்க மாட்டார்கள், ஆனால், உண்மை இஸ்லாமுக்கு(Original Islam) திரும்புவதாக கருதுவார்கள், கடந்த பல நூற்றாண்டுகளாக மிகவும் அளவுக்கு அதிகமாக தீவிர நிலையிலிருந்து மறுபடியும் திரும்புவதாக கருதுவார்கள். இது ஒரு வகையில் "கிறிஸ்தவ சீர்திருத்தம்" போல தோன்றினாலும், இவை இரண்டும் ஒன்று அல்ல."

Ali Bardokoglu அவர்களின் தலைமையில், இஸ்லாமிய நிறுவனங்களை மேற்பார்வையிடுகிறவர்களும், 'Erdogan' வினால் நியமனம் செய்யப்பட்டவர்களாகிய, இஸ்லாமிய விடுதலை அறிஞர்களும், அங்காரா பல்கலைக்கழக தத்துவ அறிஞர்களும் சேர்ந்து "ஐந்து தொகுப்புகள் அடங்கிய ஒரு புதிய புத்தகத்தை" எழுத உள்ளனர். இந்த தொகுப்பில், "குர்‍ஆனுக்கு ஒரு புதிய உரையை கொடுக்கப்போகிறார்கள், பரிசுத்த வசனங்களை எந்த குறையும் இல்லாமல், அந்த வசனம் என்ன சூழ்நிலையில், எந்த இடத்தில் சொல்லப்பட்டது என்று வேர் வரை சென்று, புதிய செய்தியை இந்த காலத்து முஸ்லீம்களுக்கு ஏற்றதாக கொடுக்கப்போகிறார்கள். அவர்கள் தவறான(Ditching) சில ஹ‌தீஸ்களை கண்டுபிடிக்கப்போகிறார்கள், இந்த ஹதீஸ்கள் நபி அவர்கள் சொன்னார்கள் என்று நபி அவர்கள் மரித்த பல நூற்றாண்டுகளுக்கு பின்பு சேர்க்கப்பட்டது.

துருக்கியில் உள்ள ரோமன் கத்தோலிக்க சபை குழுவின் நிபுனர்(Roman Catholic Jesuit expert) மற்றும் இஸ்லாமில் நிபுனத்துவம் பெற்ற பீலிக்ஸ் கோர்னெர்(Felix Koerner) இந்த அங்காரா பேராசிரியர்களோடு ஒத்துழைக்கிறார். இவர் மேற்கத்திய மதங்கள் பற்றியும், தத்துவ கோட்பாடுகள் பற்றியும் இவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார். மற்றும் கிறிஸ்தவ சீர்திருத்தத்தின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களை எப்படி இந்த நவீன இஸ்லாமில் புகுத்தலாம் என்பதை இவர் சொல்லிக்கொடுக்கிறார். "இது நவீன ஐரோப்பிய எண்ணங்களையும் மற்றும் இஸ்லாமிய ஒட்டமன் குர்‍ஆனின் பாரம்பரியங்களையும் சேர்த்த கலவையாகும்" என்றார். "இதில் அரசியல் நோக்கமும் உண்டு, இந்த அரசாங்கத்திற்கு நவீன தத்துவங்களில் அதிக நம்பிக்கையுண்டு" என்றார்.

அரசியல் சாசனம்படி துருக்கி ஒரு மதசார்பற்ற நாடு. எர்டொகன் தன் கட்சியைப் பற்றி சொல்லும் போது, ஐரோப்பிய கிறிஸ்தவ ஜனநாயக கட்சிக்கு (European Christian democratic party ) சமமாக தன் "எகே கட்சி (AK Party)" உள்ளது என்கிறார். இக்கட்சி பழமைவாத கட்சியாக இருந்தாலும், மத கோட்பாடுகளுக்கு முக்கியத்தும் கொடுத்த கட்சியாக இருந்தாலும், ஜனநாயகத்தையும், சகிப்புத்தன்மையையும், சுதந்திரத்தையும் நம்புகின்ற கட்சி என்கிறார். ஸ்பெயின் உதவியுடன், மற்றும் ஜபடெரோ அரசாங்கத்தின்(Zapatero government) உதவியுடன் "முஸ்லீம்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும்" இடையே ஒரு நல்ல உறவு முறையை உருவாக்கும் முயற்சி தான் இது. பல ஆண்டுகளாக போராடி தீவிர மதசார்பற்ற நாடாகிய துருக்கியில், மேற் படிப்பு கல்லூரிகளில் பெண்கள் துணியால் தலையை சுற்றி மூடிக்கொள்வதற்கு இருந்த தடையை இவர் நீக்கிவிட்டார். அதாவது பெண்கள் இனி கல்லூரிகளுக்கு தங்கள் தலையை மூடிக்கொண்டு (முகத்தை மறைக்காமல்) செல்லலாம். இவரது பல எதிர்கட்சிக்காரர்கள், இது மதசார்பற்ற துருக்கி கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமுக்கு சாய்ந்துப்போகிறது என்று குற்றம் சாட்டினார்கள்.

பலரின் கருத்துப்படி, இந்த இஸ்லாமிய சீர்திருத்த திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது, மற்றும் இது அடிப்படையானது, இது முடிவடைய பல ஆண்டுகள் பிடிக்கும் என்றனர். இந்த திட்டம் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது, அதாவது, மரண தண்டனை இரத்து செய்யப்பட்டது, பெண்களுக்கு எதிராக நடக்கும் "கவுரவ கொலைக்கு – Honour Killing" எதிராக பல முயற்சிகள் எடுக்கப்படுகிறது மற்றும் பல நூறு பெண்களை இமாம்களாக மாற்றுவதற்கு பயிற்சியும் நியமனமும் கொடுக்கப்படுகிறது.

சிறு குறிப்பு: ஹதீஸ்கள் என்பதி முகமது நபியின் மற்றும் அவரது தோழர்களின் வாழ்க்கை பற்றிய விவரங்கள் ஆகும். இது மத சடங்குகளுக்கும், சட்டத்திற்கு, சரித்திர சரிதைகளுக்கும் மூலமாக திகழுகிறது. நபி என்ன சொன்னாரோ, செய்தாரோ அதைத் தான் ஹதீஸ் என்கிறோம். பெரும்பான்மையான முஸ்லீம்கள் குர்‍ஆனை புரிந்துக்கொள்வதற்காக அடுத்தபடியான முக்கியமான‌ புத்தகங்களாக ஹதீஸ்களை கருதுகின்றனர். இஸ்லாமிய கோட்பாடுகளின்படி ஒரு மனிதனின் நடத்தை எப்படி இருக்கவேண்டும் என்று வழிமுறையை பரிசுத்த புத்தகமாகிய குர்‍‍ஆன் சொல்கிறது, ஆனால், அந்த குறிப்பிட்ட நடத்தை என்ன என்பதைப் பற்றி குறிப்பாக குர்‍ஆன் சொல்வதில்லை. ஷரியா அல்லது இஸ்லாமிய சட்டத்தை வகுப்பதில் ஹதீஸ்களின் பங்கு 90% உள்ளது. இதில் முக்கியமானவைகள் என்று சொல்லவேண்டுமானால், மிகவும் விமர்சனத்திற்கு உட்படும் இஸ்லாமிய தண்டனைகளாகிய "விபச்சாரத்திற்கும், இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களுக்கும் கொடுக்கும் தண்டனைகளும், பெண்கள் பற்றிய சட்டங்கள், மற்றும் ஜிஹாத் பற்றிய கோட்பாடுகளும் பெரும்பான்மையாக ஹதீஸ்களிலிருந்து வருகிறது.

Source: http://www.guardian.co.uk/world/2008/feb/27/turkey.islam

=============தமிழாக்கம் முற்றிற்று===========================

இந்த செய்தி குறித்து உமரின் கருத்து:

Quote:
செய்தி:
=====

துருக்கி அரசாங்கமே, ஏன் உங்களிடம் இந்த 14 நூற்றாண்டுகளாக "குர்‍ஆனுக்கு" சரியான விளக்கம் இல்லையா? உங்களிடம் தான் "பழைய குர்‍ஆன்" இருக்கின்றதே, உங்களுக்கே குர்‍ஆனின் வசனங்கள் புரியாமல், இந்த 21ம் நூற்றாண்டில் ஒரு புதிய விளக்கம் தேவைப்படுகிறதா? இல்லை, சீர்திருத்துகிறேன் என்ற போர்வையில், மதசார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்கின்ற துருக்கியில் , தீவிர இஸ்லாமிய நாடாக மாற்ற திட்டமா?

எதற்கு நவீன கோட்பாடுகளை "இஸ்லாமிய சட்டத்துறையில்" கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் உதித்தது? இஸ்லாமிய சட்டம் தான் இறைவனாகிய அல்லா கொடுத்தது தானே? இது எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்றல்லவா எங்களுக்கு இஸ்லாமிய அறிஞர்களால் அறிமுகப்படுத்தப்படுகிறது?

அது என்ன 21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாம்? அப்படியானால், ஒவ்வொரு நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாம் உள்ளதா? அல்லது காலத்திற்கு ஏற்றாற் போல நீங்களாகவே புதிய சட்டங்களை புகுத்திக்கொள்கிறீர்களா? உலக இஸ்லாமிய அறிஞர்கள் 7ம் நூற்றாண்டில் சொல்லப்பட்ட இஸ்லாம் சட்டம் எக்காலத்திலும் பொருந்தும் என்று பெருமைப்படுகிறார்கள்? நீங்கள் என்னடா என்றால், 21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாம் என்றுச் சொல்கிறீர்கள்?

Quote:
செய்தி:
=====
இஸ்லாமிய சட்டத்தில் உள்ள சில மிகவும் கடினமான தண்டனைகளாகிய கல்லெரிந்து கொல்லுதல், கைகள் கால்களை வெட்டி எடுத்துவிடுதல்(amputation) போன்ற தண்டனைகளை இரத்து செய்வார்கள் என்றும் தெரிகிறது.

ஏன் இரத்து செய்யவேண்டும், 14 நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்ட இஸ்லாமிய சட்டத்தின் தண்டனைகள் தவறு என்று முடிவு கட்ட உங்களுக்கு 1400 ஆண்டுகள் தேவைப்பட்டதா?

இந்த புதிய சட்டத்தில் 'தண்டனைகளை தளர்த்துகிறோம்" என்றுச் சொல்லி, திருடனின் இரண்டு கைகளுக்கு பதிலாக இரண்டு விரல்களை வெட்டுவீர்களோ? கல்லெரிந்து கொல்வதற்கு பதிலாக வில்லெரிந்து கொல்வீர்களோ?

பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டும், இன்னும் "இந்த ஹதீஸ் அதிகாரபூர்வமற்றது" என்று சொல்லிக்கொண்டு இருப்பதை விட, அதற்கு ஒரு புதிய அர்த்தத்தை கொடுப்பதை விட, மனிதனாக சிந்தித்து முடிவு எடுக்கலாம் இல்லையா?

ஏனய்யா? இத்தனை ஆண்டுகள், நூற்றாண்டுகள், "துருக்கி சுன்னி இஸ்லாம்", சமுதாயத்திற்கும் நன்னேறிக்கு ஒத்துப்போகலையா? அப்படியானால், சமுதாயத்திற்கு ஏற்காத சட்டத்தையா இந்த ஆண்டுகள் பின்பற்றினீர்கள்? உங்களுக்கு இப்படிச் சொல்ல மனதிற்கு சஞ்சலமாக இல்லை?

நடக்கட்டும், உண்மை இஸ்லாம் என்றால் என்ன என்பதை உங்கள் புதிய சட்டம் வெளிவந்தபிறகு தானே தெரியும்? உங்கள் புதிய சட்டங்களும், மற்ற இஸ்லாமிய நாடுகளின் சட்டங்களும் ஒன்றா அல்லது வேறுவேறா என்பதை அப்போது தெரிந்துக்கொள்வோம்.

Quote:
செய்தி:
=====
அங்காரா பல்கலைக்கழக தத்துவ அறிஞர்களும் சேர்ந்து "ஐந்து தொகுப்புகள் அடங்கிய ஒரு புதிய புத்தகத்தை" எழுத உள்ளனர். இந்த தொகுப்பில், "குர்‍ஆனுக்கு ஒரு புதிய உரையை கொடுக்கப்போகிறார்கள், பரிசுத்த வசனங்களை எந்த குறையும் இல்லாமல், அந்த வசனம் என்ன சூழ்நிலையில், எந்த இடத்தில் சொல்லப்பட்டது என்று வேர் வரை சென்று, புதிய செய்தியை இந்த காலத்து முஸ்லீம்களுக்கு ஏற்றதாக கொடுக்கப்போகிறார்கள்.

இந்த 14 நூற்றாண்டுகளாக உலக இஸ்லாமிய அறிஞர்கள், இமாம்கள், பேராசிரியர்கள் குர்‍ஆனுக்கு சொல்லப்பட்ட "உரை" தவறு என்று சொல்கிறீர்களா? இவர்கள் சொல்லியுள்ள உரையில் ஒன்று கூடவா "துருக்கி அரசாங்கத்திற்கு" சரியானது என்று தெரியவில்லை? அப்படியானால், இதுவரை சொல்லப்பட்ட எல்லா உரைகளும் பொருள்களும், அர்த்தங்களும் சரியானது அல்ல என்பதா உங்கள் கருத்து? சரி, நீங்கள் வேர் வரை சென்று உரை சொல்லுங்கள் பார்க்கலாம்?

உங்களுக்கு தேவைப்பட்டால், எங்கள் தமிழ் நாட்டில் புகழ் பெற்ற இரண்டு குர்‍ஆன் மொழிப்புக்கள் உள்ளது, நம் இஸ்லாமிய அறிஞர் பி.ஜைனுல் ஆபீதீன் அவர்கள் பல புதுமைகளை தன் மொழிபெயர்ப்பில் கொண்டு வந்துள்ளார், இவருடைய மொழிபெயர்ப்பை முயற்சித்துப்பாருங்களேன்.

உங்கள் புதிய உரையில், பெண்களை விண்வெளிக்கு அனுப்புவது சட்டத்திற்கு ஏற்றது என்று சொல்லப்போகிறீர்களா? அல்லது "நீ உன்னை நேசிப்பது போல, உனக்கு அடுத்துள்ள முஸ்லீமை மட்டுமல்ல, மற்ற எல்லா மத மனிதர்களையும் நேசிப்பாயாக!" என்ற புதிய கட்டளையை கொடுக்கப்போகிறீர்களா? இப்படி சொல்வீர்களானால், இதை விட உலகத்திற்கு வேறு என்னவேண்டும் சொல்லுங்கள்?

Quote:
செய்தி:
=====
துருக்கியில் உள்ள ரோமன் கத்தோலிக்க சபை குழுவின் நிபுனர்(Roman Catholic Jesuit expert) மற்றும் இஸ்லாமில் நிபுனத்துவம் பெற்ற பீலிக்ஸ் கோர்னெர்(Felix Koerner) இந்த அங்காரா பேராசிரியர்களோடு ஒத்துழைக்கிறார். இவர் மேற்கத்திய மதங்கள் பற்றியும், தத்துவ கோட்பாடுகள் பற்றியும் இவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார். மற்றும் கிறிஸ்தவ சீர்திருத்தத்தின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களை எப்படி இந்த நவீன இஸ்லாமில் புகுத்தலாம் என்பதை இவர் சொல்லிக்கொடுக்கிறார்.

ஒரு காபிரிடம் அறிவுரை கேட்கிறீர்களே, உங்களுடைய சட்டம் இதை அனுமதிக்குமா? "வேத அறிவு உடையவர்களிடம் சென்று உங்களுக்கு புரியாததை கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்" என்று அல்லா கட்டளையிட்டதை இப்போது தான் பின்பற்ற எண்ணம் பிறந்ததோ? அதுவும் ஷரியா சட்டம் பற்றி , அதில் புகுத்தவேண்டிய சட்டங்கள் பற்றி ஒரு காபிரிடம் கேட்டு தெரிந்துக்கொள்வது என்பது உங்கள் மனது ஏற்றுக்கொள்கிறதா?

எப்படியோ இஸ்லாம் மூலமாக உலகத்திற்கு நல்லது நடந்தால் யார் வேண்டாமென்றுச் சொல்வார்கள்?
http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=11001#11001

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails