Monday, February 11, 2008

பெரியாருக்கே வெங்காயமா?

பெரியார் என்ன கடவுளா? அல்லது பகுத்தறிவு என்ன வெங்காயமா?

வால் பையன் எழுதியதுகோ!!!!!

 

சில நாட்களுக்கு முன்பு இது தான் உண்மை என்ற வலைப்பூவில் பெரியார் ஆதி திராவிடர்களை இஸ்லாம் மதத்துக்கு மாற சொன்னதாக எழுதியிருக்கிறார்கள்,
அதற்கு பெரியார் சொன்ன காரணம் இஸ்லாம் மதத்தில் ஜாதி அடிபடை இல்லை என்று.

ஆனால் மனிதனை நேசி என்ற வலைப்பூவில் இஸ்லாம் மதம் பெண்களை மதிப்பதில்லை என்று எழுதியிருக்கிறார்கள். இதற்கு தமிழ் இஸ்லாம் வலைப்பூவில் பிறகு ஏன் பெரியார் இஸ்லாம் மதத்துக்கு திராவிடர்களை மாற சொன்னார் என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

எனது சந்தேகம் பெரியார் ஆசைப்பட்ட பகுத்தறிவு உண்மையில் வளர்கிறதா என்பது தான்!
பகுத்தறிவு என்றால் என்ன? கேள்வி கேள் என்பது தானே! சொன்னது பெரியாராக இருந்தாலும் ஏன் இதை நான் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழ வேண்டும் அல்லவா!
ஆனால் பெரியாரை கடவுளாகவே மாற்றும் திட்டம் அல்லவா இங்கே நடந்து கொண்டு இருக்கிறது.

பெரியார் ஆசை பட்டது மக்களிடம் விழிப்புணர்வு.
ஜாதி மத பேதமில்லாத சமநிலை. பெரியாரை பற்றி படிக்கும் முன்னறே மத அடிப்படையில் நம்பிக்கை இல்லாத நான். சிறு வயதிலிருந்தே சாமி கும்பிட மாட்டேன் என்று வீட்டில் சண்டை போட்டிருக்கிறேன், அப்பொழுது இவன் என்ன பெரியார் மாதிரி பேசுறான் என்ற வார்த்தையால் ஈர்க்க பட்டு தான் பெரியாரை படித்தேன், ஜாதி மத கொள்கைகளில் என்னை போலவே அவரும் நம்பிக்கையற்று இருந்தார் என்பதற்காக அவரை முழுமையாக ஏற்கவோ அவரின் கொள்கைகளை பரப்புவதற்கோ என்ன இருக்கிறது.யாருக்காவது வாழ்க கோஷம் போடுவதோ, ஒழிக கோஷம் போடுவதோ ஆட்டு மந்தை கூட்டம் அல்லவா! இதையா பெரியார் விரும்பினார்.

மூட நம்பிக்கை என்பது ஏதாவது ஒன்றை பிடித்து தொங்கி கொண்டிருப்பது! பெரியாரின் கொள்கைகளை மட்டுமே பிடித்து தொங்கி கொண்டிருப்பதற்கு வேறு என்ன பெயர் இருக்க முடியும். கடவுள் நம்பிக்கை என்பது நம்முடைய தனிப்பட்ட சுதந்திரம்!
என்னிடம் யாராவது வந்து கடவுள் இருக்கிறார் என்று வாதம் செய்தால் இல்லை என்று வாதிட எனக்கு உரிமை உண்டு. வாதிட மட்டுமே சண்டை போட அல்ல. கடவுளை பற்றிய வாதம் முடிவில்லாதது என்றும் அனைவருக்கும் தெரியும், இருந்தும் ஏன் அதில் நேரத்தை செலவிட்டு செய்ய வேண்டிய வேலைகளை புறக்கணிக்க வேண்டும்.

ஆன்மிக வாதியான விவேகானந்தர் கூட மதவாதிகள் கிணற்று தவளைகள் என்று குறிப்பிட்டு உள்ளார். கடலில் இருப்பவர் நாம். நாம் அனுபவிக்க கடலில் நிறைய இருக்கிறது. அதை விட்டுவிட்டு கிணற்றில் குதித்து சண்டை போடுவது தேவையா?

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails