Wednesday, February 6, 2008

8 லட்சம் முஸ்லீம்கள் கிறிஸ்துவர்களாக மதம் மாறியுள்ளனர்

8 லட்சம் முஸ்லீம்கள் கிறிஸ்துவர்களாக மதம் மாறியுள்ளனர்

பதிப்பது எழில்லிடம் இருந்து:http://ezhila.blogspot.com/2008/02/8.html

 

 

பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் கிறிஸ்துவ மதம் வெகு வேகமாக பரவி வருகிறது. ஏராளமான முஸ்லீம்கள் மதம் மாறி கிறிஸ்துவ மதத்தை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானத்தில் 3 லட்சம் பேரும் பாகிஸ்தானில் .5 மில்லியன் பேரும் கிறிஸ்துவ மதத்துக்கு மதம் மாறியுள்ளனர் என்று ச்மரசம் பத்திரிக்கை தெரிவிக்கிறது.

நன்றி சமரசம்

--
முஸ்லிம்களை மதம் மாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள்!

"சுதந்திரத்திற்கான போர்" எனும் போர்வையில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவின் தாக்குதல்கள், பார்ப்பதற்கு மற்ற போர்களைப் போன்று தோன்றினாலும் திரைமறைவில் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ பிரச்சாரகர்கள் வெளிப்படையாகத் தங்களது நிர்மாணிக்கப்பட்ட இலக்கிற்காக மிகவும் முனைப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

ஜூலை மாதத்தில் (2007) தாலிபான், தென்கொரியாவைச் சேர்ந்த 21 நபர்களைக் கைது செய்த போதுதான் இவ்வுண்மை முதன் முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. மக்கள் சேவை செய்வதற்கென்றே இவர்கள் பணியாற்றுவது போன்று வெளியுலகிற்குத் தெரிந்தாலும் தாலிபான் அரசின் முடிவிற்குப் பிறகு 2001 லிருந்தே இந்த கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.



கைதானவர்கள் தாங்கள் சர்வதேச சேவை அமைப்பான (Shaltarnaw) 'ஷல்டர்னாவ்'வுக்காக செயல் புரிவதாக ஒப்புக் கொண்டனர், இந்த அமைப்பானது மேற்குலகின் பலமான கிறித்தவ இயக்கமாகும், இது ஆப்கானிஸ்தானில் 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



தென்கொரியாவைச் சேர்ந்தவர்களே இதில் பெரும்பாலோர் உள்ளனர், இவ்வமைப்பானது கடந்த 5 ஆண்டுகளில் பெரும் எண்ணிக்கையிலான ஆண்களையும், பெண்களையும் சேவைக்கென்று ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. இவர்கள் அங்கு கிறிஸ்தவ இலக்குகளை அடைய மிகப் பெரும் பங்காற்றியுள்ளனர்.



தாலிபான் அமைப்பு 2006 ல் இதே போன்ற ஒரு இத்தாலியக் குழுவைக் கைது செய்தது, இக்குழு ஓர் ஆப்கானிய நபரை (அப்துர் ரஹ்மான்) கிறிஸ்தவராக மாற்றி பிலிப்பைனுக்குக் நாடு கடத்தியது. இவர்களை (குழு) விடுதலை செய்ய வேண்டுமெனில் அந்நபரை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு வர வேண்டும் என்று தாலிபான் கேட்டுக் கொண்டது, ஆனால் இதில் வெற்றி கிடைக்கவைல்லை, 'ஷல்டர்னாவ்' போன்ற மற்ற கிறிஸ்தவ இயக்கங்கள் மருத்துவமனைகளை அமைத்தல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல் மூலம் கிறிஸ்தவப் பிரச்சாரத்துக்காக பல்வேறு விதமான நூல்களை மக்களிடையே விநியோகம் செய்கின்றன. இச்சேவை அமைப்புகள் அயராது உழைத்து நிறைய பேரை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றியுள்ளன. இவர்களின் முக்கிய இலக்கு போரில் காயம்பட்டு இவர்களுடைய மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளே.



ஆப்கனின் பல்வேறு இனத்தலைவர்கள் அதிபர் ஹாமித் கர்சாயியைச் சந்தித்து, இந்தச் சேவை அமைப்புகள் சேவை எனும் போர்வையில் கிறிஸ்தவக் கலாச்சாரத்தையும், குடியையும் வளர்ப்பதாக முறையிட்டனர், அவரோ இவர்களின் நன்மையளிக்கும் செயல்கள் தீமையான செயல்களைக் காட்டிலும் அதிகம் எனக் கூறி எந்த வித நடவடிக்கையும் எடுப்பதை நிராகரித்து விட்டார்.



1) வழிமுறைகள்



இக்கிறிஸ்தவ அமைப்புகள் இஸ்லாமியப் பெண்களுக்கு மேலைக் கல்வியைப் புகுத்துவதுடன் அவர்களை மதம் மாற்றவும் முயற்சிகளை மேற்கொள்கின்றன, பெண் 'தாய்' என்பதாலும் அவளே குழந்தைகளை வளர்க்க வேண்டியவள், பயிற்சியளிக்க வேண்டியவள் என்பதாலும் அவர்களைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதன் மூலம் முழு சமூகத்தையும் கிறிஸ்தவர்களாக்கி விடலாம் என்பதாலேயே இம்முயற்சிகள்.




2) அநாதைகளுக்கான கல்வி நிறுவனங்கள்



இவ்வமைப்புகள் அநாதைக் குழந்தைகளுக்காக பல்வேறு கல்வி நிறுவனங்களை நிறுவுவதுடன் தத்தம் அமைப்புகளில் பணிபுரிந்த, மேற்கத்திய கல்வி பயின்ற பெண்களையே இக்கல்வி நிறுவனங்களில் பணிக்கு அமர்த்துகிறது.




3) உடல் நலம்



இவ்வமைப்புகள் உடல் நலம் மற்றும் சிகிச்சை எனும் பெயரில் குழந்தைப் பிறப்பை தடை செய்வதற்காக பயிற்சி பெற்ற பெண்களின் குழுக்களை அமைக்கின்றன. இப்பெண்கள் ஆப்கானிஸ்தானிய பெண்களிடையே கருத்தடை மாத்திரைகளை விநியோகம் செய்கின்றனர், இது மட்டுமன்று, ஆப்கானிய பெண்களின் ஏழ்மைக்கும் , அறியாமைக்கும் காரணம் பர்தாவே என்றும் வலியுறுத்துகின்றனர். மேலும் ஆப்கான் பெண்களுக்கு 'சிலுவை'யுடன் கூடிய மாலையை விலை மதிப்புமிக்க அணிகலனாக விநியோகிக்கின்றன.




4) முஹாஜிர்கள் முகாம்



கடினமான காலநிலை, உணவுப் பற்றாக்குறை போன்ற சூழ்நிலைகளில் பல்வேறு முகாம்களில் உணவுப் பொருட்களை விநியோகிப்பதுடன் 'பஷ்து' மொழிபெயர்ப்புடன் (ஆப்கானிய மொழி) கூடிய பைபிளையும் பலவிதமான கிறிஸ்தவ நூல்களையும் விநியோகிக்கின்றன.




5) ஒத்துழைப்போருக்கு வேலை வாய்ப்பு



இச்சர்வதேச மேற்குலகக் கம்பெனிகள் தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்போர் மற்றும் கிறிஸ்தவக் கல்வியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான உறுதி அளிக்கின்றன. இவர்களுக்கு ஏழ்மை சூழலில் உயரிய சம்பளத்தையும் சலுகைகளையும் அளிக்கின்றன.




ஐக்கிய கூட்டணி செயலாளர் ஜெனரல் மௌலானா பஜ்லுர் ரஹ்மான் இக்கம்பெனிகளைப் பற்றி பின்வரும் உண்மையை கண்டறிந்தார். 2004 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இவ்வமைப்புகள் மூன்று இலட்சம் பேர்களை கிறிஸ்தவர்களாக மாற்றியுள்ளன. மேலும் இவை உளவு நிறுவனங்களாகவும் செயலாற்றி, இரகசிய செய்திகளை சேகரித்து தங்களது தலைமைக்கு அனுப்பும் பணிகளையும் செய்கின்றன.





பாகிஸ்தானில் சேவை அமைப்புகளின் கிறிஸ்தவ செயல்பாடுகள்:



பாகிஸ்தானில் தற்போது ஏறக்குறைய 12,000 NGO-க்கள் இயங்கி வருகின்றன. காதியானிய இயக்கமும், பஹாயிஸமும் கோலோச்சியுள்ள, ஏழ்மையும், அறியாமையும் நிறைந்த பலுச்சிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்களில் நடைபெறும் கிறிஸ்தவ இயக்கங்களின் நடவடிக்கைகளை அரசு அறிந்தே உள்ளது என்பது பாகிஸ்தான் இயக்கங்களின் கருத்து.



இக்கம்பெனிகள் மிகவும் இலகுவாக இப்பகுதியில் தம்மை நிலை நிறுத்திக் கொள்வதுடன் இஸ்லாமிய உடை ஒழுங்குகளை அம்மக்களிடமிருந்து களைந்தெறியும் முயற்சிகளையும் மேற்கொள்கின்றன, இவ்வுண்மைகள் வெளியான போது பெரும்பாலான மேற்கத்திய கம்பெனிகள் பூகம்பம் பாதிக்கப்பட்ட இடங்களில் தாங்கள் சொன்ன பணிகளிலிருந்து விலகி கிறிஸ்தவ பிரச்சாரப் பணியை செய்வதாக பாகிஸ்தான் அமைப்புகள் குற்றம் சாட்டின. இவர்களின் இந்த அசெயல்களின் விளைவாக இது வரை ½ மில்லியன் பாகிஸ்தானியர்கள் கிறிஸ்தவ வாழ்க்கை முறையை ஏற்று வாழ்ந்து வரும் பேரிடியான செய்தியை மௌலானா பஜ்லுர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.



பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ இயக்கங்கள்:



1) Dorothea Mission:



இவ்வமைப்பு ரஷ்யாவிற்கும், ஆப்கானிஸ்தானிற்கும் நடைபெற்ற போரின் போது பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்த ஆப்கான் அகதிகளின் சேவைக்காக ஆரம்பிக்கப்பட்டது. இது சேவை அமைப்பாக வெளியுலகிற்குத் தெரிந்தாலும், கிறிஸ்தவ அழைப்புப் பணிக்கான திட்டமிட்ட முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.



2) Fellowship Recording World Gospel:




இவ்வமைப்பானது கிறிஸ்தவ நூல்களை வெளியிடுதல், இலட்சக்கணக்கான கிறிஸ்தவ சொற்பொழிவுகள் கொண்ட ஒலிப்பேழைகளைத் தயாரித்தல் போன்ற பணிகளுடன் வானொலியில் உருது, புஷ்து, பார்சி, தரி (ஈரானிய மொழி) மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்குகின்றது.




3) சர்வதேச அமைப்புகள்:



ஆப்கானிஸ்தான் போரின் முடிவுக்குப் பிறகு இவ்வமைப்புகள் புதிய பெயர்களுடன் செயல்பட்டு வருகின்றன. தற்போது இவை பாகிஸ்தானின் பெரிய நகரங்களை குறிப்பாகக் கராச்சியைக் குறி வைத்து இயங்குகின்றன. இங்குள்ள ஏழை எளியவர்களுக்குத் திருமண ஆசை, பண ஆசை காட்டி கிறிஸ்தவ மதத்தில் இணைக்க முயன்று வருகின்றன.




2007 ஆகஸ்டில் இம்மிஷனரிகள் பைபிளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைக் கொண்ட நூலை வெளியிட்டன. இந்த நூல்களின் முகப்பில் மஸ்ஜிதே ஹராம். மஸ்ஜிதே நபவி, மஸ்ஜித் அக்ஸா ஆகியவற்றின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. முஸ்லிம்களை ஏமாற்றுவதே இதன் நோக்கம்.




பாகிஸ்தானிலும் ஆப்கனிலும் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ அமைப்புகளைப் பற்றிய குறைந்தபட்ச தகவல்களே இவை. இதை விட ஆச்சரியமளிக்கும் விஷயத்தை பிரான்ஸிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிக்கை கிறிஸ்தவ பணிகளின் பரவலைப் பற்றி வெளியிட்டுள்லது. தென்கொரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஏறத்தாழ அறுபதாயிரம் (60,000) கிறிஸ்தவப் பணியாளர்கள் தற்போது முஸ்லிம்களிடையே முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனராம்,



ஆக்கம்: ரிஸ்வானா ஷகீல், நன்றி: சமரசம் 16-31 ஜனவரி இதழ்

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails