//1. கடவுளின் பெயரால் தன்னையே துன்புறுத்துதல்
மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மனிதர்கள் பல வகைகளிலும் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்கின்றனர்.
பக்தியின் பெயரால் மக்கள் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்வதை மதவாதிகள் ஊக்குவிக்கின்றனர்.
''மனிதனைத் துன்பத்தில் ஆழ்த்தும் நடவடிக்கைகள் எப்படி அர்த்தமுள்ளவையாக இருக்கும்?'' என்று சிந்தனையாளர்கள் நினைக்கின்றனர்.
நெருப்பை வளர்த்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அதில் நடந்து செல்லுதல்
நாக்கிலும், கன்னங்களிலும் சிறு ஈட்டியைக் குத்திக் கொள்ளுதல்
சாட்டையால் தம்மைத் தாமே அடித்துக் காயப்படுத்திக் கொள்ளுதல்
குளிரிலும், வெயிலிலும் செருப்பு கூட அணியாமல் கால் நடையாக வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லுதல்
வெடவெடக்கும் குளிரில், குளிர்ந்த நீரில் குளித்து விட்டு ஈரத்துணியுடன் கோவிலைச் சுற்றி வருதல்
கரடு முரடான தரைகளில் ஆண்களும், பெண்களும் உருளுதல்
தமது தலையில் தேங்காய் உடைத்து காயப்படுத்திக் கொள்ளுதல்
படுத்திருக்கும் பெண்கள் மீது பூசாரி நடந்து செல்லுதல்
சிறுவர்களை மண்ணுக்குள் உயிருடன் புதைத்து விட்டு வெளியே எடுத்தல்
இயற்கையான உணர்வுகளுக்கு எதிராகத் துறவறம் பூணுதல்
ஆடைகளையும் துறந்து விட்டு நிர்வாணமாக அலைதல்
இன்னும் இது போன்ற நடவடிக்கைகளின் காரணமாகவே 'மதங்கள் அர்த்தமற்றவை' என்று சிந்தனையாளர்கள் விமர்சனம் செய்கின்றனர்.
கருணையே வடிவான கடவுள் மனிதனைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்பவனா?
''மற்றவர்களால் தனக்குத் துன்பங்கள் ஏற்படக் கூடாது என்று கவனமாகச் செயல்படும் மனிதன் தனக்குத் தானே தீங்குகளை மனமுவந்து வரவழைத்துக் கொள்கின்றானே? இந்த அளவுக்கு மனிதனின் சிந்தனயை மதங்கள் மழுங்கடித்து விட்டனவே?'' என்று சிந்தனையாளர்களுக்கு ஏற்படும் கோபத்தின் விளைவு தான் 'மதங்கள் அர்த்தமற்றவை' என்ற விமர்சனம்.
இஸ்லாம் மார்க்கம் இது போன்ற எந்த நடவடிக்கைகளையும் ஆதரிக்கவில்லை.
தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்ளுதல்
தீ மிதித்தல்
தரைகளில் உருளுதல்
துறவறம் பூணுதல்
நிர்வாணமாக அலைதல்
போன்ற எந்த நடவடிக்கைகளையும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை.
ஆதரிக்காதது மட்டுமின்றி இவற்றைக் கடுமையாகவும் எதிர்க்கின்றது.
எனவே ''மதங்கள் மனிதனைத் துன்புறுத்துகின்றன'' என்ற விமர்சனம் இஸ்லாத்திற்குப் பொருந்தாது //
மதங்கள் மனிதனை துன்புறுத்துகின்றன என்ற விமர்ச்சனம் இஸ்லாமுக்கு பொருந்தாது என்று ஏன் இப்படி வாய்கூசாமல் பொய்சொல்கிறீர்கள்
.அரப்போர் என்று சொல்லி மற்ற மததினரை பயமுறுத்தி அவர்களை கொன்று ஒழிப்பது மட்டும் அல்லாமல் தங்களையும் காயப்படுத்திக்கொண்டு அல்லாஹ் இதற்கு சொர்கம் தருவான் என்று காத்திருக்கும் ஜிஹாதிக்கூட்டங்கள் மற்ற மதங்களை பார்த்து கிண்டல் அடிப்பது கோமளித்தனம்.உங்கள் நபியையும்,உங்கள் நபித்தோழர்களும் அல்லாவுக்காக தங்களை காயப்படுத்தியதும்,மரணத்துக்கு ஒப்புக்கொடுத்ததும் ஆதாரப்பூர்வமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இந்து மதத்தில் செய்யப்படும் சடங்குகள் தனிமனிதனை மட்டும் பாதிக்கின்றவை.தன் உடலை வருத்தி இறைவனை அடைய நினைப்பது என்பது தனிப்பட்ட உரிமை.ஆனால் மற்றவனை அழித்து தன் மதத்தை நிலை நிறுத்த போராடுவது இஸ்லாம்.
பாகம்
1, அத்தியாயம் 3, எண் 123'
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர் (தனிப்பட்ட) கோபத்திற்காகப் போராடுகிறார். (இன்னொருவர்) தம் குலப்பெருமைகளைக் காக்கும் சீற்றத்துடன் போரிடுகிறார். இவற்றில் இறைவழியில் செய்யப்படும் போர் எது?' என்று கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, 'அல்லாஹ்வின் கொள்கை (இவ்வுலகில்) மேலோங்குவதற்காக (மட்டும்) போர் புரிகிறவர் தாம் மகத்துவமும் கண்ணியமுமிக்க இறைவழியில் போரிட்டவராவார்' என்று கூறினார்கள். கேள்வி கேட்டவர் நின்றிருந்தால்தான் நபி(ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்தினார்கள்" என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.பாகம்
1, அத்தியாயம் 9, எண் 527அப்துல்லாஹ்
இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, 'தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்" என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'பெற்றோருக்கு நன்மை செய்தல்" என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'இறைவழியில் அறப்போர் புரிதல்" என்றனர். எனக்கு இவற்றை நபி(ஸல்) அவர்கள் அறிவித்தனர். (கேள்வியை) மேலும் நான் அதிகப்படுத்தியிருந்தால் நபி(ஸல்) அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள்.
பாகம்
2, அத்தியாயம் 23, எண் 1351ஜாபிர்
(ரலி) அறிவித்தார்.போர் நடக்கவிருந்தபோது என்னுடைய தந்தை அன்றிரவு என்னை அழைத்து, 'நபி(ஸல்) அவர்களின் சகாக்களில் (நாளை போரில்) முதலில் நானே கொல்லப்படுவேன் எனக் கருதுகிறேன். மேலும் எனக்குப் பின் நான்விட்டுச் செல்பவர்களில் நபி(ஸல்) அவர்களைத் தவிர மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரியவராகக் கருதவில்லை. என் மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உன்னுடைய சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்" என்றார். மறுநாள் (போரில்) அவர்தான் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொருவரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் அவரை கப்ரில்விட்டுவைப்பதை என்னுடைய மனம் விரும்பவில்லை. எனவே, (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரின் உடலை நான் கப்ரிலிருந்து வெளியிலெடுத்தேன். அப்போது அன்றுதான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர் போன்று அவரின் காதைத் தவிர உடம்பு அப்படியே இருந்தது.
பாகம்
4, அத்தியாயம் 64, எண் 4077உர்வா
இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்"தமக்கு(ப் போரில்) படுகாயங்கள் எற்பட்ட பின்னரும் கூட அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்பை அவர்கள் ஏற்றார்கள். நன்மை புரிந்து, தீமையிலிருந்து தம்மைக் காத்துக் கொண்ட இத்தகையோருக்கு மகத்தான பிரதிபலன் உண்டு" என்னும் (திருக்குர்ஆன் 03:172 -வது) வசனத்தை (என் சிற்றன்னை) ஆயிஷா(ரலி) ஓதிவிட்டு என்னிடம், 'என் சகோதரி மகனே! உன் தந்தை ஸுபைர்(ரலி) அவர்களும் (என் தந்தையும் உன் பாட்டனாருமான அபூ பக்ர்(ரலி) அவர்களும் (அந்த அழைப்பை ஏற்ற) அவர்களில் உள்ளவர்கள் தாம். உஹுத் நாளில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டபோது இணைவைப்பவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் மீண்டும் திரும்பி வந்து விடுவார்களோ என்று நபி(ஸல்) அவர்கள் அஞ்சினார்கள். (அப்போது) 'அவர்களுக்குப் பின்னால் (அவர்களை அச்சுறுத்துவதற்காக அவர்களைத் துரத்திச்) செல்பவர்கள் யார்?' என்று கேட்டார்கள். (உஹுதில் பங்கெடுத்த) நபித்தோழர்களில் எழுபது பேர் (அவர்களைத் துரத்தியடிக்க) முன்வந்தனர்" என்று கூறினார்கள்.
அவர்களில் அபூ பக்ர்(ரலி) அவர்களும், ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களும் இருந்தனர்.
பாகம்
4, அத்தியாயம் 64, எண் 4081'
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"நான் ஒரு கனவு கண்டேன். (அதில்) நான் ஒரு வாளை அசைத்தேன். அதன் முனை முறிந்துவிட்டது. உஹுதுப போரின்போது இறைநம்பிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை அது குறித்தது. பிறகு மீண்டுமொரு முறை அதை நான் அசைத்தேன். அது முன்பிருந்ததை விட மிக அழகாக மாறிவிட்டது. அது அல்லாஹ் (அதே உஹுதுப போரில்) கொணர்ந்த உறுதிப்பாட்டையும், (சிதறி ஓடிய) இறைநம்பிக்கையாளர்கள் (மீண்டும்) ஒன்று திரண்டதையும் குறித்தது. அந்தக் கனவில் நான் சில சாளை மாடுகளை (அவை அறுக்கப்படுவது போல்) கண்டேன். (உஹுதுப போரில் கொல்லப்பட்டவர்களுக்கு) அல்லாஹ் வழங்கிய அந்தஸ்து (அவர்கள் இவ்வுலகில் இருந்த நிலையை விட அவர்களுக்குச்) சிறந்தது ஆகும். எனவே, (அந்த மாடுகள்) உஹுத் நாளில் கொல்லப்பட்ட இறை நம்பிக்கையாளர்களைக் குறிப்பவையாகும்.
என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
பாகம்
4, அத்தியாயம் 64, எண் 4082கப்பாப்
(ரலி) அறிவித்தார்நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்குரிய பிரதிபலன் அல்லாஹ்வின் பொறுப்பாம்விட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதிபலனில் எதையுமே (இவ்வுலகத்தில்) அனுபவிக்காமல் சென்றுவிட்டனர். அவர்களில் ஒருவர் தாம், முஸ்அப் இப்னு உமைர்(ரலி). அவர் உஹுத் நாளில் கொல்லப்பட்டார். அவர் கோடுபோட்ட வண்ணத்துணி ஒன்றை மட்டுமேவிட்டுச் சென்றார். அவரின் தலையை நாங்கள் அதனால் மறைத்தால் அவரின் இரண்டு கால்கள் வெளியில் தெரிந்தன் கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. அப்போது எங்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'அவரின் தலையைத் துணியால் மறைத்துவிட்டு அவரின் மீது 'இத்கிர்' புல்லையிடுங்கள்... அல்லது அவரின் கால் மீது 'இத்கிர்' புல்லைப் போடுங்கள்..." என்று கூறினார்கள்.
(உஹுதுப் போரில் பங்கெடுத்த) எங்களில் வேறு சிலரும் உள்ளனர். அவர்களின் (பிரதிபலன் இந்த உலம்லும்) கனிந்துவிட்டது. அதை அவர்கள் (இவ்வுலம்லும்) பறித்து (அனுபவித்து)க் கொண்டார்கள்.
பாகம்
5, அத்தியாயம் 65, எண் 4559(உஹுத் போரில் பலத்த காயமுற்ற பின்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவிலிருந்து தம் தலையை உயர்த்தும்போது, 'சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹகித்' (அல்லாஹ், தன்னைப் புகழ்வோரின் புகழுரையைச் செவிமடுக்கிறான்; எங்கள் இறைவா! உனக்கே எல்லாப் புகழும்.) என்று சொன்ன பின்பு, 'இறைவா! இன்னார், இன்னார், இன்னாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!' என்று (சில எதிரிகளுக்கெதிராகப்) பிரார்த்திப்பதை கேட்டிருக்கிறேன். அப்போது அல்லாஹ், 'அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை' எனும் (திருக்குர்ஆன் 03:128 வது) வசனத்தை அருளினான். 16
இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
No comments:
Post a Comment