அமெரிக்க விண்வெளி ஆராட்சி நிறுவனம் நாசாவால் தயாரித்த சட்டலைட்(செயற்கைக் கோள்) இன்று பூமி மீது மோதவுள்ளது. பூமியின் சுற்றுப்புறச் சூழலை ஆராய 1991ம் ஆண்டு இது நாசாவால் விண்வெளிக்கு ஏவப்பட்டது. இது தனது வேலையை செவ்வனவே செய்தாலும் பல வருடங்களுக்குப் பின்னர் கட்டுப்பாட்டை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகியும் வந்தது. புவியீர்ப்பு விசை காரணமாக அது தனது சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி தற்போது பூமியை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது. சுமார் 10.6 மீட்டர் நீளம் கொண்டதும் 5,600 KG எடையுள்ளதுமான இந்தச் செயற்கைக்கோள் பூமி மீது இன்று சனிக்கிழமை மாலை 4.45 மணிக்கு மோதும் என நாசா தெரிவித்துள்ளது.
இது பூமிக்குள் நுழையும்போது வளிமண்டலத்துடனான ஊராய்வின் காரணமாக எரிய ஆரம்பிக்கலாம் எனவும் பூமி மீது அதன் பாகங்கள் வந்து விழும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இது கடலில் விழுமா இல்லை தரையில் விழுமா என்று நாசாவால் கூறமுடியவில்லை. சுமார் 2000 பாகங்களைக் கொண்ட இந்த செயற்கைக்கோள் பூமிக்குள் பிரவேசிக்கும் போது அதன் துண்டுகள் பல சிதறி பரவலாக பூமியின் எல்லாப் பகுதியிலும் விழலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
1979ம் ஆண்டு 70 தொன் எடையுள்ள ரஷ்ய செயற்கைக்கோள் பூமியில் வீழ்ந்ததும் ஞாபகம் இருக்கலாம். ஸ்கை லாப் எனப்படும் அந்த செயற்கைக்கோளில் கதிரியக்கப் பொருட்டகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பாகங்கள் பல இந்தியப் பெருங்கடலிலும் சில பாகங்கள் சில நாடுகளிலும் விழுந்தது. தற்போது பூமி மீது விழ இருக்கும் செயற்கைக் கோளால் பேராபத்தோ இல்லை உயிராபத்தோ கிடையாது என நாசா அறிவித்துள்ள போதும், சர்வதேச தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் இச் செய்தி முதலிடம் பிடித்துள்ளது.
பிந்திக் கிடைத்த தகவலில் படி செயற்கைக்கோளின் 26 பாகங்கள் ஆபிரிக்க கண்டத்திலும் மற்றும் கனடாவிலும் விழுந்துள்ளதாக அறியப்படுகிறது.
http://thamilislam.tk
No comments:
Post a Comment