Monday, September 19, 2011

ஆபாச திரைப்பட போஸ்டர்கள்


ஆபாச திரைப்பட போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்க வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து நாகை, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமை நலச்சங்க தலைவர் பாஸ்கரன் நாகை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 


நாகை நகரத்தின் முக்கிய வீதிகள், பள்ளி சுவர்களிலும், பள்ளிகள் அருகிலும், கோவில்களின் சுற்றுசுவர்களிலும் ஆபாச திரைப்படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. கோவில் சுவர்களிலும், பள்ளிகளின் எதிரிலும் இவ்வாறு ஆபாச திரைப்படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 


இளைஞர்களிடம் பாலுணர்வை தூண்டும் வகையில் மிகவும் மோசமான வகையில் உள்ளன. இவ்வாறான போஸ்டர்களை ஒட்ட கோர்ட்டு தடை விதித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் வியாபார நோக்கத்தோடு பள்ளிகளின் எதிரிலும், கோவில்களின் சுற்றுச்சுவர்களிலும் ஆபாச திரைப்பட போஸ்டர்கள் ஒட்டப்படுவது வேதனைக்குரியது. 


கண்ட இடங்களிலும் ஆபாச திரைப்படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது சாலையில் செல்வோரின் கவனத்தையும் சிதறடிக்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.


இத்தகைய போஸ்டர்களால் சமூகம் சீரழியும் சூழ்நிலை உள்ளது. ஆபாச திரைப்பட போஸ்டர்களால் ஒட்டு மொத்த நகரத்தின் அழகே கெடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுப்புறம், தமிழ் கலாசாரம் சீரடையவும், பண்பாடு காக்கப்படவும் ஆபாச திரைப்பட போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


source:nakkheeran


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails