லண்டனில் உள்ள தேம்ஸ் விகாரையைச் சேர்ந்த பகலாகம சோமரட்ன தேரர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 65 வயதாகும் தேரர் 1977ம் ஆண்டு மற்றும் 1978ம் ஆண்டுகளில் சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தினார் என்று லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளதோடு போதிய ஆதாரங்களை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. லண்டன் மாநகரிலேயே மிகப்பெரிய பெளத்த விகாரையாக திகழும் தேம்ஸ் விகாரை லண்டனில் பல ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இங்கே இருக்கும் பிரதம தேரர் மீதே தற்போது இக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து எந்த ஒரு செய்தியையும் தாம் வெளியிட விரும்பவில்லை என விகாராதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
1977ம் ஆண்டில் சில சிறுமிகளையும் பின்னர் 1978ம் ஆண்டில் மேலும் சில சிறுமிகளிடம் முறைகேடாகவும் இத் தேரர் நடந்தார் எனப் பொலிசார் குற்றங்களைப் பதிவுசெய்துள்ளனர். டுவில்டன் வீதி , குரோய்டன் என்னும் முகவரியில் வசித்துவரும் இத் தேரர் தமது குற்றங்களை ஒப்புக்கொண்டார இல்லையா என்று இதுவரை அறிவிக்கவில்லை. இருப்பினும் பொலிசாரிடம் போதிய ஆவணங்கள் இருப்பதாக தற்போது அறியப்படுகிறது. இச் செய்தி குறித்து சிங்கள ஊடகங்கள் எதுவும் வாய் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் சர்வதேச ஆங்கில ஊடகமான பி.பி.சி இதுகுறித்து செய்திவெளியிட்டுள்ளது.
source:athirvu
http://thamilislam.tk
No comments:
Post a Comment