Friday, September 16, 2011
கம்ப்யூட்டர் கேள்வி பதில்
கேள்வி: டி.பி. ஐ.( ஈ.க.ஐ.) என்பதன் முழு விளக்கத்தினையும், அதன் பயன்பாட்டினையும் குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-கே. தவமணி, கோவை.
பதில்: டிஜிட்டல் படங்கள் புள்ளிகளால் அமைக்கப்படுகின்றன. இதனை அளவு செய்திட DPI (Dots Per Inch) என்பதைப் பயன்படுத்துகிறோம். இதனை ரெசல்யூசன் (Resolution) என்றும் சொல்கிறோம். எந்த அளவிற்கு இந்த புள்ளிகளின் எண்ணிக்கை, அதாவது டி.பி.ஐ. அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு ஒரு படம் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கும். போட்டோ ஒன்றின் தன்மை சிறப்பாக இருக்க குறைந்தது அது 300 DPIல் இருக்க வேண்டும். அதற்கு மேல் செல்லச் செல்ல, அதன் சிறப்புத் தன்மையில் பெரிய வேறுபாடு இருக்காது. இணையத்தில் அல்லது கம்ப்யூட்டர் மானிட்டர் திரையில் சிறப்பாகத் தோற்றமளிக்க, ஒரு படம் 72 டி.பி.ஐ. இருந்தால் போதுமானது.
கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துகிறேன். இதில் டிபிராக் செய்வது குறித்த கட்டளையை எப்படிக் கொடுப்பது. விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ளது போல் இல்லையே! ஏன்? விளக்கவும்.
-தே. உதயகுமார், கோவை.
பதில்: ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கத் தேவையான டிபிராக் வசதி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் பல உயர்நிலை மாற்றங்களை அடைந்து, கூடுதல் வசதிகளைத் தருகிறது. நீங்கள் இடம் மற்றும் கட்டளை தெரியாமல் தடுமாறுவது போல பல வாசகர்கள் அனுபவித்துள்ளனர். இதன் முழுப் பயனையும் அடைய, கீழே கண்டுள்ளபடி செயல்படவும். ஸ்டார்ட் அழுத்தி, கிடைக்கும் சர்ச்பாக்ஸில், cmd என டைப் செய்திடவும். மேலாகக் கிடைக்கும் பட்டியலில், cmd ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு Run as Administrator என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கட்டளை விண்டொ திறக்கப்படும். இங்கு defrag என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது டிபிராக் கட்டளையுடன் பயன்படுத்தக் கூடிய சில ஸ்விட்ச்களுடன் விண்டோ கிடைக்கும். இங்கு defrag கட்டளையை டைப் செய்து, உடன்/டைப் செய்து பின்னர், எந்த செயல்பாடு வேண்டுமோ, அதற்கான ஸ்விட்சை டைப் செய்திடவும். எடுத்துக்காட்டாக, சி ட்ரைவ் முழுவதும், அனைத்து வால்யூம்களையும் டிபிராக் செய்திட defrag/c என டைப் செய்திட வேண்டும். இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்விட்சுகளையும் பயன்படுத்தலாம். அதற்கேற்ற வகையில் டிபிராக் செயல்பாடு மேற்கொள்ளப்படும்.
கேள்வி: விண்டோஸ் கிராஷ் ஆனால், அப்போது திறக்கப்பட்டு வேலை மேற்கொள்ளப்படும் அனைத்து போல்டர்களூம் கிராஷ் ஆகின்றன. நான் எக்ஸ்பி பயன் படுத்துகிறேன். அப்போது பயன்பாட்டில் உள்ள போல்டர் மட்டும் கிராஷ் ஆகும் வழியும் உள்ளது என்று என் நண்பர் கூறுகிறார். இது உண்மையா?
-ஜி. கண்ணதாசன், புதுச்சேரி.
பதில்: நீங்கள் விரும்புவது போல அந்த போல்டர் மட்டும் பாதிப்புக்குள்ளாகி, மற்ற போல்டர்கள் எந்த வகையிலும் சிக்காத வகையில் செட் அப் செய்திடலாம்.
இதற்கு கண்ட்ரோல் பேனலைத் திறந்து Folder Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் வியூ டேபிற்குச் செல்லவும். அதில் பல ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். அவற்றில் 'Launch folder windows in a separate process' என்று ஒன்று இருக்கும். அதன் அருகே டிக் மார்க் அடையாளம் ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன். இதன் டாஸ்க் பாரில், வலது பக்கம் உள்ள நோட்டிபிகேஷன் ஏரியாவில், நிறைய ஐகான்கள் காணப்படுகின்றன. இவற்றை எப்படிக் குறைப்பது? இதனால், இயங்கும் புரோகிராம்கள் நின்று போகாதா?
-எஸ்.கே. வேல்ச்சாமி சாமுவேல், விழுப்புரம்.
பதில்: அதிக எண்ணிக்கையில், உங்கள் கம்ப்யூட்டரில் புரோகிராம்களை இன்ஸ் டால் செய்து இயக்கிவிட்டால், டாஸ்க் பாரின் வலது கோடியில் உள்ள நோட்டி பிகேஷன் ஏரியாவில் நிறைய ஐகான்கள் இடத்தை அடைத்துக் கொள்ளும். இதனைச் சரி செய்திட டாஸ்க் பாரின் காலி இடத்தில் ரைட் கிளிக் செய்து புராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இதில் 'Hide inactive icons' என்று உள்ள இடத்தில் எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பொதுவாக இது சரியாகவே தன் வேலையை மேற்கொள்ளும். சில வேளைகளில் நமக்கு வேண்டிய ஐகான்களைக் கூட மறைத்து வைக்கும். அப்போது மீண்டும் இதே போல் சென்று புராபர்ட்டீஸ் மெனுவில் Customize பட்டனில் கிளிக் செய்திடவும். பின் உங்களுக்குத் தேவையான ஐகானைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். பின் 'Always Show' என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறினால் அந்த ஐகான் காட்டப்படும்.
கேள்வி: தேடுதல் கட்டங்களில் பயன்படுத்த ஏதேனும் ஷார்ட்கட் கீ உண்டா? பயர்பாக்ஸ் பிரவுசரை நான் பயன்படுத்துகிறேன்.
-தி.நாராயணன், திருப்பூர்.
பதில்: உங்கள் கேள்வி புதிய கோணத்தில் பிரவுசர் பயன்பாட்டினை நோக்க வைக்கின்றது. இந்த நோக்கில் தேடிய போது, ஷார்ட்கட் கீ பயன்பாடு இல்லாமல் வேறு ஒரு தகவல் கிடைத்தது. பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களில் இதனைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, தலைப்பு ஒன்றை கட்டுரை அல்லது டாகுமெண்ட் ஒன்றிலிருந்து காப்பி செய்து தேட விரும்புகிறீர்கள். காப்பி செய்த பின்னர், தேடல் கட்டம் அல்லது குரோம் பிரவுசரில் ஆம்னி பாக்ஸில், ரைட் கிளிக் செய்திடுங்கள். உடன் கிடைக்கும் கீழ் விரி கட்டத்தில் Paste and Search என்று இருப்பதில் கிளிக் செய்திடுங்கள். உடன் நீங்கள் காப்பி செய்த சொற்கள் ஒட்டப்பட்டு தேடல் தொடங்கும். பேஸ்ட் செய்து, பின்னர் என்டர் அழுத்தத் தேவை இல்லை.
கேள்வி: விண்டோஸ் சிஸ்டத்திலேயே பைல்களை ஸிப் செய்திடும் வசதி உள்ளது என்றும், விண்ஸிப், விண் ஆர்.ஏ.ஆர். பயன்படுத்த தேவை இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அவ்வாறு ஸிப் செய்தால், தர்ட் பார்ட்டி புரோகிராம் கொண்டு விரித்து பைல்களைப் பெற முடியுமா?
-டி.பத்மலதா, திண்டுக்கல்.
பதில்:விண்டோஸ் இயக்கத்தில் ஸிப் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. முதலில் ஸிப் செய்திட வேண்டிய பைல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக் கவும். பைல்களைச் சுற்றி ஒரு பாக்ஸ் அமைத்துத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது கண்ட்ரோல் கீ அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுக்கலாம். பின்னர் இதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Send To என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது விரியும் கட்டத்தில், Compressed (Zipped Folder) என்று இருப்பதனைத் தேர்ந்தெடுத்தால், உடன் அனைத்து பைல்களும் ஸிப் செய்யப்பட்டு கிடைக்கும். இந்த ஸிப்டு பைலுக்கு விண்டோஸ் அளிக்கும் பெயர் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், எப்2 அழுத்தி புதிய பெயர் டைப் செய்து கொள்ளலாம். இதனை விண்டோஸ் மூலமும், மற்ற தர்ட் பார்ட்டி புரோகிராம் (Winzip, WinRAR) மூலமும், விரித்து பைல்களைப் பெறலாம்.
கேள்வி: இன்டர்நெட் சேவை தரும் நிறுவனங்கள், இணைப்பு தரும் போது சொல்லும் வேகம் சரியாகக் கிடைக்கிறதா என்று எப்படி அறிவது? குறைவாக இருந்தால் யாரிடம் முறையிடுவது?
-சி. ரங்கநாத், கோவை.
பதில்: இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள், தங்கள் இணைப்பில் கிடைக்கும் வேகத்தினைப் பற்றிக் குறிப்பிடுகையில் அதிக பட்ச வேகம் என்று குறிப்பிடுவார்கள். இன்னும் நுணுக்கமாகக் கேட்டால், அப்லோடிங் ஸ்பீட், டவுண்லோடிங் ஸ்பீட் என்று தனித்தனியே கூறி, இவை எல்லாம் சேர்த்துத்தான் இதன் வேகம் என்று கூறுவார்கள். இருப்பினும் உங்கள் இன்டர்நெட் வேகத்தினை அறிய கீழே தந்துள்ளபடி செயல்படவும்.
உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய, முதலில் இணைப்பை இயக்குங்கள். பின் http://speedtest.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப் பிற்கான ரௌட்டருக்கும் கம்ப்யூட்டருக் குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் வேகத்தினையும் மற்றும் அப்லோடிங் வேகத்தையும் அது அளந்து காட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும். இது ஏறத்தாழ, உங்களுக்கு இணைப்பு தரும் நிறுவனம் உறுதி அளித்த வேகம் எனில் விட்டுவிடலாம். பெருத்த வேறுபாடு இருந்தால், உடனே அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொலைபேசி அல்லது மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு கேட்டு சரி செய்திடச் சொல்லுங்கள்
source:dinamalar
--
http://thamilislam.tk
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment