Thursday, September 29, 2011

சவுதியில் கார் ஓட்டிய பெண்ணுக்கு கசையடி


துபாய் : சவுதி அரேபியாவில், பெண்களுக்குப் புதிய உரிமைகள் அறிவிக்கப்பட்ட இரு தினங்களில், கார் ஓட்டியதற்காக முதன் முறையாக, ஒரு பெண்ணுக்கு 10 கசையடிகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில், பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மன்னர் அப்துல்லா, 2015 நகராட்சித் தேர்தல்களில், பெண்கள் வாக்களிக்கவும், வேட்பாளராக நிற்கவும் அனுமதியளித்தார்.

எனினும் கார் ஓட்டுவதற்கு, இன்னும் பெண்களுக்கு அந்நாட்டில் அனுமதி வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து, சமீபத்தில் பல பெண்கள் கார் ஓட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில், ஷைமா ஜஸ்தானியா என்ற பெண், ஜெட்டா நகர் வீதிகளில் கார் ஓட்டும் போது கைது செய்யப்பட்டவர். அவருக்கு, ஜெட்டா நகர கோர்ட், 10 கசையடிகள் தண்டனை விதித்து, நேற்று அறிவித்தது. மற்ற இரு பெண்கள், இந்தாண்டின் இறுதியில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்விஷயத்தில் முதன்முறையாக வழங்கப்பட்ட இத்தண்டனை, சவுதியில் கார் ஓட்டும் புரட்சியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக, ஷைமா தெரிவித்துள்ளார்.


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails