ஊழலை ஒழிக்க இன்னொரு சுதந்திர போராட்டத்தை தொடங்கியிருக்கும், சமூக சேவகர் காந்தியவாதி அன்ன ஹசாரேவுக்கு ஆதரவாக நாடெங்கும் துவங்கியிருக்கும் எழுச்சி அலைக்கு ஆதரவாக, தமிழ் திரையுலகமும் களமிறங்குகிறது. நாட்டில் ஊழலை ஒழிக்க, வலுவான ஜன் லோக்பால் மசோதாவை அமல்படுத்த கோரி, டில்லி ராம்லீலா மைதானத்தில் 7வது நாளாக காந்தியவாதி சமூக சேவகர் அன்ன ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவருக்கு ஆதரவாக ஏராளமானபேரும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அன்னாவுக்கு ஆதரவாக நாடெங்கும் புரட்சி தீ வெடித்துள்ளது. இந்தியா தவிர வெளிநாடுகளிலும் அன்ன ஹசாரேவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ் திரையுலகமும் அன்னாவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கிறது. சென்னை பிலிம் சேம்பரில் நாளை காலை 9மணி முதல் மாலை 5மணி வரை உண்ணாவிரதம் நடைபெற இருக்கிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த அனைத்து சங்கங்களும் ஈடுபட இருக்கின்றனர். அபிராமி ராமநாதன், அமீர், ஜனநாதன், சித்ரா லட்சுமணன் உள்ளிட்டவர்களும் பல்வேறு திரை நட்சத்திரங்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

source:dinamalar
-- http://thamilislam.tk
No comments:
Post a Comment