புதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான இரண்டு மணி நேர புதிய ஆவணப்படம் ஒன்றை நேற்று செவ்வாய்கிழமை இரவு 7.30 தெராடக்கம் 9.30 வரை ஒளிபரப்பியது. பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட �இலங்கையின் கொலைக்களங்கள்� என்ற ஆவணப் படத்தை 3 நாட்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பி இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும் இந்த ஹெட்லைன் ருடே தொலைக்காட்சியே ஆகும்.
இந்த நிலையில் இன்றிரவு இனப்படுகொலையின் கண்கண்ட சாட்சி- இலங்கையில் நடந்த கொலைக்களங்கள் (I witnessed Genocide: Inside Lanka�s Killing Fields) என்ற ஆவணப்படத்தை இத்தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இத் தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் நேரடியாக கிளிநொச்சி சென்று பொதுமக்களைச் சந்தித்துள்ளார். மிகவும் இரகசியமாக எடுக்கப்பட்டுள்ள சில காணொளி ஆதாரங்கள் இப் பதிவில் இடம்பெற்றுள்ளன. கீழ் காணும் தொடர்பை அழுத்தி காணொளியை பார்வையிடவும்.
No comments:
Post a Comment