Sunday, June 26, 2011

iPhone வாங்கித்தருபவருக்கு எனது கற்பு இலவசம்

iPhone வாங்கித்தருபவருக்கு எனது கற்பு இலவசம்-சீன யுவதி அதிரடி!

June 26, 2011

சீன நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் அப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த தயாரிப்புக்களை வாங்குகின்றமைக்காக மிகவும் பாரதுரமான தீர்மானங்களை எடுக்கின்றார்கள்.

ஐ போன் ஒன்றுக்காக கற்பை பண்டமாற்று செய்ய முன் வந்து உள்ளார் கட்டிளம் யுவதி ஒருவர். இவருடைய இலட்சியக் கனவு ஐ போன் ஒன்றை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது. ஆனால் இவரது தகப்பன் ஐ போன் வாங்கிக் கொடுக்கின்றார் இல்லை.

சீனாவின் சமூக இணைப்பு இணையத் தளங்களில் ஒன்று வெய்போ ஐ போனை தரக் கூடிய எவரேனும் ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்கின்றமைக்கு தயார் என்று வெய்போ மூலமாக அறிவிப்பு விடுத்து உள்ளார். அடிப்படைத் தகவல்களுடன் புகைப்படம் ஒன்றையும் பிரசுரித்து உள்ளார். 1990 களில் பிறந்தவர் என்று குறிப்பிட்டு உள்ளார். இவரது அறிவிப்பு இணைய மற்றும் ஊடக உலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இவரது அறிவிப்புக்கு வெய்போ சமூக இணைப்பு இணையத் தள பாவனையாளர்களிடம் இருந்து வன்மையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கற்பு என்பது விலை மதிப்பற்றது , ஐ போன் ஒன்றுக்காக இழக்கப் பட வேண்டியது அல்ல என்பது கண்டனங்களின் அடிப்படையாக உள்ளது.

சீனாவில் கடந்த ஏப்ரல் மாதம் 17 வயது பையன் ஒருவர் ஐ பாட் , ஐ போன் ஆகியவற்றை வாங்குகின்றமைக்காக ஒரு சிறுநீரகத்தை விற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


source:viyapu


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails