சவுதி அரேபியாவில் தடையை மீறி கார் ஓட்டிய முஸ்லிம் பெண்கள்
.18-
சவுதி அரேபியாவில் கடந்த 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் முஸ்லிம் பெண்கள் கார் ஓட்ட அரசு தடைவிதித்துள்ளது. அதையும் மீறி கார் ஓட்டு பவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கார் ஓட்டிய ஷரீப் என்ற 32 வயது கம்ப்யூட்டர் விஞ்ஞானி கைது செய்யப்பட்டு 2 வாரங்கள் சிறை தண்டனை அனுபவித்தார்.
ரியாத்தில் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இருந்தும் முஸ்லிம் பெண்களின் கார் ஓட்டும் ஆர்வத்தை அந்த நாட்டு அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை.
வெள்ளிக்கிழமையான நேற்று பர்தா அணிந்திருந்த ஏராளமான பெண்கள் தடையை மீறி சர்வ சாதாரணமாக கார் ஓட்டி சென்றனர். தங்களின் உரிமையில் சவுதி அரசாங்கம் தலையிட உரிமை கிடையாது. சட்டத்தின் மூலம் எங்களை கட்டுப்படுத்த முடியாது என பேஷ்-புக் மற்றும் டுவிட்டர் போன்ற இணைய தளங்களில் தங்களின் கருத்தை தைரியமாக வெளியிட்டு வருகின்றனர்.
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment