Monday, June 27, 2011

இலங்கைக்கு எதிராக தீர்மானம்: பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் முயற்சி

அப்பாவி ஈழதமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா.வில் மீண்டும் தீர்மானம்: பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் முயற்சி
அப்பாவி ஈழதமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா.வில் மீண்டும் தீர்மானம்: பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் முயற்சி

கொழும்பு, ஜூன். 27- 
 
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த ஈழப்போரின் போது 1 1/2 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. ஈழத்தில் ரத்த ஆறு ஓடிய போதும், இந்தியா உள்பட வெளிநாடுகள் மவுனம் சாதித்தன.  
 
தமிழ் இனத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலை தொடர்பான கொடூரங்களை பல்வேறு ஆதாரங்கள் மூலம் மேலை நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ராஜபக்சே போர்க் குற்றவாளிதான் என்ற உண்மையை இப்போதுதான் பல நாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக உணரத் தொடங்கி உள்ளன.
 
எனவே ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வருகிறது. இதன் ஒரு நடவடிக்கையாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.  
 
பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் கூட்டாக இணைந்து இந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகின்றன. இந்த நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படும்.  
 
பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி சிங்கள அரசுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளிடம் இது பற்றி கூறி ஆதரவு திரட்ட ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.
 
இதற்காக அவர் அறிக்கைகள் தயாரித்து தங்கள் ஆதரவு நாடுகளுக்கு அனுப்பி வருகிறார். கடந்த தடவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியா அதை எதிர்த்தது.இது ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசு செய்த துரோகம் என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஐ.நா.சபையில் மீண்டும் இலங்கையை காப்பாற்ற இந்தியா முயலுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.  
 
இதற்கிடையே இலங்கையில் ராஜபக்சேயும் அவரது சகோதரர்களும் சர்வாதிகாரிகள் போல ஆட்டம் போட தொடங்கி உள்ளனர். பெரிய அளவில் ஊழல்கள் செய்து அரசு சொத்துக்களை அவர்கள் கொள்ளையடிப்பதாக கூறப்படுகிறது.
 
கோதபயராஜபக்சேயின் மகனுக்கு வரும் 30-ந் தேதி கொழும்பில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக ஐரோப்பிய நாடுகளில் இருந்து 2 விமானங்கள் நிறைய ரோஜா பூ கொண்டு வந்துள்ளனர். ராஜபக்சே குடும்பத்தினரின் இந்த ஆடம்பரம் மக்களிடம் கடும் எரிச்சலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது

source:maalaimalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails