Saturday, June 4, 2011

சீனாவில் அதிகரித்துவரும் உடலுறுப்பு விற்பனை


ஐ பேட் கணனிக்காக சிறுநீரகத்தை விற்ற இளைஞர்: சீனாவில் அதிகரித்துவரும் உடலுறுப்பு விற்பனை

 

சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அப்பிளின் ஐ பேட் 2 கணனியை வாங்குவதற்காகத் தனது சிறுநீரகத்தை 20,000 யுவான்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

அந்நாட்டின் அன்ஹுயி மாகாணத்தைச் சேர்ந்த 17 வயதான ஷியாஹோ ஷாங் என்ற இவர் இணையத்தளமொன்றின் மூலம் கிடைத்த தொடர்பு மூலமே தனது சிறுநீரகத்தை விற்றுள்ளார்.

இவரது ஐ பேட் 2 கணனியைக் கண்ட ஷாங்கின் தாயார் அதை எவ்வாறு வாங்கினார் என்பதினை வற்புறுத்திக் கேட்கவே அவர் உண்மையை தெரிவித்துள்ளார்.

விற்பனையின் மூலம் கிடைக்கப் பெற்ற மேலதிக பணத்தில் ஐ போன் மற்றும் மடிகணனியொன்றையும் அவர் கொள்வனவு செய்துள்ளார். ஷாங்கின் தாயார் மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் விசாரணைகளும் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பணத்துக்காக உடலுறுப்புக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையானது சீனாவில் அதிகரித்து வருகின்றது.

வெளிநாடுகளில் இருந்தும் உடலுறுப்புக்களை வாங்குவதற்காக சீனாவுக்குப் பலர் வருடாந்தம் விஜயம் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்ற


source:viyappu

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails