ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தாலும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தே வருகிறது!
ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன எனினும், அங்குள்ள மக்களின் விசுவாசம் வளர்ந்து வருவதோடு, அம்மாநிலத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது என்று கட்டாக் - புவனேஷ்வர் பேராயர் பார்வா கூறியுள்ளார். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினா சந்திப்பையொட்டி வத்திக்கான் வந்திருந்த பேராயர் பார்வா பீட்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.
கிறிஸ்தவ மதம் எப்போதும் இரத்தம் சிந்தும் நேரங்களில் விசுவாசத்தில் வளர்ந்துள்ளது என்ற வரலாற்றிற்கு ஏற்ப, ஒரிசாவிலும், 2008 ஆம் ஆண்டு நடந்த வன்முறைகளால் அங்குள்ள கிறிஸ்தவர்களின் விசுவாசம் இன்னும் ஆழப்பட்டுள்ளது என்று பேராயர் கூறினார். தலித் மற்றும் பழங்குடியினர் பல நூற்றாண்டுகளாய் அடிமைகளாய் நடத்தப்பட்டு வந்த ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவப் பணியாளர்கள் அம்மக்களிடையே மனித உரிமைகள், மனித மதிப்பு ஆகிய எண்ணங்களைப் புகுத்தி வருவது பாரம்பரிய இந்து சாதிய அமைப்பிற்குப் பெரும் சவாலாக இருப்பதே இந்த வன்முறைகளின் முக்கிய காரணம் என்று பேராயர் பார்வா தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
கந்தமால் பகுதியில் ஏற்பட்ட கலவரங்களுக்குக் காரணமான 13 பேருக்கு அம்மாநிலத்தில் இயங்கும் துரித நீதிமன்றம் அண்மையில் ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கியுள்ளது என்றும், அதே நேரம் மற்றொரு நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்ட வேறு 12 பேரை விடுதலை செய்துள்ளதென்றும் யூகான் செய்தி குறிப்பு கூறுகிறது
source:namvalvu
-- http://thamilislam.tk
No comments:
Post a Comment