சிட்னி: ஆஸ்திரேலியாவில் இனவெறி சமீபத்திய சர்ச்சையாக இருந்து வந்தது. இது தணிந்திருக்கும் இந்நேரத்தில் இந்துக்ககடவுள் அவமதிப்பு சம்பவம் உலகம் முழுவதும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சிட்னியில் கடந்த 2 ம் தேதி முதல் 6 ம்தேதிவரை ரோஸ்மவுன்ட் ஆஸ்திரேலியன் பேஷன்வீக் கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பெண்கள் தங்கள் அறிவுக்கு எட்டியவாறு , ரசிகர்களை கவரும் விதமாக மெல்லிய உடை, பள,பளக்கும் மேக்கப் என தங்கள் அழகை காட்டினர். இதில் ஒரு அழகி நீச்சல் உடையில் வந்தார். கவர்ச்சிகள் தெரியும் விதமான இந்த உடை அணிந்த பெண்ணின் முன்னும், பின்னும் லஷ்மி கடவுள் பொறிக்கப்பட்டிருந்தது. இது இந்து மக்களின் கண்டத்திற்குள்ளாகியிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள இந்து அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றனர்.
அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்பினர் தங்களுடைய எதிர்ப்பு அறிககையில்: இந்துக்கடவுளான லட்சுமி கோயில்களிலும், வீடுகளிலும் வைத்து வழிபடத்தக்க போற்றுதலுக்குரிய தெய்வங்கள் . இவை நீச்சல் உடையில் பொறிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் , வேதனையையும் தருகிறது. பணத்தாசை கொண்ட வணிக ரீதியான ஒரு நிறுவனம் இந்த போட்டியை நடத்தியிருக்கிறது. இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் பா.ஜ., கட்சியினர் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆஸ்திரேலியா நாட்டு கொடியும், ஆடை வடிவமைப்பாளர் லிசாவின் உருவ பொம்மையும் தீ வைத்து கொளுத்தினர்.
இந்த அணிவகுப்புக்கான ஆடைகளை வடிவமைத்த லிசா பர்க் என்பவரிடம் இது குறித்து விளக்கம் கேட்டபோது அவர் கூறியதாவது: இந்து கடவுள்களை அவமதிக்க வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. அவர்களுடைய உருவம் என்னை மிகவும் கவர்ந்தது. எனவே அதுபோன்ற படங்களை இடம் பெறச் செய்தேன் என்றார்.
இது போன்ற சம்பவங்கள் நிகழும்போது மற்ற மதத்தினரை குறைகூறாமல் , சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் மற்றும் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு தீர்வு காண்பதே இத்தகைய பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment