Thursday, May 5, 2011

பாபா மர்மம்:பரபரப்புத் தகவல்



                   லகத்திலேயே அதிக பக்தர்களைக் கொண்ட ஆன்மிக குருவான சாய்பாபாவின் பூத உடல்...  பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி உட்பட பல வி.ஐ.பி.க்கள் பங்கெடுத்த இறுதிச்சடங்கில்  லட்சக்கணக்கான பக்தர்களின் பிரார்த்தனைகளோடு பிரசாந்தி நிலையத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

"பாபா மறைந்துவிட்டார். அவரை கொலை செய்ய முயற்சி செய்தார்கள் என அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட எங்கள் பிள்ளைகளின் மரணத்திற்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை' என அவர்களது பெற்றோர்களும் உறவினர்களும் மீடியாக்களில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

1993-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி இரவு பத்தரை மணி. புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில் உள்ள கோயிலுக்குப் பக்கத்திலிருக்கும் சாய்பாபாவின் அடுக்குமாடி குடியிருப்பில் அவரது படுக்கை அறையில் இருந்த அபாய சங்கு அலறுகிறது.

புட்டபர்த்தி நகரமே விழித்தெழுகிறது. இரவைப் பகலாக்கும் வெளிச்சம்  தரும் விளக்குகள்  ஆன் செய்யப்படு கின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைத்தடிகளுடன் பாபாவின் படுக்கையறை நோக்கி ஓடுகிறார்கள்.

அதில் ஒருசிலர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படு கிறார்கள். முதல்மாடியில் தங்கி யிருந்த சாய்பாபா தனது அறை யின் பின்பக்கக் கதவைத் திறந்து தாழ்வாரம் வழியே இன்னொரு அறைக்குப் போகிறார்.

கீழ்த் தளத்தில் வசிக்கும் அவ ரது சகோதரர் ஜானகிராமன் உள்ளே அனு மதிக்கப் பட்ட நபர்களுடன் ஒரு மூடப் பட்ட அறையைத் திறக்கிறார்.

ஒருமணி நேரம் கழித்து புட்டபர்த்தி காவல்நிலைய ஆய்வாளர் கே.என்.கங்காதர் ரெட்டி துப்பாக்கிகளுடன் வருகிறார். துப்பாக்கிகள் சுடும் சத்தம் 12 முறை கேட்கிறது.

அடுத்ததாக ஒரு லோக்கல் போலீஸ் ஃபோட்டோகிராபர் வருகிறார். அவர் புகைப்படம் எடுத்து விட்டு வந்து வெளியே சொன்னபோதுதான்... அங்கு என்ன நடந்தது என  ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது.

""தரை தளத்தில் பாபாவின் ஓட்டுநர் ராதாகிருஷ்ண மேனோன், அவரது பியூன் மகா ஜன் ஆகியோர் கோடரிகளால் வெட்டிக் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்கள். மேலே ஒரு அறையில் சாய்பாபாவின் கல்லூரியில் படிக்கும் சுரேஷ்குமார், சாய்குமார் என்கிற இரண்டு மாணவர்களும், மரைன் என்ஜினியரான சாந்தாராம் ஜெகன்னாத் என்கிற பக்தரும் போலீசாரால் சுடப்பட்டு  பிணமாகக் கிடக்கி றார்கள். பாபாவின் அந்தரங்க உதவியாளரான பாப்பையா ரத்தம் சொட்ட நின்று கொண்டிருக்கிறார். அந்தக் குடியிருப்பில் பிணங்களோடு கட்டுக் கட்டாக இந்திய, அமெரிக்க ரூபாய் நோட்டுகளும் சிதறிக் கிடக்கின்றன'' என ஃபோட்டோகிராபர் சொன்னதைக் கேட்டு அலறித் துடித்த பக்தர்கள், "பாபாவுக்கு ஒன்றும் ஆகவில்லையே' என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு பாபாவின் சகோதரர் ஜானகிராமன், ""போலீஸ் சுட்டுக் கொன்றார்களே இந்த 4 பேரோடு  விஜய், ரவீந்திரா என மொத்தம் 6 பேர் கோடரிகளோடு பாபாவை கொலை செய்ய வந்தார்கள். அவர்களைத் தடுத்த டிரைவரையும் பியூனையும் கொலை செய்துவிட்டு பாபாவின்  படுக்கை அறைக்குள் நுழைந்து அவரைக் கொல்லப் பார்த்தார்கள். அதைத் தடுத்த அந்தரங்க உதவியாளர் பாப்பை யாவை கொல்ல முயலும்போது விழித்துக் கொண்ட பாபா, அவர் அறையிலிருந்த அலா ரத்தை அலற வைத்துவிட்டு பின்கதவு வழியாக தப்பித்துச் சென்றுவிட்டார். கொலைகாரர்கள் 4 பேர் அறையில் பதுங்கிக் கொண்டார்கள். விஜய், ரவீந்திரா ஆகியோர் தப்பி ஓடிவிட் டார்கள். அறைக்குள் இருந்த 4 பேரையும் போலீஸ் பிடிக்க முயன்றபோது அவர்கள் போலீஸை தாக்கினார்கள். போலீஸ் அவர் களைச் சுட்டுக் கொன்றுவிட்டது'' என்றார்.

ஜூன் 7-ந் தேதி இந்தச் செய்தி உலகையே உலுக்கிவிட்டது. அப்பொழுது வெளியான புகைப்படங்களில்  சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு கொலையாளிகளை நன்கு அடித்ததற்கான அடையாளங்கள் இருந்தது. "கொலைச் சம்பவத்தைப் பற்றி யாரும் போலீசில் எழுத்து மூலமாக புகார் கொடுக்கவில்லை. சம்பவம் நடந்த 12 மணி நேரம் கழித்த பிறகு காவல் நிலைய ஆய்வாளர் கங்காதர் ரெட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒரு வழக்குப் பதிவு செய்யப் பட்டது' என பத்திரிகைகள் எழுதின. 

அப்போதைய மத்திய அமைச்சர் சவான் உட்பட வி.ஐ.பி.க்கள் ஓடோடி வந்தனர். ஒருவாரம் கழித்து பக்தர்கள் மத்தியில் பேசிய பாபா, ""என்னை யாரும் கொலை செய்ய வரவில்லை'' என்றார். ஒருமாதம் கழித்து தப்பி ஓடிய  விஜய், ரவீந்திரா மகாராஷ்டிரா போலீஸாரால்  கைது செய்யப்பட்டனர். ""நாங் கள் பாபாவுக்கு மிகவும் நெருக்கமான பக்தர்கள். பாபாவுக்கு வரும் நன்கொடைகளை சிலர் திருடுகிறார்கள். இதை பாபாவிடம் சொல்லப் போனோம். "ஆதாரம் தாருங்கள் நடவடிக்கை எடுக்கிறேன்' என்று பாபா சொல்லிக் கொண்டிருக்கும்போது... கீழ் அறையில் ஓட்டுநரை யாரோ அடிக்கும் சத்தம் கேட்டது. பாபா அறையில் இருந்த அலாரத்தை அவர் இயக்கினார். எங்களுடன் வந்த 4 பேரும் ஓரிடத்தில் ஒளிந்துகொண்டனர். நாங்கள் தப்பித்துவிட்டோம். பாபாவின் படுக்கையறைக்கு பல முறை வந்து சென்ற பழக்கமுடையவர்கள் நாங்கள்'' என்றார்கள். 

 ஒன்றும் நடக்கவில்லை என்ற பாபாவின் ஸ்டேட்மென்ட்டை தொடர்ந்து லோக்கல் போலீஸ், சி.பி.ஐ. விசாரணை வரை சென்ற அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை கூட  18 வருடங்களாக தாக்கல் செய்யப்படவில்லை. "எங்களுக்கு நியாயம் வேண்டும்' என கோரிக்கை வைக்கிறார்கள் இறந்தவர்களின் உறவினர்கள்.

உலகம் முழுக்க  பரபரப்பாகப் பேசப்பட்ட இந்த வழக்கின் மர்மங்களை இறந்துபோன பாபா அதிசயங்கள் செய்து விளக்குவாரா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  

-பிரகாஷ்

source:nakkheeran

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails