Wednesday, February 9, 2011

கால்களுடன் பாம்பு! லெபனானில் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு


கால்களுடன் வாழ்ந்த பாம்பின் எலும்புக்கூடு லெபனானில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.பாம்புகள் ஊர்வன இனத்தை சேர்ந்தவை. அவைகளுக்கு கால்கள் கிடையாது. 

இதற்கு முன்பு கால்களுடன் பாம்புகள் இருந்ததற்கான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது. பழங்காலத்தில் வாழ்ந்த அரிய உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் லெபனானில் ஒரு பாம்பின் எலும்பு கூட்டை கண்டெடுத்தனர். 

சுமார் 19 "இஞ்ச்" நீள முள்ள அந்த பாம்பின் எலும்பு கூட்டில் கால்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. இவை சுமார் 9 1/2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. 

லெபனானில் கண்டெடுக்கப்பட்ட பாம்பின் எலும்பு கூட்டில் சுமார் "1 இஞ்ச்" அளவுக்கு கால் எலும்புகள் இருந்தன. அதே நேரத்தில் பாம்பின் வயிற்றுப் பகுதியில் கால்கள் வளர்ந்து வந்ததற்கான அறிகுறிகளும் இருந்தன. 

அந்த எலும்புகள் "1/2 இஞ்ச்" அளவில் வளர்ந்திருந்தன.இந்த வகை பாம்புகள் கால்கள் மூலம் நடந்து திரிந்ததால் நிலத்திலும், நீரிலும், பொந்துகளிலும் வாழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த வகை பாம்புகளின் கால்கள் காலப்போக்கில் படிப்படியாக மறைந்து அவை ஊர்வன இனத்தை சேர்ந்தவையாக மாறியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
source:tamilcnn
 
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails