கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்ந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 68 பேர் உயிரிழந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சந்தேக குற்றவாளியாக கருதப்பட்ட சுனில் ஜோஷி என்பவர், 2007 டிசம்பரில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
இதனிடையே மகாராஷ்ட்ரா மாநிலம் மாலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் பெண் சாமியார் சாத்வி பிராக்யா முக்கிய குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து அவர் மகாராஷ்ட்ரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்திலும் இந்துத்வா அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதில் சந்தேக குற்றவாளி சுனில் ஜோஷியின் கொலையுல் சாத்வி பிரக்யாவுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய பிரதேச காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மத்திய பிரதேச காவல்துறையினர் மும்பை வந்தனர்.
உடல் நலக்குறைவு காரணமாக மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வரும் பிரக்யாவை கைது செய்தனர்.
No comments:
Post a Comment