--
http://thamilislam.tk
அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
சியோல் : மத்திய கிழக்கில் தற்போது அரசுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் துவங்கியிருப்பதைப் போல, வடகொரியாவிலும் நடக்கக் கூடும் எனப் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகொரியாவில் கடந்த 1990க்குப் பின், பொது வினியோகத் திட்டத்தை அந்நாட்டு அரசு புறக்கணித்ததால், பஞ்சம் ஏற்பட்டது. 10 லட்சம் பேர் பசிக் கொடுமைக்குப் பலியாயினர். இந்நிலையில் இம்மாதத் துவக்கத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து தொண்டு நிறுவனங்கள், வடகொரியாவின் வடபகுதியில், சீன எல்லைக்கு அருகில் உள்ள பகுதியில், உணவுப் பாதுகாப்பு குறித்த ஆய்வுகள் நடத்தின.அதில், கடும் பனிப் பொழிவு, கனமழை, கால்நடைகள் மத்தியில் பரவிய தொற்று நோய் இவற்றால், 80 சதவீத அறுவடை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள மோசமான நிலைமை வெளிவந்தது. இந்நிலை நீடித்தால், அப்பகுதியில் உணவின்றி பல லட்சம் பேர் மாளக் கூடும் என்று அந்த அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன.
கைவிட்ட அமெரிக்கா: இதையடுத்து, அந்நாட்டு அரசு, பல்வேறு நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தனது தூதரகங்கள் மூலம் உணவு அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தது. ஆனால், அனுப்பி வைக்கப்படும் உணவுப் பொருட்களை தனது ராணுவத்துக்கு வடகொரிய அரசு பயன்படுத்தும் என்று அஞ்சிய ஐரோப்பிய நாடுகள், ஐ.நா.,வின் உலக உணவுத் திட்ட அமைப்பின் மூலம் அனுப்புவோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டன.இதற்கிடையில், ஏற்கனவே வடகொரியாவின் வடபகுதியில் உணவு வினியோகத்தில் ஈடுபட்டு வரும் உலக உணவுத் திட்ட அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்க்கஸ் ப்ரியர்,"தற்போது சேமிப்பில் உள்ள உணவு கூட இன்னும் ஒரு மாதத்துக்குத் தான் வரும்' என்று மற்றொரு குண்டைப் போட்டுள்ளார்.கடந்த 2009ல், வடகொரியாவுக்கு உணவு வழங்கி வந்த அமெரிக்காவும், அதன் அணுசக்தி உலைகளைப் பார்வையிட ஐ.நா., அணுசக்தி ஏஜன்சி பிரதிநிதிகளை அனுமதித்தால் ஒழிய உணவுப் பொருட்களை அனுப்பப் போவதில்லை என்று கைவிரித்து விட்டது.
வெடிக்குமா போராட்டம்?இந்நிலையில் வடகொரியாவின் வடபகுதியில், உணவுக்காக எந்நேரமும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற தகவல்கள் கிடைத்திருப்பதால், அப்பகுதிகளில், அதிபர் கிம் ஜாங் இல்லின் உத்தரவுப்படி ராணுவம் தனது பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.மேலும், போராட்டத்தைத் துவக்க ஒன்று கூடுவதற்கான முயற்சிகளை முறியடிக்கும் முன்னேற்பாடாக, வடபகுதி மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இணையதளம் மற்றும் மொபைல்போன் சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ரேடியோ மற்றும் "டிவி'க்களில் எகிப்து, லிபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி பற்றிய தகவல்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன.ஆனால், சீனாவில் இருந்து கள்ளத்தனமாகக் கடத்தி வரப்படும் "டிவிடி' மற்றும் மொபைல்போன்கள் மூலம் உலக செய்திகள் ஓரளவுக்கு வடபகுதி மக்களிடம் பரவி வருகின்றன.
அத்தகவல்கள் மக்களிடம் சேருமானால், வடகொரியாவிலும் உணவுக்காக மிகப் பெரும் எழுச்சி ஏற்படும் என்பதை அதிபர் உணர்ந்துள்ளதால், இந்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து ஆய்வு செய்து வரும் நிபுணர்கள், வடகொரியாவில் இணையதளத்தின் மீதான அரசின் முழுக்கட்டுப்பாடு, அதிபர் மீது விசுவாசம் வைத்துள்ள ராணுவம், தொழிலாளர் சங்கங்கள் அல்லது மத அமைப்புகள் அல்லது மற்ற அமைப்புகள் போன்ற மக்களை இணைக்கும் சக்திகள் இல்லாமை ஆகிய காரணங்களால், எகிப்து போன்ற மக்கள் எழுச்சி வடகொரியாவில் ஏற்பட வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.
இதற்கிடையில், தென்கொரிய எல்லையில் இருந்து உணவுப் பொருட்கள் அடங்கிய பலூன்கள் சில. வடகொரியாவுக்குள் பறக்கவிடப்பட்டுள்ளன. அவற்றில், வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறையால் நிகழப் போகும் பெரும் பஞ்சம், லிபியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள எழுச்சி போன்றவை அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் வைக்கப்பட்டுள்ளன.
ம்... காய்கறிகளின் விளைச்சல் அதிகமாகிவிட்டதால், விலையும் மெள்ள குறைய ஆரம்பித்துவிட்டது. இனி, காய்கறிகளுடன் தைரியமாகக் கூட்டணி போடலாம் என்கிற சூழலில்... இங்கே 30 வகை கூட்டுகளை மணக்க மணக்கப் பரிமாறுகிறார் சமையல் கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்
''காய்கறி, பருப்பு, பயறு, கிழங்குனு எல்லாத்தையும் கலந்து கட்டி அசத்தலாம்கிறதுதான் கூட்டுகளோட ஸ்பெஷாலிட்டியே! காய்கறிகளோட விலை, கண்காணாத உசரத்துக்கு எகிறினாலும் கவலைப்படத் தேவையில்ல. காய்கறிகளைக் குறைச்சலாவும், பருப்பு மற்றும் பயறு வகைகளைக் கூடுதலாவும் சேர்த்தா... அமர்க்களமான கூட்டு ரெடி. சப்புக் கொட்டிக்கிட்டே சாப்பிடலாமே!'' என்று சர்டிஃபிகேட் கொடுக்கிறார் வசந்தா விஜயராகவன்.
பிறகென்ன... காய்கறிகளோடு கூட்டணி போட்டு ஜமாயுங்க!
சௌசௌ மலபார் கூட்டு
தேவையானவை: சௌசௌ துண்டுகள் - 150 கிராம், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் மூன்றையும் விழுதாக அரைக்கவும். சௌசௌவில் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
சேனைக்கிழங்கு மிளகு கூட்டு
தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய சேனைக்கிழங்கு - 150 கிராம், உளுத்தம்பருப்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். சேனைக்கிழங்கை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். அரைத்து வைத்துள்ள கலவை, உப்பு ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.
கத்திரிக்காய்-போண்டா புளிக் கூட்டு
தேவையானவை: கத்திரிக்காய் - 4, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
வறுத்து அரைக்க: தனியா - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயம் - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்.
போண்டா செய்ய: உளுத்தம்பருப்பு - 100 கிராம் (ஊற வைக்கவும்).
செய்முறை: கத்திரிக்காயை நறுக்கி, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் குக்கரில் வேக வைக்கவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து அரைக்கவும். ஊறிய உளுத்தம்பருப்புடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து, போண்டாவாக உருட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். புளியைக் கரைத்து, வேக வைத்த கத்திரிக்காயில் விட்டு, வேக வைத்த துவரம்பருப்பு, கடலைப்பருப்பை போடவும். அரைத்து வைத்திருக்கும் பொடியையும் போட்டு கொதிக்கவிடவும். உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்குவதற்கு முன்பு பொரித்த போண்டாக்களைப் போட்டு ஒரு முறை கிளறி இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.
காலிஃப்ளவர் மசாலா கூட்டு
தேவையானவை: காலிஃப்ளவர் - 100 கிராம் (உப்பு கலந்த நீரில் போட்டு எடுத்தால், புழுக்கள் நீங்கிவிடும்), மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், நறுக்கிய தக்காளி, வெங்காயம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காலிஃப்ளவரில் மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும். வேக வைத்த காலிஃப்ளவரை சிறிது எண்ணெயில் போட்டு பொரித்து தனியாக எடுத்து வைக்கவும். பொரித்து மீதமுள்ள எண்ணெயில் தக்காளி, வெங்காயத்தைப் போட்டு வதக்கி... கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, காலிஃப்ளவர் வேக வைத்த தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். கெட்டியாக வரும்போது பொரித்து வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை அதில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
மிக்ஸ்டு வெஜிடபிள் கூட்டு
தேவையானவை: நறுக்கிய கேரட், பீன்ஸ், அவரைக்காய், புடலங்காய் சேர்ந்த கலவை - கால் கிலோ, கடுகு, சீரகம், தனியா - தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 3, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்கறிகளை உப்பு போட்டு வேக வைக்கவும். தனியா, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெந்த காய்கறிகளில் அரைத்த விழுதைக் கொட்டி, நன்றாகக் கொதித்ததும் சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், இஞ்சி தாளித்துக் கொட்டி இறக்கவும்.
சாம்பார் வெங்காயம் புளிக் கூட்டு
தேவையானவை: உரித்த சாம்பார் வெங்காயம் - 150 கிராம், புளி - எலுமிச்சம்பழ அளவு, துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து அரைக்கவும். துவரம்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். புளியைக் கரைத்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை வதக்கி, புளிக் கரைசல் விட்டு வேக வைக்கவும். அரைத்த விழுதை அதில் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
கொத்தவரங்காய் - மிளகு பொரித்த கூட்டு
தேவையானவை: கொத்தவரங்காய் - 150 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொத்தவரங்காயில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து, தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த கொத்தவரங்காயுடன் அரைத்த விழுது சேர்த்து, கொஞ்ச நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
பரங்கிக்காய் பால் கூட்டு
தேவையானவை: பரங்கிக்காய் - ஒரு கீற்று, பால் - அரை டம்ளர், பச்சை மிளகாய் - 2, சர்க்கரை - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பரங்கிக்காயைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்த்துக் குழையாமல் வேக விடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய் இரண்டையும் அரைத்து, வெந்த பரங்கிக்காயுடன் சேர்த்து கொதிக்க வைத்து, சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். கடைசியில் பால் விட்டுக் கலக்கவும்.
காரம், தித்திப்பு என கலக்கலாக இருக்கும் இந்தக் கூட்டு.
பாகற்காய் புளிக் கூட்டு
தேவையானவை: நறுக்கிய பாகற்காய் - 100 கிராம், புளி - எலுமிச்சம்பழ அளவு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயம் - சிறு துண்டு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பாகற்காயுடன் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து, தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து... வெந்த பாகற்காய், பருப்புடன் சேர்த்து, மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும். அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். தாளிக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.
தக்காளி பிட்லை
தேவையானவை: தக்காளித் துண்டுகள் - 100 கிராம் (தக்காளி செங்காயாக இருக்க வேண்டும்), துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தனியா, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும். தக்காளித் துண்டுகளுடன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, உப்பு, வேக வைத்த பருப்பு, அரைத்த விழுது சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். கூட்டு பதத்தில் வந்ததும், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.
அவரைக்காய் பொரித்த கூட்டு
தேவையானவை: நறுக்கிய அவரைக்காய் - 100 கிராம், பயத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், ரசப்பொடி - அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவரைக்காயுடன் பயத்தம்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும். இதனுடன் உப்பு, ரசப்பொடி சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
பாகற்காய்-எள்ளு புளிக் கூட்டு
தேவையானவை: பாகற்காய் துண்டுகள் - 100 கிராம், எள்ளு - 2 டீஸ்பூன், கெட்டியான புளிக் கரைசல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள், - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயம் - சிறிதளவு, வெல்லம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சிறிது எண்ணெயில் எள்ளு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து... பாகற்காய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பாகற்காய் நன்கு வதங்கியதும் புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். புளி வாசனை போனதும் வறுத்துப் பொடித்த எள்ளு, மிளகாய்த்தூள் சேர்த்து, மேலும் கொதிக்க வைத்து, எண்ணெய் பிரிந்து நன்றாக கெட்டியானதும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.
கொண்டைக் கடலை புளிக் கூட்டு
தேவையானவை: கொண்டைக் கடலை - 150 கிராம், கெட்டியான புளிக் கரைசல் - 2 டேபிள்ஸ்பூன், சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், கடலை மாவு - ஒரு டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: முந்தைய நாளே கொண்டைக் கடலையை ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். கடாயில் புளிக் கரைசலை விட்டு... உப்பு, சாம்பார் பொடி சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து புளிக்கரைசலில் கொட்டவும். வேக வைத்த கொண்டைக் கடலையையும் கொட்டவும். பிறகு, சிறிது தண்ணீரில் கரைத்த கடலை மாவை அதில் சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.
வெள்ளைப் பூசணி மோர் கூட்டு
தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய வெள்ளைப் பூசணி துண்டுகள் - 200 கிராம், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கெட்டி மோர் - ஒரு டம்ளர், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பூசணிக்காய் துண்டுகளை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து, காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் வேக வைத்த பூசணிக்காய் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, மோர் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
வாழைத்தண்டு புளிக் கூட்டு
தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - 150 கிராம், கெட்டியான புளிக் கரைசல் - 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன்.
வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, தேங்காய் துருவல் - கால் கப்.
செய்முறை: வாழைத்தண்டில் மஞ்சள்தூள் சேர்த்து, புளிக் கரைசலை விட்டு வேக விடவும். பருப்புகளை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வறுக்க கொடுத்தவற்றை வறுத்து அரைக்கவும். இந்த விழுதை வேக வைத்த வாழைத்தண்டு, பருப்புகளுடன் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து, கெட்டியானதும் இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.
மிக்ஸ்டு வெஜிடபிள் புளிக் கூட்டு
தேவையானவை: நறுக்கிய வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, அவரை, பீன்ஸ், கேரட் துண்டுகள் எல்லாம் சேர்த்து - 200 கிராம், கடுகு, மஞ்சள்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், தனியா - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, புளி - எலுமிச்சை அளவு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, அவரை, பீன்ஸ், கேரட் துண்டுகளுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளியைத் தண்ணீர் விட்டு கரைத்து ஊற்றி வேகவிடவும். கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெயில் வறுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை வெந்த காய்கறிக் கலவையில் கொட்டி, கொதிக்க விடவும். கெட்டியானதும் இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துச் சேர்க்கவும்.
சேப்பங்கிழங்கு-தக்காளி ரோஸ்டட் கூட்டு
தேவையானவை: வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து எடுத்த சேப்பங்கிழங்கு - 150 கிராம், கடுகு, மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 50 கிராம், தக்காளி சாறு - ஒரு கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதில் தக்காளி சாறு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். வறுத்து வைத்துள்ள சேப்பங்கிழங்கை கடைசியாக சேர்த்து, இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
சாதம், சப்பாதிக்கு ஏற்ற சைட் டிஷ் இது!
பூசணி வடகம் புளிக் கூட்டு
தேவையானவை: நறுக்கிய பூசணித் துண்டுகள் - 250 கிராம், பூசணி வடகம் - 10, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
பூசணி வடகம் செய்ய: 100 கிராம் உளுத்தம்பருப்பை ஊற வைத்து, 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து, 50 கிராம் பூசணி துருவலை கலந்து... ஒரு டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து சிறிய உருண்டையாக செய்து, வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும்.
செய்முறை: புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். பூசணித் துண்டுகளை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து, புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் பூசணி வடகத்தை வறுத்து சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
மரவள்ளிக் கிழங்கு புளிக் கூட்டு
தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய மரவள்ளிக் கிழங்கு - 200 கிராம், தேங்காய்ப் பால் - ஒன்றரை டம்ளர், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மரவள்ளிக் கிழங்கு துண்டுகளைத் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து நன்கு வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தாளித்து... தக்காளி, வெங்காயம், சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு, உப்பு போட்டு, வெந்த மரவள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
சாப்பாடு, டிபன் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் இது!
சேப்பங்கிழங்கு-தேங்காய்ப் பால் கூட்டு
தேவையானவை: வேக வைத்து தோலுரித்த சேப்பங்கிழங்கு - 150 கிராம், கெட்டியான தேங்காய்ப் பால் - தலா ஒன்றரை டம்ளர், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: தேங்காய்ப் பாலில் சேப்பங்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி கலக்கவும்.
பொடி சேர்த்த காய்கறி கூட்டு
தேவையானவை: மீந்து போன காய்கறிக் கலவை (வீட்டில் மிச்சம் மீதி இருக்கும் எந்த காயையும் சேர்க்கலாம்) - 200 கிராம், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், வேக வைத்த பயத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: காய்கறியில் தேவையான தண்ணீர் விட்டு மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். வெந்த பயத்தம்பருப்பு, உப்பு, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள் போட்டு, வெந்த காய்களையும் போட்டு மேலும் 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்க வும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கிக் கொட்ட வும்.
பாகற்காய்-கொண்டைக் கடலை கூட்டு
தேவையானவை: பொடியாக நறுக்கிய பாகற்காய் - 200 கிராம், வேக வைத்த கொண்டைக் கடலை - 100 கிராம், புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3.
செய்முறை: கொண்டைக் கடலையை வேக வைத்து கரகரப்பாக அரைக்கவும். புளியை தண்ணீர் விட்டு கரைத்து பாகற்காயில் ஊற்றி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். புளிக் கரைசல், அரைத்த விழுது, வெந்த பாகற்காய், அரைத்த கொண்டைக் கடலை சேர்த்து கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து சேர்க்கவும்.
பீட்ரூட்-தேங்காய் கூட்டு
தேவையானவை: பொடியாக நறுக்கிய பீட்ரூட் - 150 கிராம், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தேங்காய் துருவல், பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். நறுக்கிய பீட்ரூட்டை இதில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். இஞ்சி பேஸ்ட், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி... கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
காராமணி-வேர்க்கடலை புளிக் கூட்டு
தேவையானவை: காராமணி - ஒரு கப், வேர்க்கடலை - அரை கப் (2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்), புளி - எலுமிச்சை அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3 (சிறிது எண்ணெயில் வறுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்).
செய்முறை: காராமணியையும், வேர்க்கடலையையும் ஒன்றாக வேக வைக்கவும். புளியைத் தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்து இதில் ஊற்றி, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து... கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.
கேரட்-பீன்ஸ்-இஞ்சி கூட்டு
தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் - தலா 100 கிராம், இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - கால் கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கடாயில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுக்கவும். பிறகு நறுக்கிய காய்கறிகள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, தேவையான தண்ணீர் விட்டு வேகவிடவும். இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து, கொதிக்கும் காய்கறி கலவையில் சேர்த்து, உப்பு போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பரங்கிக்காய் - காராமணி கூட்டு
தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய பரங்கிக்காய் - 150 கிராம், ஊற வைத்து, வேக வைத்த காராமணி - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை கரகரப்பாக அரைக்கவும். பரங்கிக் காயுடன் வேக வைத்த காராமணியை சேர்த்து தண்ணீர் விட்டு, உப்பு, அரைத்த விழுதைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.
சுட்ட கத்திரி கூட்டு
தேவையானவை: பெரிய கத்திரிக்காய் - 1, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் - தலா 50 கிராம், புளி - சிறிய எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கத்திரிக்காயின் மேல் எண்ணெய் தடவி, அடுப்பின் மீது வைத்து மிதமான தீயில் சுட்டெடுக்கவும். தோல் நன்றாக சுருங்கியதும் ஆற வைத்து, தோல் உரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்துக் கொள்ளவும். புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து... உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து, நறுக்கிய தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு, மசித்து வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து வதக்கி... புளிக் கரைசல், பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.
வாழைக் கச்சல் (பிஞ்சு) கூட்டு
தேவையானவை: நறுக்கிய கச்சல் வாழைக்காய் - 150 கிராம், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தேங்காய் துருவல், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து, தண்ணீர் தெளித்து அரைக்கவும். வாழைக்காயில் மஞ்சள்தூள் சேர்த்து லேசாக வேக வைக்கவும். அரைத்த விழுதை அதில் சேர்த்து, உப்பு போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
சேனை புளிச்சேரி
தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய சேனைக்கிழங்கு - 150 கிராம், காய்ந்த மிளகாய் - 2, மிளகு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல், கெட்டி மோர் - தலா 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சிறிதளவு தேங்காய் எண்ணெயில் மிளகு, காய்ந்த மிளகாயை வறுத்து தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். இறக்கும்போது கெட்டி மோர் விட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
உருளைக்கிழங்கு-தேங்காய்ப் பால் கூட்டு
தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய உருளைக்கிழங்கு - 200 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பால் - ஒரு டம்ளர், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சி, பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி, உருளைக்கிழங்கு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். இஞ்சி - பச்சை மிளகாய் விழுதை சேர்த்துக் கிளறி, கடைசியாக தேங்காய்ப் பால், உப்பு சேர்த்து இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
இந்தக் கூட்டு சப்பாத்தி, அடைக்கு தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும் .
ஈழத் தமிழர் வாழ்விலும் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தையும் தாயும் நோய்வாய்பட்டு இறந்தமையானது முக்கியத்துவம் பெறுகிறது.
மக்களோடு மக்களாக இருவரும் வெட்டுவாகல் ஊடாகச் செட்டிகுளம் முட்கம்பி முகாம் கொண்டு செல்லப்பட்ட காட்சி கல்நெஞ்சரையும் உருகவைக்கும் சோக நிகழ்ச்சியாகும். பக்க வாதத்தால் பீடிக்கப்பட்ட பிரபாகரன் அவர்களின் தாயார் சக்கர நாற்காலியில் வைத்து அந்த ஐனசமுத்திரத்தின் ஊடாகத் தள்ளிச் செல்லப்பட்டார்.
இரத்த அழுத்தம் உட்பட வயிற்றோட்டம், தலைச்சுற்று போன்ற ஒரு தொகுதி நோய்களால் துன்புற்ற பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை தூக்கிச் செல்ல முன்வந்த அன்பர் உதவியை ஏற்க மறுத்தார். அவர் பலமுறை தரையில் வீழ்ந்தார் மீண்டும் எழுந்து நடை பயணத்தை தொடர்ந்தார்.
Stars with their fathers
மேட்டூர் : தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், 3 ஜி மொபைல் உதவியால் இயங்கும் தானியங்கி ரோபோ துப்பாக்கியை, தமிழக எல்லையில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவியர் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பிடமனேரியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (43). இந்தியன் கல்வி அறக்கட்டளை நிறுவி நடத்தி வரும் ஜெயபாண்டியன், வீட்டு வேலை செய்யும் ரோபோ, தானியங்கி சிக்னல் உட்பட, 128 அறிவியல் படைப்புகளை உருவாக்கியுள்ளார்.தொடர்ந்து, ஜெயபாண்டியன் தர்மபுரி மாவட்டம், நாகாவதி அணை அரசு துவக்க பள்ளி மாணவர்கள் உதவியோடு, 3ஜி மொபைல் போன் மூலம் இயங்கும் தானியங்கி ரோபோ துப்பாக்கியை வடிவமைத்துள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் மால்கோ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் நேற்று, ரோபோ துப்பாக்கியை ஜெயபாண்டியன் இயக்கிக் காட்டினார்.
நிகழ்ச்சியில், மால்கோ பள்ளி முதல்வர் தேவராஜ், ஆசிரிய, ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஜெயபாண்டியன் கூறியதாவது:"தர்மபுரியில், "மாணவர்கள் மியூசியம்' என்ற பெயரில் ஒரு கண்காட்சிக் கூடம் அமைக்க உள்ளோம். அதில், என் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் மாணவர்கள் உதவியுடன் உருவாக்கிய அறிவியல் சாதனங்கள் வைக்கப்படும்.இந்த கண்காட்சிக்கூடம், மாணவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். எங்கள் புதிய கண்டுபிடிப்பான ரோபோ துப்பாக்கியை ஆட்கள் இல்லாமல் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்க முடியும். துப்பாக்கியின் ஒரு முனையில் 3ஜி மொபைல் வைத்து விட்டால் போதும், எந்த நாட்டில் இருந்தும் மற்றொரு, 3 ஜி மொபைல் மூலம் துப்பாக்கியில் உள்ள, 3ஜி மொபைலை தொடர்பு கொண்டு, துப்பாக்கியை இயக்கி இலக்கை நோக்கி குறி பார்த்து சுட முடியும்.
நாட்டின் எல்லைப் பகுதியில் வீரர்களே இல்லாமல், துப்பாக்கி, 3ஜி மொபைல் மட்டுமே வைத்து விட்டு அலுவலகத்தில் இருந்தவாரே கண்காணித்து இலக்கை சுட முடியும். இதில் உள்ள தொழில்நுட்பத்தை மேம்படுத்தி ராணுவத்திலும் பயன்படுத்த முடியும். விரைவில், தர்மபுரியில் இந்திய அளவிலான போட்டி நடத்தவுள்ளோம்.பங்கேற்கும் போட்டியாளர்கள் நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் இருந்தாலும், அங்கு இருந்தவாறே மொபைல் மூலம் தர்மபுரியில் உள்ள வீட்டு வேலை செய்யும் ரோபோ மற்றும் 3ஜி ரோபோ துப்பாக்கியை இயக்கி சுட வேண்டும். சிறப்பாக இயக்கிக் காட்டுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்' என்றார்.
நாகாவதி அணை அரசு துவக்கப் பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தராஜ் கூறியதாவது:ரோபோ துப்பாக்கியை வடிவமைக்க, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியது. செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ரோபோ துப்பாக்கி உதிரி பொருட்களை எங்கள் மாணவர்கள் சேகரித்து வழங்கினர். துப்பாக்கியை தனித்தனியாக பிரித்து, மீண்டும் பொருத்தும் அளவுக்கு எங்கள் பள்ளி மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர், என்றார்.