Monday, December 19, 2011

செல்போன்... லேப்டாப்... கிளுகிளு படம்!

கடலூரில் 'ஆபாச' ஆசிரியர்


பெற்றோர்களும், பொதுமக்களும் கூட்டமாகத் திரண்டுபோய், ஒரு ஆசிரியரை அடித்துத் துவைத்து, பள்ளியை விட்டு விரட்டி அடித் திருக்கிறார்கள். 

என்ன பிரச்னை?

கடலூர் மாவட்டம், சங்கொலிகுப்பத்தில் இருக் கிறது அரசு நடுநிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் ஆசிரி யராகப் பணி புரியும் சுந்தரமூர்த்தி என்பவர்தான், அந்த ஆசிரியர். நடந்ததைச் சொல்கிறார், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பத்மநாபன். ''1982-ல் இந்த பள்ளி துவக்கப் பள்ளி யாக ஆரம்பிக்கப்பட்டு, தற்போது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கே 250-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கிறாங்க. இந்த ஸ்கூல்ல எட்டாவதுக்கு வகுப்புக்கு பாடம் நடத்துறவர்தான் சுந்தரமூர்த்தி வாத்தி யார். அவர் செஞ்ச காரியத்தைச் சொல்லவே கூசுது.

அவரோட செல்போன்ல ஆபாச வீடியோவையும் போட் டோக்களையும் டவுன்லோடு பண்ணிக்கொண்டு வருவாராம். இன்டர்வெல் டைம்ல பொம்பளை புள்ளைங்களை மட்டும் கூப்பிட்டு, அந்த வீடியோவைக் காட்டுவாராம். சின்னப் பிள்ளைங்க என்பதால், விபரம் புரியாமப் பாத்திருக்காங்க. 'பார்த்ததை யாருகிட்டேயும் சொல்லக்கூடாது'னு மிரட்டியிருக்கார்.

ஆனா ஒரு பிள்ளை விஷயத்தை வீட்ல சொல்லவே, அவங்க அதிர்ச்சி அடைஞ்சிருக்காங்க. உடனே மத்த குழந்தைகளோட பெற்றோர்களிடமும் சொல்லி இருக்கார். அவங்களும் குழந்தைங்ககிட்ட விசாரிச்ச போது, 'ஆமா... சாரு படம் காட்டுவார். அதுல ஆம்பளையும் பொம்பளையும் கட்டிப் புடிச்சிக்கிட்டு இருப்பாங்க'ன்னு சொல்லி இருக்காங்க.

விஷயம் கேள்விப்பட்டு நாங்க எல்லோருமா ஸ்கூலுக்குப் போனோம். சுந்தரமூர்த்தியோட செல்போனை பிடுங்கிப் பார்த்தோம். செல்போன்ல நிறைய ஆபாசப் படங்களை வெச்சிருந்தார். கேட்டதுக்கு, 'இது என்னோட செல்போன் இல்லை. என் ஃபிரண்டுகிட்ட இருந்து வாங்கிட்டு வந்தேன்'னு சொன்னார். வந்த கோபத்துல நாங்க எல்லோரும் சேர்ந்து அந்த ஆளை அடிச்சித் துரத்திட்டோம். போலீஸ்ல புகார் கொடுத்தா, புள்ளைங்களுக்கும், பள்ளிக்கூடத்துக்கும் நல்லதில்லைன்னு போகலை.  அந்த செல்போன் இப்போ தலைமை ஆசிரியர்கிட்ட இருக்குது'' என்று சொன்னார்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர் களிடம் விசாரித்தால் சுந்தரமூர்த்தி பற்றி கதை கதையாகச் சொல் கிறார்கள். ''எப்பவும் பாடம் நடத்தும் போது, இரண்டு பொம்பளைப் புள் ளைங்களை மட்டும் கூப்பிட்டு பக்கத்துல நிக்க வச்சிக்குவார். யாராவது ஒரு பொண்ணு உடம்பு சரியில்லைன்னு ஸ்கூலுக்கு லீவு போட்டா, மறு நாள் வந்ததும் சட்டைக்குள்ள கை விட்டு காய்ச்சல் எப்படி இருக்குன்னு டெஸ்ட் பண்ணுவார். பொண்ணுங்க யாராவது பூ வெச்சிக்கிட்டு வந்தால், 'என்னடி பூவெல்லாம் வச்சிருக்க.. நீ பூத்துட்டியா'ன்னு கேட்பார். ஒரு சில பொண்ணுங்களை செல்போன்ல படம் எடுப்பார். பொண்ணுங்க யாரா இருந்தாலும் தொட்டுத்தான் பேசுவார்.

எப்பவாச்சும் லேப்டாப் கொண்டு வருவார். எங்களை படிக்கச் சொல்லிட்டு, அதுல அசிங்கமான படம் பார்த்துட்டு இருப்பார். பொண்ணுங்களை மட்டும் பக்கத்தில் கூப்பிட்டு படம் காட்டுவார்'' என்கிறார்கள்.

பள்ளியின் தலைமை ஆசிரியை விமலா சகாயமேரியிடம் பேசினோம். ''நான் இந்தப் பள்ளிக்கு வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. பிரச்னைக்கு பிறகு ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் விசாரிச்சபோதுதான், அவரைப்பத்தி சில தப்பான தகவல்களைச் சொல்றாங்க. இதுக்கு மேல இந்த விவகாரம் தொடர்பாக நான் பேசக்கூடாது'' என்றார்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சாந்தியின் கவனத் துக்கு இந்த விவகாரம் போகவே, அவர் நேரடியாக பள்ளிக்குப் போய் விசாரணை நடத்தியிருக்கிறார். சாந்தியிடம் பேசினோம். ''சுந்தரமூர்த்தியோட கிளாஸ்ல படிக்கும் ஸ்டூடண்ட்ஸ், அந்தக் கிராமத்து மக்கள்னு எல்லோரிடமும் விசாரணை நடத்தினேன். நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மைதான் என்று தெரிகிறது. அதனால் சுந்தரமூர்த்தியை உடனடியாக சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். தொடர்ந்து துறை ரீதியான மேல் நடவடிக்கைக்கும் உத்தரவு போட்டிருக்கிறோம்'' என்றார்.

சுந்தரமூர்த்தியின் விளக்கத்தைக் கேட்க பல வழிகளில் முயற்சி செய்தோம். ''வீட்டுல யாரும் இல்லைங்க. எல்லோரும் வெளியூர் கிளம்பிப் போயிட்டாங்க. யாருடைய செல்போனும் எடுக்கல.  எல்லோருடைய செல்லும், ஆஃப் ஆகியிருக்கு...'' என்று அக்கம்பக்கத்தினர் சொன்னார்கள். சுந்தரமூர்த்தி அவரது விளக்கத்தைச் சொன்னால், அதைப் பிரசுரிக்கவும் தயாராகவே இருக்கிறோம்.

குழந்தைகள் எதிர்கால வாழ்க்கைக்கு வழி காட்டவேண்டிய ஆசிரியர்களே, எதிர்காலத்தைக் கெடுக்கும் செயலைச் செய்வது வேதனை. இதுபோன்ற குற்றம் நிரூபிக்கப்படால், கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்!

க.பூபாலன், படங்கள்: ஜெ.முருகன்


source:vikatan


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails