!
இலங்கையில் ஆபாசப் படங்களைக் மற்றவர்களுக்கு காட்டுவதே குற்றம்
ஆபாச பிரசுரங்களை விநியோகித்தல், பார்வையிடுதல், வெளியிடுதல், பிரசுரித்தல், வைத்திருத்தல், காண்பித்தல் போன்வற்றை தடுப்பதற்காக கடுமையான சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. குறிப்பாக சிறுவர், சிறுமியரை மையப்படுத்தி பாலியல் ரீதியான ஆபாச வெளியீடுகளுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கும் விதத்தில் புதிய சட்டம் அமுலுக்கு வரவுள்ளது. நீதியமைச்சு இது தொடர்பான சட்டத்தை தயாரித்து வருவதாக நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்தார். சிறுவர்களை, சிறுமியர்களை மையப்படுத்திய ஆபாச பிரசுரங்களை, வீடியோக்களை, புகைப்படங்களை இறக்குமதி செய்தல், தயாரித்தல், அருகில் வைத்திருத்தல், பிரசுரித்தல், மற்றவருக்கு காண்பித்தல், மற்றவருக்கு அனுப்புதல், செலியூலர் தொலைபேசியூடாக மற்றவருக்கு அனுப்புதல், காண்பித்தல், கணனியில் ஆவணப்படுத்துதல், மற்றவருக்கு இணைய வழியாக அனுப்புதல், காண்பித்தல், போன்றன குற்றச் செயல்களாக கருதப்படுகிறது.
இக்குற்றச் செயல்களுக்கு உள்ளான ஒருவருக்கு இரண்டு வருடத்துக்கு குறையாத 10 வருடத்துக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது இரண்டு லட்சம் ரூபா தண்டப்பணமும் அல்லது இவை இரண்டுக்கும் உள்ளாக்கப்படுவார். இரண்டாவது தடவையாக இவர் குற்றவாளியாக காணப்பட்டால் 5 இலட்சத்துக்கு குறையாத தண்டப்பணம் அல்லது 20 வருடத்துக்கு குறையாத சிறத்தண்டனை அல்லது இவை இரண்டுக்கும் உள்ளாக்கப்படுவார். தேவேளை கணனிகளுக்கான சேவை வழங்குநர்கள் தாம் வழங்கும் சேவையினூடாக ஆபாச படங்கள், வீடியோக்கள் பார்க்க முடியாது என்ற உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும்.
அவ்வாறு சேவை வழங்குநர்கள் மூலம் ஆபாச படங்கள், வீடியோக்கள் பார்த்ததாக அல்லது வைத்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டால் மூன்று இலட்சம் ரூபாவுக்கு குறையாத 5 இலட்சம் ரூபாவுக்கு மேற்படாத தண்டப்பணத்தை செலுத்த வேண்டியவராக இருப்பார். இச்சட்டம் விரைவில் அமுலுக்குக் கொண்டுவரப்படவுள்ளதுடன் நீதியமைச்சு இச்சட்டத்தை சட்டவரைஞர் திணைக்களத்திடம் கையளிக்கவுள்ளது. நவீன தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்ததன் பின்னர் கணனிகள், இணையங்கள், செலியூலர் தொலைபேசிகள் ஊடாக ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரித்துள்ள மையை கட்டுப்படுத்தும் நோக்குடன் இப்புதிய கடுமையான சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்படுகிறது.
http://thamilislam.tk
No comments:
Post a Comment