லிபிய அதிபர் கடாபியை புரட்சிப்படையினர் கழுத்தில் கட்டி இழுத்துவரும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அவர் தங்கிருந்த நகருக்குள் இன்று காலை திடீரென நுழைந்த புரட்சிப்படையினர் அவர் இருக்கும் இடத்தை நோக்கி பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்து வெளியே புறப்படவிருந்த வாகனங்களைக் குறிவைத்து துல்லியமான தாக்குதலை நேட்டோப் படையினர் மேற்கொண்டுள்ளனர். இத் தாக்குதலில் ஆளில்லா வேவு விமானங்கள் மற்றும் செய்மதிகளின் உதவியும் பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சண்டை நடந்த இடத்தில் இருந்து அவரால் தப்பிச் செல்ல முடியவில்லை. இதேவேளை நேட்டோப் படைகளின் தாக்குதலில் அவர் ஏற்கனவே காயமடைந்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனை அடுத்து அவர் மறைந்திருந்த இடத்தில் புகுந்த புரட்சிப் படையினர் அவர் இருப்பிடத்தை நோக்கிச் சுட்டவாறு முன்னேறியுள்ளனர். இறுதியில் காயமடைந்த கடாபியை புரட்சிப் படையைச் சேர்ந்த ஒருவர் தலையில் சுட்டுள்ளார். அவர் உடலத்தை கட்டி இழுத்து வெளியே வந்து மோபைல் போனில் சிலர் படம் எடுத்துள்ளனர். அந்தக் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. அவர் ஒரு குற்றமிழைத்தவராக இருந்தால் கூட அவரை நீதி மன்றத்தில் நிறுத்தி அதற்கான தண்டனையைப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும். ஆனால் காட்டு மிராண்டித்தனமாக இவ்வாறு அவரைக் கொலைசெய்தால் அவருக்கும் புரட்சிப்படைகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ?
கடாபி கொல்லப்படவேண்டும் என்பதும் புரட்சிப்படையின் விருப்பமாக இருக்கிறதோ இல்லையோ அமெரிக்காவின் நீண்ட நாள் விருப்பமாக இருந்திருக்கிறது. மேற்குலகிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கடாபியை ஒழித்துக்கட்டிய சந்தோஷத்தில் அமெரிக்கா மிதக்கிறது. ஆனால் இனித்தான் அந் நாட்டில் பாரிய பின் விளைவுகள் ஏற்படவிருக்கிறது என்பதனை எவரும் உணர்ந்த பாடாக இல்லை. பிரான்ஸ் நாடு மட்டும் சுமார் 20,000 வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை புரட்சிப்படைகளுக்கு வழங்கியுள்ளது. இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் அதில் ஒன்றைக்கூட அவர்கள் பாவிக்கவில்லை. ஒன்றில் விலைமட்டும் பல ஆயிரம் டாலர்களைத் தாண்டும். அவற்றை புரட்சிப் படைகளில் உள்ளவர்கள் சிலர் விற்றும் வருகின்றனர். இவை அல்கைடா மற்றும் தலபான் தீவிரவாதிகள் கைகளில் சென்று கிடைக்கவிருக்கிறது என்பதனையும் எவரும் மறுக்க முடியாது.
கடாபியின் படைகளை எதிர்த்துப் போராடவேண்டும் என்பதற்காக மேற்குலகம் பல நவீன ரக ஆயுதங்களை புரட்சிப் படையினருக்கு வழங்கியது. ஆனால் அவை அனைத்தும் தற்போது எங்கே என்ற கேள்விகள் எழுந்துள்ளது. கடாபியின் மறைவிற்குப் பின்னர் நடக்க விருக்கும் பாரிய அழிவை மக்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். கடாபி கொல்லப்பட்டது சரி என்றும் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தினால் கூட அவருக்கு தூக்குத் தண்டனை தான் கிடைத்திருக்கும் என மேற்குலகின் ஊதுகுழலான சர்வதேச தொலைக்காட்சிகள் தெரிவித்துவருகின்றன. அனால் இதே மேற்குலகம் தான் , தாம் பாரிய ஜனநாயக நாடு என்று தம்மைத் தாம்மே சொல்லியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னைய செய்தி (இணைப்பு 1,2)
நீண்ட நாள் போருக்கு பின் லிபியாவில் உள்ள "சிர்டேவில்" நடந்த துப்பாக்கிச் சண்டையில் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடாபி 1969ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 42 ஆண்டுகளாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சி புரிந்துள்ளார். சமீபத்தில் இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. அமெரிக்கா, சில ஐரோப்பிய நாடுகளின் மறைமுக ஆதரவோடு நடந்த இந்தப் புரட்சிப் படையினர் பல நகர்களைப் பிடித்தனர். தற்போது இறுதியாக அவர் தங்கியிருந்த நகர் புரட்சிப்படைகளால் இன்று முற்றுகைக்கு உள்ளாகியது. இருப்பினும் அவர் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் காணப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புரட்சிப் படையினர் அவரை உயிருடன் பிடித்து பின்னர் சுட்டுக்கொண்றதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. பி.பி.சி அல்ஜசீரா போன்ற சர்வதேச தொலைக்காட்சிகள் இவர் இறந்ததை தெரிவிக்க இழுத்தடிக்கின்ற நிலையில் சிரியா மற்றும் அரபு நாடுகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் அடிப்படியில் அவர் கொல்லப்பட்டார் என்பது உறுதியாகிறது. இதேவேளை புரட்சிப் படையினருக்கு ஆதரவாக நேட்டோப் படையினர் வான் தாக்குதலை நடத்தியதோடு ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.
http://thamilislam.tk
No comments:
Post a Comment