Friday, October 12, 2012

முஹம்மது : கூட்டு படுகொலைகாரர்(A Mass Murderer)முஹம்மது : கூட்டு படுகொலைகாரர்(A Mass Murderer)


யத்ரிபிலும் அதை சுற்றியும் பனு கைனுகா, பனு நதிர், பனு குரைலா என்ற மூன்று யூத குலத்தார் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்களுடைய புதிய தீர்க்கதரிசியாக(நபி) தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று முஹம்மது உணர்ந்து கொண்டவுடன், அவர்களுக்கு எதிராக அவர் திரும்பினார். முதல் இரண்டு குலத்தினரை, அவர்களுடைய சொத்துக்களையும் செல்வத்தையும் பறித்துக்கொண்ட பிறகு, அவர்களுடைய பூமியிலிருந்து துரத்திவிட்டுவிட்டு, கடைசி குலத்தினரை அவர் படுகொலை செய்தார்.
பனு குரைலாவை  இனப்படுகொலை செய்தது ("முகம்மதுவை புரிந்து கொள்ளுதல்" என்பதிலிருந்து)
  பனு குரைலாவே  முஹம்மதின் பழிவாங்கும் படலத்திற்கு  பலியான யத்ரிபின் கடைசி யூத குலம். அகழ் யுத்தம் முடிந்த உடனே, தங்களுடைய வணிக கூட்டங்களின் மீது தொடர்ந்து  முஹம்மது செய்து வந்த அதிரடி கொள்ளை தாக்குதல்களால் வெறுத்துப்போன மக்கா வாசிகள், அவரை  தண்டிப்பதற்காக மதினாவின் வாசல்கள் வரை வந்தனர். ஒரு பாரசீக நம்பிக்கையாளரால் அறிவுறுத்தப்பட்டபடி, முஹம்மதின் எதிரிகள்(சங்கத்தினர்கள்) நகருக்குள் நுழைவது என்பது கடினமாகி அவர்கள் பின்வாங்கி செல்லும்படி, அதை சுற்றிலும் அவர்கள் பள்ளம்   தோண்டினர். முஹம்மது பனு குரைலாவின்  மீது தன்னுடைய கண்ணை வைத்தார்தன்னுடைய வாளை உறையிலிருந்து வெளியே எடுத்து,   துரோகம் இழைக்கும் பனு குரைலாவின்  வசிப்பிடத்திற்கு சென்று அவர்களிடம் சண்டையிடும்படி பிரதான வானவரான ஜிப்ரீல் தன்னை சந்தித்து கேட்டுக்கொண்டதாக முஹம்மது உரிமை பாராட்டினார். "அவர்களுடைய கோட்டைகளை அசைத்து அவர்களுடைய இதயங்களில் பயத்தை ஏற்படுத்ததான் வானவர்களின்  பவனியோடு முன்னே செல்வேன் என்று ஜிப்ரீல் குறிப்பிட்டார்" என்று அல் முபாரக்பௌரி எழுதுகிறார்அல் முபாரக்பௌரி தொடர்கிறார் : " உடனே அல்லாஹ்வின் தூதர் தொழுகைக்கு அழைப்பவரை கூப்பிட்டனுப்பி பனு குரைலாவிற்கு  எதிரான புதிய தாக்குதல்களை அறிவிக்குமாறு கட்டளை இட்டார்."
தொழுகைக்கான அழைப்பு என்பது போருக்கான அழைப்பும் கூட என்பதை  இஸ்லாத்தை படிக்கும்பொழுது கவனிப்பது   முக்கியமானது. எப்பொழுதுமே முஸ்லிம்களுடைய கலவரங்களும் காலித்தனமும் அவர்கள்  தங்களுடைய தொழுகைகளை முடித்தபிறகு மசூதிகளிலிருந்தே ஆரம்பிக்கின்றன. வெள்ளிக்கிழமைகளிலும் புனித ரமலான் மாதத்தின்போதும் அவர்கள் மிகவும் விஷமத்தனமுள்ளவர்களாக இருக்கின்றனர். 1981 ல், முஹம்மதின் பிறந்த நாளை போற்றும் ஒரு மத சொற்பொழிவில், அயதுல்லாஹ் கொமெய்னி  கூறினார் :    
"மிஹ்ராப்(மசூதி) என்பதற்கு போர்க்களம், சண்டையிடும் இடம் என்றே அர்த்தம். மிஹ்ராப்களில் இருந்து போர்கள் புறப்பட வேண்டும். இஸ்லாமின் போர்கள் அனைத்தும் மிஹ்ராப்களில் இருந்து புறப்பட்டதைப்போலவே. மக்களை கொல்லுவதற்கு நபி வாளை வைத்திருந்தார். நம்முடைய புனித இமாம்கள் தீவிரவாதிகளாகவே இருந்தனர். அவர்கள் அனைவரும் போரிடுபவர்களாகவே இருந்தனர். அவர்கள்  வாள்களை  வீசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்அவர்கள் மக்களை கொல்லுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். கைகளை வெட்டி துண்டாக்குகிற, தொண்டைகளை அறுக்கிற, மக்களை கல்லால் அடிக்கிற கலீபா நமக்கு தேவை. கைகளை வெட்டி துண்டாக்குவதை, தொண்டைகளை அறுப்பதை, மக்களை கல்லால் அடிப்பதை அல்லாஹ்வுடைய தூதர் வழக்கமாக கொண்டிருந்த அதே வழியில்."
அன்சார்கள் (உதவி புரிபவர்கள்) முஹாஜிர்கள் (புலம்பெயர்ந்தவர்கள்) ஆகியவர்களைக்கொண்ட முப்பது குதிரை வீரர்கள், மூவாயிரம் காலாட்படையினர் அடங்கிய படைக்கு முஹம்மது தலைமை தாங்கினார். குறைஷிகளோடு சேர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக சதி செய்ததாக பனு குரைலா மீது குற்றம் சாட்டப்பட்டது. உண்மையில், இந்த முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் இந்த குற்ற சாட்டை மறுத்து, மக்கா வாசிகள் பனு குரைலாவிடமிருந்து  தங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் சண்டை இடாமல் பின்வாங்கி சென்றனர் என்று கூறுகின்றனர்.  
முஹம்மது தன்னுடைய உள்நோக்கங்களை வெளிப்படுத்தியபோது, அவருடைய சித்தப்பா மகனும் தீவிர பின்பற்றியுமான அலி, அவர்களுடைய கோட்டையை பாதுகாக்கும் படையை திடீரென தாக்கி கைப்பற்றுவேன் அல்லது கொல்லப்படுவேன் என்று சபதம் செய்தார். இந்த முற்றுகை 25 நாட்களுக்கு நீடித்தது. இறுதியாக பனு குரைலாவினர்  நிபந்தனை இன்றி சரணடைந்தனர். பெண்களும்  குழந்தைகளும்   தனிமையில் சிறைவைக்கபடும் அதே நேரத்தில், ஆண்களுக்கு கைவிலங்கு இடும்படி முஹம்மது ஆணையிட்டார். அப்பொழுது, பனு குரைலாவின்   நண்பர்களான அவ்ஸ் குலத்தினர் அவர்களிடம் மென்மையாக  இருக்குமாறு  முஹம்மதிடம்  சிபாரிசுசெய்து வேண்டினர். அவர்களிடையே முரட்டு துஷ்டனாக இருந்த, அம்பினால் மிக மோசமாக காயப்பட்டிருந்த சஅத் பின் முஆத் என்பவன்  யூதர்களின்மேல் தீர்ப்பு வழங்கட்டும் என்று முஹம்மது பிரேரணை வைத்தார். சஅத் பனு குரைலாவின் முன்னாள் நண்பனாக  இருந்தான், ஆனால் இஸ்லாத்திற்கு அவன்  மதம் மாறியபின்பு அவர்களுக்கு எதிராக அவன்  மனம் மாறி இருந்தான். அகழ் யுத்தத்தின்போது ஒரு மக்காவாசி எறிந்த அம்பினால் தான் அடைந்த மிக மோசமான காயத்திற்கு அவன்  அவர்களை குறை கூறி இருந்தான். சஅத்  பனு குரைலாவை பற்றி  எப்படிப்பட்ட உணர்வுள்ளவனாக  இருந்தான்  என்பதை முஹம்மது அறிந்தே இருந்தார். அவன்  அவருடைய மெய்பாதுகாவலனாக இருந்தவன் தானே, அவன் மசூதியிலேயே தூங்குவான்.    
"அந்த குலத்தை சேர்ந்த வலிமையுள்ள எல்லா ஆண்களும் கொல்லப்பட வேண்டும், பெண்களும் குழந்தைகளும் கைதிகளாக்கப்பட வேண்டும், அவர்களுடைய செல்வம் முஸ்லிம் வீரர்களுக்கு பங்கிட்டு கொடுக்கப்பட வேண்டும்" என்பதே சஅத் தின் தீர்ப்பாக அமைந்தது
இந்த கொடூரமான தீர்ப்பினால் முஹம்மது மகிழ்ச்சியடைந்து அல்லாஹ்வின் கட்டளையைகொண்டே சஅத் தீர்ப்பு வழங்கினார் என்று கூறினார். அவர் தன்னுடைய சொந்த முடிவுகளுக்கு அல்லாஹ்வையே அடிக்கடி காரணம் காட்டினார். இந்த முறை அவர் தன்னுடைய அபிலாஷைகளை வாய்மொழியாக்க சஅதை தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
அல் முபாரக்பௌரி மேலும் கூறுகிறார் : "இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் செய்த அசிங்கமான துரோகத்திற்காகவும், முஸ்லிம்களின் கைகளுக்கு சென்ற ஆயிரத்து ஐநூறு வாள்கள், இரண்டாயிரம் ஈட்டிகள், முன்னூறு கவச உடைகள், ஐநூறு கேடயங்கள் அடங்கிய மிக பெரிய ஆயுதங்களை அவர்கள் குவித்து வைத்து இருந்ததற்காகவும்உண்மையிலேயே  அந்த கடுமையான தண்டனை நடவடிக்கைக்கு யூதர்கள்  தகுதியானவர்களே"
அல் முபாரக்பௌரி சொல்ல மறந்துவிடுவது என்னவென்றால் அது, பனு குரைலாவினர் தங்களுடைய ஆயுதங்களையும் கடப்பாரைகளையும் மம்மட்டிகளையும், அவர்கள் அகழ் வெட்டி தங்களை பாதுகாத்து கொள்வதற்காக  முஸ்லிம்களுக்கு கடன் வழங்கினர் என்பதே. முஸ்லிம்கள் தங்களுக்கு உதவி செய்பவர்களுக்கு ஒருபோதும் நன்றி உடையவர்களாக இருப்பதே இல்லை. அவர்கள் உங்கள் உதவியை பெற்றுக்கொண்டு, இனி நீங்கள் அவர்களுக்கு தேவை இல்லை என்ற அதே மாத்திரத்தில் உங்கள் முதுகில் குத்துவார்கள். இந்த நோயின் மனோநிலையை அடுத்த அதிகாரத்தில் நாம் பார்ப்போம்.
பனு குறைலாவினரின் படுகொலையை நியாயாப்படுத்த  அவர்கள்மேல் வழக்கமான  ஆதாரமற்ற குற்றசாட்டுகளை வைக்க முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்கள் அவசரப்படுகிறார்கள். விஷமத்தனமாக இருப்பது, துரோகம் இழைப்பது, விசுவாசம் இல்லாமல் இருப்பது, இஸ்லாத்திற்கு எதிராக சதி செய்வது என்றெல்லாம் அவர்கள்மீது குற்றம் சாட்டுகிறார்கள். இருப்பினும், இப்படிப்பட்ட கடுமையான தண்டணையையும் அவர்களுடைய ஒட்டுமொத்த இன அழிப்பையும் நியாயப்படுத்த அந்த பாவங்களின் இயல்பை பற்றிய எந்த குறிப்பிட்ட விளக்கமான தகவல்களும் இல்லவே  இல்லை. மதினாவின் சந்தையில் குழிகள் தோண்டப்பட்டு, 600 முதல் 900  வரையிலான ஆண்களின்  தலைகள்  சீவப்பட்டு அவர்களுடைய உடல்கள் அவைகளில் குவிக்கப்பட்டன
பனு நதிர் குலத்தினரின் தலைவரான ஹுயய் இப்னு அக்தாப் என்பவரும் சிறை பிடிக்கப்பட்டவர்களில் இருந்தார். அவருடைய திருமணமான மகளான சபியா என்பவரை முஹம்மது கைபரின்மீது படையெடுத்தபோது தன்னுடைய கொள்ளை பொருளின் பங்காக எடுத்து  கொண்டார்அவருடைய கைகள் பின்னால் கட்டப்பட்டு வெற்றி பெற்றவரிடம் கொண்டு வரப்பட்டார். அசாத்தியமான தைரியத்துடன் எதிர்த்து நின்று, முகம்மதை நிராகரித்து இந்த மனித மிருகத்துக்கு அடிபணிவதைவிட மரணத்தையே மேலானதாக அவர் ஏற்றுகொண்டார். அவர் மண்டியிடும்படி கட்டளையிடப்பட்டு அந்த இடத்திலேயே தலை சீவப்பட்டார்.
யார் யாரை எல்லாம் கொல்ல வேண்டும் என்பதை நிர்ணயிக்க, இளவயதினர் பரிசோதனை செய்யப்பட்டனர். மர்ம உறுப்பில் முடி வளரபெற்றவர்கள் (pubic hair) எல்லாம் ஆண்களோடு ஒன்றாக கட்டப்பட்டு தலை சீவப்பட்டனர்.  இந்த படுகொலையிலிருந்து தப்பித்த அதிய்யாஹ் அல் குரியாஸ் என்ற யூதர் பிறகு விவரிக்கிறார் : "பனு குரைலாவின் சிறைபிடிக்கப்பட்டவர்களில் நானும் இருந்தேன். அவர்கள் (முஸ்லிம்கள்) எங்களை பரிசோதித்தனர், (மர்ம உறுப்பில்) முடி வளர ஆரம்பித்தவர்கள் (pubes) கொல்லப்பட்டனர், முடி வளராதவர்கள் கொல்லப்படவில்லை. முடி வளராதவர்களில் நானும் இருந்தேன்."
முஹம்மது பல யூத குலங்களை கொன்று, அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்திவிட்டார். அவர்களில் பனு கைனுகா, பனு குரைலா, பனு முஸ்தலிக், பனு ஜஉன், கைபரின் யூதர்கள் அடங்குவர். தன்னுடைய மரண படுக்கையில், எல்லா காபிர்களையும் (நம்பிக்கை கொள்ளாதவர்கள்) அரேபிய தீபகற்பத்தைவிட்டே ஒழித்து கட்டும்படி தன்னை பின்பற்றியவர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இரண்டாவது கலீபாவான உமர் அந்த கட்டளையை பிறகு நிறைவேற்றினார். மதம் மாறும்படி, வெளியேறும்படி நிர்பந்தித்து அல்லது மரணத்துக்கு உட்படுத்தி யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் மற்ற சொந்த நாட்டு மதத்தினரையும் அவர் பூண்டோடு அழித்தார்.  
இப்பொழுது, கொள்ளையினால் செல்வ செழிப்பாகி, தன்னிடம் நம்பிக்கை கொண்டவர்களிடம் முஹம்மது தாராள மனதுடையவராக இருக்க முடிந்தது. அனஸ் அறிவித்தார் : "பனு குரைலாவையும் பனு நதிரையும் அவர் வெற்றி கொள்ளும்வரை நபியவர்களுக்கு மக்கள் தங்களுடைய பேரீச்சம் பழங்களில் சிலவற்றை (தானமாக) கொடுத்து வந்தனர், அதன் பிறகு அவர்களுடைய உதவிகளை அவர் திருப்பி தர ஆரம்பித்தார்."
பனு குரைலாவின் படுகொலையை, அவர்களுடைய ஆண்களை  முஹம்மது  வெட்டி கொன்றதையும் பெண்களையும் குழந்தைகளையும் கைதிகளாக ஆக்கியதையும் ஆமோதித்து கூறுகின்ற குர்ஆன் வசனம் ஒன்று உள்ளது :
"இன்னும், வேதக்காரர்களிலிருந்தும் (பகைவர்களுக்கு) உதவி புரிந்தார்களே அவர்களை (அல்லாஹ்) அவர்களுடைய கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இருதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான்; (அவர்களில்) ஒரு பிரிவாரை நீங்கள் கொன்று விட்டீர்கள்; இன்னும் ஒரு பிரிவாரைச் சிறைப்பிடித்தீர்கள்.(33: 26)"

[1] AR-Raheeq Al-Makhtum  by Saifur Rahman al-Mubarakpuri  http://islamweb.islam.gov.qa/english/sira/raheek/PAGE-26.HTM
[2] Ibid.
[3]  Ayatollah Khomeini: A speech delivered on the commemoration of the Birth of Muhammad, in 1981.
[5] Sunan Abu-Dawud Book 38, Number 4390.  Sunan Abu-Dawud is another collection of hadith regarded to be sahih.
[6] Bukhari Volume 4, Book 52, Number 288
[7] Bukhari Volume 4, Book 52, Number 176

மூல ஆசிரியர் : அலி சினா
மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்

source:iraiyillaislam.blogspot.in

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails