மதப்போலிஸாரின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன
சௌதி அரேபியாவில் மக்களின் கோபத்தைத் தூண்டியுள்ள, சௌதி மதப் போலிசாரின் சில அத்து மீறல்களைத் தடுக்க, அந்தப் போலிஸ் பிரிவினருக்கு புதிய நடைமுறை விதிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அப்பிரிவின் தலைமைப் போலிஸ் அதிகாரி கூறினார்.
நன்னடத்தையை மேம்படுத்தவும் தீய நடத்தையை தடுக்கவுமான ஆணையம் என்று அதிகாரபூர்வமாக அறியப்படும் இந்த போலிஸ் அமைப்பிற்கு இருக்கும் சில அதிகாரங்கள் நாட்டின் பிற துறைகளுக்கு வழங்கப்படும் என்று இந்தப் பிரிவின் தலைவர் ஷேக் அப்துல் லத்தீப் அப்துல் அஸிஸ் அல் ஷேக் கூறினார்.
இளைஞர்களும், வயது வந்த ஆண்களும் குடும்பத்தினர் இல்லாமல் தனியாக பல்பொருள் அங்காடி மையங்களுக்கு செல்வதை போலிசார் தடுத்து வந்தனர். மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்திய இந்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டாமென்று போலிசார் கூறப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.
source:BBC
http://thamilislam.tk
http://thamilislam.tk
No comments:
Post a Comment