பாலியல் தொழில் நடத்திய பெண் மசூதி வகுப்புக்கு செல்ல உத்தரவு
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் பாலியல் தொழில் விடுதி ஒன்றை நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பெண் ஒருத்தியை, ஒரு மாத காலம் தினமும் மசூதிக்கு சென்று மத வகுப்புகளில் கலந்து கொண்டு , தன்னைத் தானே மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி ஒருவர் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்தப் பெண்ணுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவைப் பிறப்பிக்கையில், பெஷாவர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தோஸ்த் முகமது கான், அந்த உத்தரவின் ஒரு பகுதியாக இந்த நிபந்தனையை விதித்தார்.
இந்த ஒரு மாத கால "கல்வி" முடிந்தது, அந்தப் பெண் எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறார் என்பதைப் பற்றி ஒரு அறிக்கை தருமாறு, மசூதியின் இமாமை நீதிபதி கேட்டுக்கொண்டார்.
பாகிஸ்தானிய நீதிபதி ஒருவர், இவ்வாரு ஒரு குற்றம் சாட்டப்பட்டவருக்கு, ஆன்மிக ரீதியிலான சீர்திருத்தத் தண்டனை தருவது என்பது மிகவும் அபூர்வமானது என்றும், ஒரு வகையில் முன்னுதாரணமற்றது என்றும் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
source:BBC
http://thamilislam.tk
http://thamilislam.tk
No comments:
Post a Comment