Thursday, January 31, 2008

தந்தை பெரியாரை பின்பற்றும் பேய்கள்

தந்தை பெரியாரின் தவப்புதல்வர்களே!!!!

அன்புள்ள

இதுதான் உண்மை இணையத்தாருக்கு

உங்களின் இணைய கடிதம் கண்டவுடன் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
 
                  http://idhuthanunmai.blogspot.com/2008/01/to-z.html

மூடப்பழக்கவழக்கங்களை

துடைத்தெரிய வேண்டிய நீங்கள் அதைவிட்டு உண்மையான சமத்துவ சீர்திருத்தத்தை சொன்ன இயேசு கிறிஸ்துவை சாடி இருப்பது உங்களின் பக்குவமின்மையை அருமையாக எடுத்துக்காட்டியது.
 
1,
உலகில் முதன் முதலில் உண்மையான ஆன்மீகம் என்றால் என்ன என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் இயேசுகிறிஸ்து மட்டுமே.கடவுளுக்கு மனிதர்கள் அடிமைகள்,சடங்காச்சாரங்களே கடவுளை அடையும் வழிமுறைகள் என்று பரவி இருந்த உலகில் மனிதர்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்,மற்ற மனிதனை நேசிப்பதே கடவுளுக்கு செய்யும் தொண்டு என்று போதித்தவர் இயேசு.

2,

கடவுள் கோவிலில் குடியிருப்பார் அல்லது ஏதோ ஒரு சிலையில் கடவுள் இருப்பார் என்ரு நம்பிக்கை இருந்த காலத்தில் அவர் எங்கும் நிறைந்தவர்,எல்லா மனிதர்களும் கடவுள் குடியிருக்கும் கோவிலாக மாற முடியும்.ஏழை முதல் பணக்காரன் வரை அனைவரும் சமம் என்பதை உலகுக்கு அறிவித்தார் இயேசு.

3,

விபச்சாரம் செய்த ஆணை தப்ப விட்டு பெண்ணை மட்டும் பிடித்து வந்து அவளை கல் எறிந்து கொல்ல ஆசைப்பட்ட சமுதாயதாயத்தில் பாவமே செய்யதவன் இருந்தால் முதல் கல் எறியட்டும் என்று சொல்லி கடவுள் பெயரில் மனிதனை தண்டிக்க எவனுக்கும் அதிகாரம் இல்லை என்பதை இயேசு உலகுக்கு உணர்த்தினார்.

 

4,

குறிபிட்ட சந்ததி அல்லது ஜாதியில் பிறந்தவன் மட்டுமே கடவுளின் பணி செய்ய முடியும் என்ற நிலையில் இருந்த காலத்தில் சமுதாயத்தில் எந்த நிலையில் இருப்பவனும் இறை பணியாற்ற முடியும் என்று உலகுக்கு காண்பித்தவர் இயேசு கிறிஸ்து.

5,

உலகின் முதல் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியாவ்ர்கள் கிறிஸ்துவின் சீடர்களே என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.ஆனால் அது வரலாற்று உண்மை.

6,

ஆண்கள் தவறு செய்ய பெண்கள் தான் காரணம்.எனவே அவர்கள் தங்கள் கண்களையும்(முகத்தை என்று விவாதம் செய்பவர்கள் உண்டு),கைகளையும்,கால் பாதங்களையும் தவிர அனைத்தையும் மூடிய நிலையில் வெளியே வரவேண்டும் என்று பெண்ணடிமைத்தனத்திற்கு கட்டளையிட்டவர்கள் மத்தியில் பெண்களுக்கு சம உரிமை வழங்கியது கிறிஸ்துவே.

7,

கடவுள் பெயரில் மனிதனை கொல்லுவது,ஜாதியின் பெயரில் மனிதனை தீண்டத்தகாதவன் என்று ஒதுக்குவது இது போல் செய்யும் மதங்கள் நடுவில் மனிதனை நேசிப்பது எப்படி என்று உலகுக்கு காண்பிப்பது கிறிஸ்துவின் வழியே.

8,

ஆண்கள் நான்கு பெண்களை திருமணம் செய்யலாம் ஏன் என்றால் ஆணுக்கு தன்னை அடக்கி கொள்ள முடியாது.வேண்டும் என்றால் வேறு நாட்டில் இருந்து பிடித்து வந்த அடிமைகளை அதாவது மற்ற ஆண்களின் மனைவிகளையும் அனுபவித்துக்கொள்ளட்டும் என்று விபச்சாரத்துக்கு வர்ணம் பூசி ஆண்டவன் பெயரில் அறிவித்தவர்களை எல்லாம் "உலகின் அழகிய முன் மாதிரி" என்று வர்ணிக்கப்படுகிற காலத்தில் திருமணம் என்பது இறைவனால் இணைக்கப்படுவது,அதில் எந்த பிரிவினையும் வரக்கூடாது.ஆணோ,பெண்னோ அந்த உறவில் தவறக்கூடாது என்ற அழகிய .முன்மாதிரியை தந்தவர் இயேசு.

தன்னைப்போல்

பிறரை நேசி,ஏழைக்கு இரங்குகிவன் கர்த்தருக்கே கடன் கொடுக்கிறான்,அனைத்து மக்களையும் நேசிக்கவேண்டும்,.ஒவ்வொரு மனிதனும் விலை மதிப்பற்றவன்.அவனை திட்டுவதே அவனை உண்டாக்கிய கடவுளை அவமதிப்பதாகும் என்றும் ,கடவுளின் பெயரில் மற்றவர்களை கொல்லச்சொல்லும் மதங்கள் நடுவில் மற்றவர்களுக்காக உயிர்தியாகம் செய் என்று கற்றுத்தருவது கிறிஸ்துவின் தெய்வீக வழியாகும்.இந்த அற்புதமான கொள்கைகளை தவிர மக்களுக்கு நன்மை உண்டாக்கும் வேறு கொள்கைகளை தந்தை பெரியார் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இப்படி

இருக்க தேவையில்லாமல் இயேசுவை பற்றி தவறாக எழுதி பெரியாரின் உண்மை வழியை மக்களிடன் இருந்து மறைத்துவிடாதீர்கள்.

பிரிவுகள்

என்பது எல்லா இடங்களிலும் உள்ளது.இந்த உலகத்தில் பிரிவு இல்லாத ஒன்றை நீங்கள் காட்ட முடியுமா? எந்த மதங்களில் பிரிவு இல்லை,எந்த கட்சியில் பிரிவுகள் இல்லை என்ரு சொல்லுங்கள் .ஏன் உங்கள் பெரியாரியத்தில் பிரிவு இல்லையா?அதை பற்றி விளக்கமாக எழுதவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்.

கடைசியாக

ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.பெரியாரை மதிக்கிறோம்,அவர் சொன்ன கருத்துகளில் உள்ள உண்மைகளை மதிக்கிறோம்.கிறிஸ்தவத்தில் தவறுகள் உண்டு.அதை சாடுங்கள் தவறில்லை.ஆனால் இயேசுகிறிஸ்துவையோ,அல்லது அவரது உபதேசத்தை பற்றியோ பெரியாரியம் என்ற பெயரில் நீங்கள் எழுதும் வாய்சவாடல்களை பொருத்துக்கொள்ள முடியாது.தேவையில்லாமல் எழுதுவதை நீங்கள் தொடர்ந்தால் பெரியாரியத்தை பற்றியும் உங்கள் தலைவர் கீ.வீரமணி பற்றியும் எழுத வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்படும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
 
 
http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_31.html
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails