கிறிஸ்தவத்திற்கு எதிரான அகமதியாக்களின் நூல்களில் கிறிஸ்து அல்லது மேசியா என்ற பதங்களைக் கண்டேன்;. அகமதியாக்கள் அமைப்பின் ஸ்தாபகர் மிர்ஷா குலாம் அகமது தன்னை மஸிஸ்( வாக்குப் பண்ணப்பட்ட மேசியா) என்று அறிவித்திருந்தார். எனக்கு புதுமையும், கவரக்கூடியதுமாயிருந்த அகமதியக் கொள்கைகளையும், போதனைகளையும் பிரச்சாரம் செய்வதில் நான் மிகுந்த ஆர்வமுடையவனாயிருந்தேன். பைபிளிலுமு; குர்ஆனிலும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றியுள்ள குறிப்புகளை அர்த்தம் உணராமலேயே நினைவுகூர்ந்தேன்.
ஒரு நாள் நான் ஒரு சபையைக் கடந்து சென்றுகொண்டிருந்தேன், அப்போது அங்கேயிருந்த பாதிரியாரிடம் சென்று , அவர் ஏன் இன்னும் முஸ்லீமாக மாறவில்லை? தீர்க்கதாரிசனமாக சொல்லப்பட்ட அனைத்து பண்புகளும் முகமதுவில் நிறைவேறியிருக்கிறதே? என்று கேட்க சாரியான வாய்ப்பு என்று நினைத்தேன், அப்படியாக சென்று பாதிரியை சந்தித்தேன்;. என்னை ஒரு முஸ்லீம் என்று அறிமுகம் செய்துகொண்டேன், நான் பாதிரியிடம் , இயேசுவே முகமதுவின் பாதரட்சைகளைத் தான் சுமப்பதற்கும் தகுதியில்லாதவன் என்று சொல்லியிருக்கும்போது நீங்கள் ஏன் முகமது நபியை விசுவாசிப்பது இல்லை என்று கேட்;டேன். அதற்கு அவர் இதை இயேசு எங்கு சொல்லியிருக்கிறார் என்று ஏதாவது ஆதாரம் கொடுப்பீர்களா? என்று கேட்டார் . உடனே நான் மத்தேயு 3.11-12 வசனங்களை எடுத்து அவருக்கு வாசித்து காண்பித்தேன், அவர் முழு அதிகாரத்தையும் வாசிக்க சொன்னார். 1-17 வரையான அந்த முழு வசனங்களையும் வாசித்தபோது அது யாரால் யாரைப்பற்றி சொல்லப்பட்டது என்பது தெளிவாக புரிந்தது, யாரும் விளக்கவேண்டியதில்லை. நான் அவமானமடைந்தேன் உடனே மற்றொரு வசனத்தையும் அவருக்கு காண்பித்தேன் அது யோவான் 14. 30
இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை, இந்த உலகத்தின் அதிபதி வருகிறான் ,
அவனுக்க என்னிடத்தில் ஒன்றுமில்லை,
அந்த பாதிரி சொன்னார் நீ இந்த வசனத்தை முகமதுவிற்கு பொருத்திக்கூறுவாய் என்றால் நான் அதை மறுக்கமாட்டேன். பிறகு அவர் இந்த வசனத்;தை மற்ற வசனங்களின் வெளிச்சத்தில் விளக்கினார் உலகத்தின் அதிபதி என்ற இப்பதம் யோவான் 12. 32 மற்றும் 16.11 ஆகிய வசனங்களில் உலகத்தின் அதிபதி என்பது சாத்தானைக் குறிக்கிறது என்று விளக்கினார்.
நான் எனக்குள்ளே பெருத்த அவமானமடைந்தேன் என்னுடைய அமைப்பின் மீதும் இந்த குறிப்புகளை தன்னுடைய புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அந்த இரண்டாவது மேசியா என்று அழைத்துக்கொள்கிற அவர் மீதும் பயங்கரமான கோபத்தோடு பாதிரியின் அறையிலிருந்து வெளியேறினேன், அதற்கு பிறகு நான் குர்ஆனையும் பைபிளையும் ஆழமாக படிக்க ஆரம்பித்தேன். இதற்காக நான் பாகிஸ்தானில் உள்ள ஒரு வேதாகமப்பள்ளியில் புறக்கல்வி முறையில் படிக்கத் துவங்கினேன். ஒரு தீவிர இஸ்லாமிய பிரசங்கியாக இருந்த எனக்கு குர்ஆனையும் பைபிளையும் தெளிவாகக் கற்று மேசியா என்ற வார்த்தையின் ஆழ அர்த்தத்தை அறிய ஆவல் அதிகமானது. பைபிளில் வாக்குப் பண்ணப்பட்ட மேசியாவின் இரண்டாம் வருகையைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தபோது மேசியாவின் முதல் வருகையைப் பற்றியும் தீர்க்கதாரிசன நிறைவேறுதல்களைப்பற்றியும் அறிய எண்ணினேன்.
நான் குர்ஆனில் வசனங்களிலும் மொழிநடையிலும் அதிக பழக்கப்பட்டிருந்தபடியால் வேதத்தை படிக்கும் போதே இரண்டையும் ஒப்பிட்டுக்கொண்டிருந்தேன். கிறிஸ்தவ கிரேக்க வசனங்கள் ( புதிய ஏற்பாடு) என்னை மிகவும் கவர்ந்தது. அவை ஏதோ வாழ்க்கைச் சரித்திரம் மட்டுமல்ல ஆனால் ஒவ்வொரு வர்ணணையிலும் இறைவன் மனிதனோடு நடந்து வந்ததை வெளிப்படுத்தும் பல சம்பவங்கள் உண்டாயிருக்கிறது.
குர்ஆனைப் படிக்கும் போதோ எதுவும் விசேஷமாக இல்லை ழூன்றில் இரண்டு பங்கு பேய் வணக்கத்தின் கட்டுக்கதைகளும், தோராவிலிருந்து திரித்து கேலியாக சித்தாரிக்கப்பட்ட படைப்புகளாயிருந்தது. குர்ஆனைப் படிக்கும் போது எந்த ஒரு நபரும் தன்னுடைய கவனம் சிதறாமல்பார்த்துக்கொள்ள முடியாது ஏனென்றால் குர்ஆனில் தொடர்ச்சியாக ஒவ்வொரு இரண்டு ழூன்று வசனங்களுக்கும் பிறகு தலைப்புகளும் விஷயங்களும் மாறுகிறது.
இப்புவியின் ஊழியித்தில் இயேசு தன்னுடைய பெரிய அதிகாரத்தை வெளிப்படுத்தியதை உணர்ந்தேன். அவர் முழு நிச்சயமுடையவராகவும் அதிகாரமுடையவராகவும் தன்னை குற்றம்சொல்லுகிறவர்களை எதிர்க்ககூடியவராகவும் இருந்தார். அவரை குற்றம்சொல்லிக்கொண்டிருந்தவர்கள் ஒருநாளும் அவரை நேராக எதிர்க்ககூடாதவர்களாயிருந்தார்கள். (யோவான் 6 .41, 43 மற்றும் யோவான் 8. 38,44)
ஆனால் முகமதுவின் விஷயத்தில் அவரைக் குறைகூறினவர்கள் மிகவும் உறுதியாகவும் .எதிர்க்ககூடியவர்களாவும் இருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள் ,
(சுரா 17;90-93 திருப்புமுனை)
நான் குர்ஆனையும் பைபிளையும் மிகத் தீவிரமாக படித்தேன். குர்ஆனின் ஒரு வசனம் என்னை உலுக்கியது , என்னுடைய எல்லா நம்பிக்கைகளும் அர்ப்பணங்களும் தவிடுபொடியானது. குர்ஆனின் அந்த வசனம் சொல்லுகிறது .நான் வரப்போகிற புதிய துதன் இல்லை, எனக்கு என்ன செய்யப்படும் என்று எனக்குத் தெரியாது. நான் எனக்கு வெளிப்படுத்தப்பட்டதை மட்டுமே பின்பற்றுகிறேன். உங்களைத் தெளிவாக எச்சரிப்பதே என்னுடைய பணி ஆகும்
நியாயத்தீர்ப்பின் நாள் (அழிவு) மட்டும் காத்திருக்க எனக்கு பொறுமையில்லை , தன்னைப் பற்றியும் தன்மேல் விசுவாசம் வைப்பவர்களை பற்றியும் அறியாத ஒருவரை நான் எப்படி பின்பற்றமுடியும்?
மாற்றம
95 சதவீதம் முஸ்லீம்கள் இருக்கிற பாகிஸ்தானில் மதமாறுவது என்பது சமுதாய, பொருளாதார மற்றும் கலாச்சார சவாலாக இருந்தது. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு மதம்மாறுவது என்பது உறவுகளோடும் சமுதாயத்தோடும் உள்ள ஐக்கியத்ததை விடுவதாகும். எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்ற பயம் இருந்துகொண்டேயிருக்கும். இஸ்லாமின் பெயரால் முஸ்லீம் மக்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக எதைவேண்டுமானாலும் செய்யலாம், சொந்தக்காரர்களும் நண்பர்களும் கூட தங்கள் தனிப்பட்ட மற்றும் சொத்துபிரச்சனைகளை வைத்து கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக இவர்கள் முகமதுவையும் குர்ஆனையும் குறைகூறினார்கள் என்று சொல்லி பழிவாங்கமுடியும். தெய்வ தூஷணம் என்ற பெயரில் கிறி்ஸ்தவர்களுக்கு மரணதண்டனைகூட வழங்கப்படலாம் ஆனால் அல்லாவின் பெயரில் சொல்லப்படும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு எந்த தண்டணையும் கிடையாது,
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் கிறிஸ்துவை என்னுடைய சொந்த இரட்சகரா ஏற்றுக்கொண்டு என் பெற்றோருக்கும் உறவினருக்கும் தெரியாமல் மறைமுகமாக 1979 ம் வருடத்திலே ஞானஸ்தானம் பெற்றேன.; 10 வருடங்கள் வரை நான் கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் கிறிஸ்தவனாகவும் என்னுடைய வீட்டில் முஸ்லீமாகவும் வாழ்ந்து வந்தேன். இறுதியாக ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுமாறு என் பெற்றோரின் கட்டாயம் அதிகமனபோது என்னால் என் இரட்சிப்பை மறைத்துவைக்கமுடியவில்லை,
நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ஏனென்றால் தான் யார் என்பது என் ரட்சகருக்குத் தெரியும் (யோவான் 17 .14)
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14 .6)
இப்பொழுது இயேசு கட்டளையிட்டதுபோல் (மத்தேடூடூ 28. 20) சுவிஷேசத்தை பிரசங்கிப்பது தான் என்னுடைய பாரமாயிருக்கிறது. சுவிஷேசத்தை பிரசங்கியாவிட்டால் எனக்கு ஐயோ ( 1கொரி 9 . 16)
பாக்கிஸ்தானில் 2001 வரை commumity developmement project manager ஆக வேலை செய்துவந்தேன்.தற்பொழுது நான் கனடாவில் வசித்துவருகிறேன்.
கிறிஸ்தவத்தை குறித்த எந்த விதமான கேள்விகளுக்கும்,விவாதங்களுக்கும் என்னை தராளமாக தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment