என்னுடன் விவாதம் செய்வதற்கான சவாலை ஏற்றுக் கொள்வதாக எனக்கு எழுதும் பல முஸ்லிம்களில் அமீரும் ஒருவர். ஒரு பிரபலமான அறிஞருடன் அல்லது என் நூலைப் படித்தவருடன் தான் நான் விவாதம் செய்வேன் என்று அவரிடம் சொன்னேன். அமீர் என் நூலைப் படிக்க ஒத்துக் கொண்டார். அவருக்கு என் நூலின் நான்காம் பதிப்பை pdf வடிவத்தில் அனுப்பினேன். அதைப் படித்து விட்டு அமீர் ஒன்று இஸ்லாமை கைகழுவி விட்டார் அல்லது கழுவப் போகிறார். என் நூலைப் படித்த யாராலும் இஸ்லாமை கைகழுவாமல் இருக்க முடியாது.
என் நூலைப் பெறும் பெரும்பாலான முஸ்லிம்கள் பதில் எழுதுவதில்லை. அவர்கள் பயந்துபோய் அதைப் படிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் என்பது என் கணிப்பு. ஒரு சிலருக்கே அதை முடிக்கும் அளவுக்கு துணிச்சல் இருக்கும். அமீர் அப்படிப்பட்ட ஒருவர்.
அவர் என்னைப் பல கேள்விகள் கேட்டார். அதாவது என்னிடமிருந்து பஸ்ஸாம் ஜவடி (Bassam Jawadi) யின் "மறுப்புரைகளுக்கு" பதில் எதிர்பார்த்தார். நான் அதுவரைக்கும், ஜவடியின் கட்டுரைகளை கண்டு கொள்ளவில்லை. ஏனென்றால், அந்த கட்டுரைகள் உண்மையிலேயே என் கருத்துக்களை உறுதிப்படுத்தி முகமதை மேலும் செமையாக மாட்டவைக்கின்றன. எப்படியோ இந்த வித்தியாசம் புரியாதவர்களுக்காக ஜவடியின் மறுப்புரைகளுக்கு பதில் எழுதுவதற்காக வரும் மாதங்களை ஒதுக்க முடிவு செய்து இருக்கிறேன்.
அமீருடைய ஈமெயிலும் அவருடைய முதல் கேள்விக்கு பதிலும் பின்வருகின்றன. அது முகமதின் யூத மனைவியான சபியா வைப் பற்றியது. அவருடைய கதை இங்கேஉள்ளது.
திரு அலி சினா அவர்களே,
உங்களிடம் நேர்மையாக இருக்க வேண்டுமென்றால், என்னால் சொல்ல முடிந்ததெல்லாம் இது தான். ஆம் உங்கள் நூல் இஸ்லாமின் மீதுள்ள எனது குறைந்த மற்றும் ஆழமில்லாத நம்பிக்கையை அதிரவைத்துவிட்டது. நான் இப்போது உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பதெல்லாம் இது தான். ஒன்று கீழ்க்கண்ட வாதங்களுக்கு ஒவ்வொன்றாக பதில் தாருங்கள். இந்த கேள்விகள் இஸ்லாமில் ஆழமான அறிவை கொண்ட மனிதர்களால் எழுதப்பட்டவை. நீங்கள் உறுதியளித்த படி, ஒவ்வொன்றுக்கும் பதில் அளித்து என்னை முற்றிலுமாக இஸ்லாமை விட்டு விலகச் செய்யுங்கள். இல்லையேல், என்னை என் சமூகத்தையும், குடும்பத்தையும், மனதையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையிலான கேவலமான வாழ்க்கையை வாழும்படி நட்டாற்றில் விட்டுவிடுங்கள். ஆனால் சினா அவர்களே உங்களை முதல் காரியத்தையே செய்யுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
குற்றச்சாட்டு எண் 1.
"முகமது ஒரு வல்லுறவன்"
அலி சினா "வல்லுறவு கொள்ளப்பட்டாள்" என்று கூறும் பெண் தூதரின் மனைவியான சபியா தான் என்பது சுவாரஸ்யமானது. நாம் இது போன்ற முட்டாள்தனமான வாதங்களுக்கு பதில் தரத் தேவையே இல்லை. இருந்தாலும், யாருக்கேனும், சபியாவைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தால், சகோதரன் Bassam Zawadi எழுதிய இந்த அருமையான கட்டுரையைப் படித்துக் கொள்ளலாம்.
http://www.answering-christianity.com/bassam_zawadi/safiyyah_the_wife_of_the_prophet.htm
இந்த மறுப்புரையில், சபியாவுடனான முகமதின் திருமணம் உண்மையிலேயே ஒரு வல்லுறவு தான் என்று கூறுவது நியாயமில்லை என்றும் சபியா உண்மையிலேயே அவனை விரும்பினார் என்றும் நிரூபிப்பதற்கு, ஜவடி பல ஹதிதுகளை மேற்கோள் காட்டுகிறார். அவர் கீழ்க்கண்டவாறு எழுதி இருக்கிறார்.
சைத் இப்னு அஸ்லம் (Zayd ibn Aslam) அறிவித்தார், "தூதர் மிகவும் உடல் நிலை சரியில்லாமல் இறக்கக் கிடந்த பொது, அவர் மனைவிகள் அவரை சூழ்ந்து இருந்தனர். சபியா பின்த் ஹுயய்யாய் (Safiyyah bint Huyayyay), 'ஒ அல்லாவின்தூதரே, உங்கள் இடத்தில் நான் இருக்க விரும்புகிறேன்.' என்று கூறினார் இதைக் கேட்ட தூதரின் மற்ற மனைவிகள் சபியாவைப் பார்த்து கண்ணடித்தார்கள். அதைத் தூதர் பார்த்து "உங்கள் வாய்களைக் கழுவுங்கள்" என்று சொன்னார். "அல்லாவின் தூதரே, எதற்காக"? என்றார்கள் அவர்கள். "நீங்கள் அவளைப் பார்த்து கண்ணடித்ததற்காகத்தான். அவள் சொல்வது உண்மைதான்" என்றார் அவர். (Ibn Sa'd, Tabaqat, vol. 8, p.101, Cited in Muhammad Fathi Mus'ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.175 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)
இந்த காட்சியின் முழு பரிமாணத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த ஹதிதில் கூறப் பட்ட வார்த்தைகளுக்கு அப்பாலும் போக வேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அல்லது ஹதிதும் தனியாக எடுத்துக் கொள்ளும் போது ஒன்றும் தெரியாது. எல்லாவற்றையும், ஜிக்ஸா (Jigsaw) புதிரின் எல்லா துண்டுகளைப் போல, ஒன்றாக வைத்து பார்க்கும் போதுதான் உண்மையான நிலவரம் வெளிவரும்.
எப்படிப் பார்த்தாலும் சபியா ஒரு கைப்பற்றப்பட்ட பெண். அவர் தந்தையும், பெரியப்பாவும் சிரைச்சேதம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். அவரின் கணவன் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரின் சகோதரர்களும், ஆண் உறவினர்கள் எல்லோரும் படுகொலை செய்யப்பட்டார்கள். அவருடைய பெண் உறவினர்கள் எல்லோரும் முஸ்லிம்களால் அடிமைப்படுத்தப்பட்டார்கள். அவர் தன்னந்தனியாக இருந்தார். எதிரிகளிடையில் மாட்டி இருந்தார்.
அவரின் நிலையில் இருக்கும் எந்த புத்திசுவாதீனமுள்ள பெண்ணாவது தன் உறவினர்களை படுகொலை செய்து தன்னை கைப்பற்றியவனை காதலிப்பாரா? உறுதியாக மாட்டார்கள்.
விஞ்ஞானம், உளவியல் உட்பட எல்லா துறைகளிலும், வளர்ந்து கொண்டு இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக மக்களை குழப்பத்தில் ஆழ்த்திய பல புதிர்கள், குறிப்பாக முகமதினுடைய வாழ்க்கையைப் பற்றியவைகள், இன்று உளவியலில் ஏற்பட்ட கண்டுபிடிப்புகளின் வழியாக விளங்கிக் கொள்ளலாம். Understanding Muhammad என்ற என் நூல், முகமதைப் பற்றிய ஒரு மனோதத்துவ பகுப்பாய்வாகும். எனக்கு தெரிந்த வரையில், இந்த விசயத்தைப் பேசும் முதல் நூல் அது தான்.
இந்த கேள்விக்கு பதிலானது எனது நூலின் ஐந்தாம் பதிப்பின் எட்டாம் அத்தியாயத்தில் இருக்கிறது. அமீர், நீங்கள் படித்தது, நான்காம் பதிப்பு. எனவே உங்களுக்கு சுருக்கமாக விளக்குகிறேன்.
காமெரூன் ஹூகர் (Cameroon Hooker) என்ற ஒரு சமூக விரோத மனநோயாளி (sociopath) இருபது வயதுள்ள கொல்லீன் ஸ்டான் (Colleen Stan) ஐ கடத்தி, தனது கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த சவப்பெட்டியைப் போன்ற ஒரு பெட்டியில் அடைத்து ஏழாண்டுகள் வைத்திருந்தான். அவள் அங்கிருந்து தப்பிப் போனபோது அதிகாரிகளிடம் அவனைப் பற்றி முறையீடு செய்யவில்லை. அவனின் மனைவி ஒரு பாதிரியிடம் தன் கணவன் எப்படிப்பட்டவன் என்று கூறி பாவமன்னிப்பு கேட்டபோது அந்த பாதிரியின் அறிவுரைப்படி அதைப் பற்றி காவல்துறைக்கு கூறப்பட்டதால்தான் அவன் கைது செய்யப்பட்டான்.
ஹூகரின் வழக்கு விசாரணையின் போது, கொல்லீன் ஒத்துழைக்கவில்லை. சிக்கலை அதிகப்படுத்தும் விதமாக வாதியின் (defendant) லாயர் கொல்லீன் ஹூகருக்கு எழுதிய ஒரு காதல் கடிதத்தை சாட்சியாகக் கொண்டுவந்தார்.
கொல்லீன் கடத்தப்பட்டிருந்தாள். அவருடைய உயிருக்கு அபாயம் இருந்தது. அவர் ஏழாண்டுகளாக ஒரு பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாள். இவற்றில் எந்த சந்தேகமும் இல்லை.
அரசுத்தரப்புடன் அவர் ஏன் ஒத்துழைக்கவில்லை? அந்த காதல் கடிதம் எப்படி வந்தது? கொல்லீன் அவள் உட்படுத்தப்பட்ட கொடூரங்களுக்கு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை என்பதால் நீதி மன்றத்தின் நடுவர் குழுவினால் (Jury) ஹூகரை குற்றவாளி என்று அறிவிக்க முடியவில்லை. இந்த சிக்கலான புதிருக்கு கடைசியில் ஒரு உளவியல் நிபுணர் தான் விடை கொடுத்தார். அதாவது, உயிருக்கே ஆபத்தான சூழ்நிலையில் உள்ள கடத்தப்பட்டவர்கள் தன்னைக் கடத்தியவர்களையே விரும்பத் தொடங்கி விடுவார்களாம். இந்த விநோதத்திற்கு ஸ்டாக்ஹோம் மனநிலை (Stockholm syndrome) என்று பெயர் வைத்திருக்கின்றனர்.
உயிருக்கு ஆபத்து உள்ள சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட ஒருவரின் உள்மணம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளப்பயன்படுத்தும் உபாயம் (coping mechanism) தான் இது. ஹூகர் பரோலில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டான்.
மனித உளவியலில் ஏற்பட்டுள்ள புதிய புரிதல்களின் வழியே தான் நாம் தன் உறவினர்களைக் கொன்ற கொலைகாரனின் மீதான சபியாவின் வினோதமான காதலைப் புரிந்து கொள்ள முடியும்.
ஜவடி மேலும் தொடர்கிறார்.
"இங்கே முஸ்லிம்களின் அன்னைகளில் ஒருவரான சபியா தன் தந்தையையும், கணவனையும் கொன்ற தூதரை வெறுத்த அந்த சமயத்தைப் பற்றி கூறுகிறார். தூதர், "உன் தந்தை அரபியர்களை என் மீது ஏவி ஒரு கொடூரமான குற்றத்தை செய்து விட்டார்" என்று கூறி சபியாவின் தூதருக்கு எதிரான கசப்புணர்வை நீக்கும் அளவுக்கு மன்னிப்பு கேட்டார். (Al-Bayhaqi, Dala'il an-Nubuwwah, vol. 4, p. 230, Muhammad Fathi Mus'ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.166 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது )
இதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? முகமது அவளின் தந்தையையும் கணவனையும் கொன்று விட்டு அதை நியாயப்படுத்துகிறான். ஆனால் முகமது மன்னிப்புக் கேட்டான் (அவன் அப்படிச் செய்யவில்லை.) என்றும் அவள் மன்னித்து விட்டாள் என்றும் ஜவடி சொல்கிறார். இந்த ஜவடி எதைப் புகைக்கிறார் என்று தெரியவில்லை (இல்லையில்லை, அவரின் மூளை இஸ்லாமால் பீடிக்கப்பட்டுள்ளது). அவருடைய வாதங்களில் ஏதேனும் பொருள் இருக்கிறதா. நீங்கள் ஒரு பெண்ணின் தந்தையையும், கணவனையும், உறவினர்கள் எல்லோரையும் கொன்றுவிட்டு ஏன் அப்படி செய்யவேண்டியதாயிற்று என்று விளக்கம் கொடுத்தால் அவள் உங்களை மன்னித்து விடுவாளா? முஸ்லிம்களுக்கு இது போன்ற எண்ணங்கள் இருப்பதால் தான் அவர்களால் எந்த கேனத்தனத்தையும் நம்ப முடிகிறது. சிறிது மூளையை பயன்படுத்தும் முஸ்லிம் கூட இஸ்லாமை கைகழுவி விடுவான்.
ஆமாம், ஆரம்பத்தில் சபியா தூதரின் மீது கோபமாகத் தான் இருந்தார் ஆனால்பிறகு அவரை மன்னித்து விட்டார். இது ஏனென்றால் அவருக்கு முகமதுஉண்மையிலேயே ஒரு தூதர் என்று ஆரம்பத்திலிருந்தே தெரியும்.
சபியா கூறுகிறார், "என் அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் நான் மிகவும் செல்லம். அல்லாவின் தூதர் மதீனாவுக்கு வந்து குபாவில் (Quba) தங்கியபோது என் பெற்றோர்கள் அவரை சந்திக்க இரவில் சென்றிருந்தார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது மிகவும் கலக்கத்துடனும் களைப்புடனும் இருந்தார்கள். நான் அவர்களை சந்தோஷமாக எதிர் கொண்டேன். ஆனால் நான் ஆச்சரியப்படும் வகையில் அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. அவர்கள் நான் அருகில் இருந்ததைக்கூட அறியாத அளவிற்கு கவலையுடன் இருந்தார்கள். 'அது உண்மையிலேயே அவன் தானா?' என்று என் பெரியப்பா அபு யாசிர் என் அப்பாவிடம் கேட்பதைக் கேட்டேன். 'கடவுளின் பெயரால் ஆம்' என்றார் என் அப்பா. பெரியப்பா 'அவனை அடையாளம் கண்டு இதை உறுதிப்படுத்த முடியுமா?' என்று கேட்டார். அவர் 'ஆம்' என்றார். அவரைப் பற்றி எப்படி உணர்கிறாய் என்று பெரியப்பா கேட்டார். 'நான் உயிரோடு இருக்கும் வரை அவன் எனக்கு எதிரி தான்' என்றார் அப்பா." (Ibn Hisham, As-Sirah an-Nabawiyyah, vol. 2, pp. 257-258, Muhammad Fathi Mus'ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.162 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)
மேலே கூறப்பட்ட கதையானது சபியாவின் புத்தி கூர்மைக்கும் அறிவுக்கும் எடுத்துக்காட்டு. யூதர்கள் தூதரின் தூதுத்துவத்தைப் பற்றி அறிந்திருந்தார்கள் என்றும் அவர்கள் குழந்தைகளை எந்தளவுக்கு அறிந்திருந்தார்களோ அந்தளவுக்கு தூதரையும் அறிந்திருந்தார்கள் என்றும் இது காட்டுகிறது. இருந்தாலும் அவர்கள் இஸ்லாமையும் தூதரையும் வெறுத்தார்கள். இந்த கதை ஹுயய்யாய் கடவுளின் தூதருக்கு எதிராக வைத்திருந்த பகைமையையும் வெறுப்பையும் கூடக்காட்டுகிறது. சபியா அவர் தந்தையிடமிருந்து பாரம்பர்யமாக எந்த குணத்தையும் பெறவில்லை. ஏனென்றால், அல்லா அவரின் இதயத்தை இஸ்லாமிற்காக தயாராக்கியும் அவருடைய ஆன்மாவை நம்பிக்கைக்காக தயாராக்கியும் இருந்தார். (Muhammad Fathi Mus'ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.162-163)
இந்த ஹதித் முஸ்லிம்களின் நோய்வாய்ப்பட்ட மனதை வெளிப்படுத்துகிறது. நான் என் நூலில் காட்டியுள்ளது படி, அவர்களின் மனநோய் அவர்களின் தூதரிடம் இருந்து தொற்றியது.
நார்சிஸ்டுகள் [Narcissists] தங்கள் மேன்மையைப் பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றும் யாரேனும் இதை ஒத்துக் கொள்ள மறுத்தால் அவர்களுக்கு பொறாமை என்றும் எண்ணிக் கொள்கிறார்கள். மேலே கூறப்பட்ட ஹதித் முஸ்லிம்களின் நார்சிஸ்டு மனதைக் காட்டும் ஒரு எடுத்துக்காட்டு.
மக்கள் ஒருவன் கடவுளின் தூதன் என்பதை நம்பும் போது அவனை எப்படி கடுமையாக எதிர்க்க முடியும்? இது கொஞ்சமேனும் புரிகிறதா? ஒன்றும் புரியவில்லை. ஒரு இயல்பான மனிதனுக்கு இது புரியாது. ஆனால் ஒரு நார்சிஸ்டுக்கு புரியும். நார்சிசம் ஒரு மனநோய். அவர்களின் மூளையின் வேலை செய்யும் முறையே கிறுக்குத்தனமானது. அவர்கள் யதார்த்தத்தை விகாரமாகத் தான் புரிந்து கொள்வார்கள்.
மக்கள் எப்போதும் தாங்கள் சொல்வது தான் சரி என்றும் அதை எதிர்ப்பவர்கள் சொல்வது தவறு என்றும் நம்புகிறார்கள். யாரேனும் தாங்கள் சொல்வது தவறு என்றும் அதை எதிர்ப்பவர்கள் சொல்வது தான் சரி என்றும் கூறுவார்களா? இப்படிப்பட்ட லூசுத்தனமான வாதங்களை எப்படி ஒருவரால் முன்வைக்க முடிகிறது?
மேலும், மதீனாவில் இருந்த யூதர்கள் முகமது தான் அவர்கள் எதிர்பார்க்கும் மேசியா என்று எப்படி அறிந்தார்கள்? அவர்களுக்கு கிடைத்த ஆதாரம் தான் என்ன? அந்த ஆதாரம் இப்போது இல்லையே எப்படி?
பைபிளில் உன்னதப்பாட்டு என்ற புத்தகத்தில் 5:16 வசனத்தில் முகமதின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கிறது என்று முஸ்லிம்கள் கூறிக் கொள்கிறார்கள். இதற்கானஎன் மறுப்புரையை படித்து முஸ்லிம் மனதின் அவலத்தை தெரிந்து கொள்ளுங்கள். பைபிளில் முகமதைப்பற்றி எந்த குறிப்பும் இல்லை. அவனைப் பற்றிய எந்த ஆதாரமும் அவனுக்கு முன்னாள் வந்த எந்த மதப் புத்தகங்களிலும் இல்லை. அப்படி இருக்க, சபியாவின் அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் எப்படி முகமது "அவன்" தான் என்று தெரியும்? ஒருவேளை அவர்கள் அவனை ஷைத்தான் என்று எண்ணி இருக்கலாம். முகமது ஒரு பேய் என்று காட்டும் வகையில் பைபிளில் பல குறியீடுகள் இருக்கின்றன. ஆனால் அவன் யூதர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட மேசியா என்று காட்டுவதற்கு எந்த அடையாளங்களும் இல்லை.
இந்த பேத்தல்களை நம்புபவர்கள் புத்தி மழுங்கியவர்களாகத்தான் இருக்க வேண்டும். எந்த முஸ்லிமாவது பஹாயுல்லா கடவுளின் தூதர் என்று நம்பிக்கொண்ட பிறகு அவரை ஏற்றுக்கொள்ள மறுப்பார்களா? முடியவே முடியாது. இது போன்ற வாதம் பகுத்தறிவுக்கு எதிரானது. ஒரு முஸ்லிமால் மட்டுமே இது போன்ற அப்பட்டமான அனர்த்தங்களை நம்ப முடியும். பஹாயுல்லா வை கடவுளின் தூதர் என்று ஏற்றுக்கொண்டு ஆனால் அவரை நம்பாத ஒரு முஸ்லிமையாவது காட்ட முடியுமா? அதற்கு வாய்ப்பே இல்லை. இதை விட கேவலமான வாதத்தை யாராலும் முன்வைக்க முடியாது.
இஸ்லாம் ஒரு மோசடி என்பது ஒரு பெரிய துயரமல்ல. அது தன் பின்பற்றிகளின் மூளைகளை பகுத்தறிவுடன் சிந்திக்க முடியாத அளவுக்கு மழுங்கடித்து விட்டது என்பது தான் பெரிய துயரம். அவர்களின் காமாலைக் கண்களுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரிகிறது. அவர்களின் கண்களில் படுவதெல்லாம் திரிக்கப்பட்ட யதார்த்தமே. முஸ்லிம்கள் குழியாடி குவியாடிகளின் உலகில் வாழ்கிறார்கள். அவர்கள் பார்ப்பது விகாரமாக்கப்பட்ட உலகைத்தான். இஸ்லாமை கைகழுவிய பின்னர் தான் ஒருவரால் இயல்பான பிம்பங்களைக் காண முடியும். உங்கள் கருத்துக்கள் மட்டும் மாறாது, உங்கள் முழு weltanschauung ம், உங்கள் அடிப்படை கண்ணோட்டமும் (cognitive orientation) மாற்றமடையும்.
எல்லோருக்கும் இஸ்லாம் உண்மை என்று தெரியும் என்றும் அவர்கள் இஸ்லாமை ஏற்காமல் இருப்பதற்கு பொறாமையோ அல்லது அவர்களின் இதயத்தில் உள்ள நோயோ தான் காரணம் என்றும் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அவர்கள் இஸ்லாமின் கூற்றுக்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்த மட்டில், அதற்கு அவசியமே இல்லை. ஏனென்றால் அது சூரியனைப் போன்று தெளிவானது. உங்களால் பார்க்க முடியாவிட்டால் அதற்கு காரணம் நீங்கள் அதைப் பார்க்க விரும்பவில்லை. இதன் விளைவாக இஸ்லாமின் கொள்கைகளை மறுக்கும் யாரும் மனிதத்தன்மையற்றவர்களாக எடுத்துக் கொள்ளப்படுவார்கள். இப்படியாக அவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவது நியாயப்படுத்தப்படுகிறது.
ஜவடி மற்றொரு இஸ்லாமிய தளத்தை மேற்கோள் காட்டுகிறார்.
"டோராவில் [Torah = யூதர்களின் மதப் புத்தகம்] அடுத்ததும் கடைசியுமான தூதர் தெளிவாக விளக்கப்பட்டுள்ளார். இதில் யூதர்களும் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும் குறியீடுகள் இருந்தன." ஆனால் யூதர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை ஏனென்றால் அவர் ஒரு அரபியர். அவர்கள் எதிர்பார்ப்பது ஒரு யூதரை.
நல்லது, எங்கே என்று காட்டுவீர்களா? டோராவில் எங்கே முகமதுவைப் பற்றி எல்லோரும் அடையாளம் காணும் படி தெளிவாக விளக்கப் பட்டுள்ளது?
பொய்கள் என்ற அஸ்திவாரத்தின் மீது தான் இஸ்லாம் கட்டப்பட்டிருக்கிறது. முஸ்லிம்களின் மற்ற பொய்களைப் போல இதுவும் பொய்யே. தான் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளேன் என்று முகமது கூறியபோது அதைப் படித்து தெரிந்து கொள்வதற்கு அவனின் தொண்டர்கள் கையில் பைபிள் இல்லை. அவன் சொன்னதை அவர்கள் நம்பினார்கள். இன்று எல்லோரும் பைபிளைப் படிக்க முடியும். அது இணையத்திலேயே கிடைக்கிறது. எங்கே முகமது வருகிறான் என்று காட்டுங்கள். வெட்கமே இல்லை! உங்கள் சொந்த மகளைக் கொன்றால் உங்கள் மானம் காப்பாற்றப்படும் என்று நினைக்கும் உங்களுக்கு பொய் சொல்வதற்கு வெட்கம் இருக்குமா?
சபியாவின் குணம்.
சபியா எந்த அளவுக்கு அல்லாவின் பக்தையாக இருந்தாள் என்று பின்வருவதைவைத்து தெரிந்து கொள்ளலாம்.
அப்த் அல்லா இப்னு உபைதா (Abd Allah ibn Ubaydah )அறிவித்தார், "தூதரின் மனைவியான சபியாவின் அறையில் சில மக்கள் திரண்டார்கள். அவர்கள் அல்லாவை நினைவு கூர்ந்து, குரானைப் படித்து, கிடையாக விழுந்து வணங்கினார்கள். சபியா அவர்களிடம், 'நீங்கள் கிடையாக விழுந்தீர்கள், குரானை ஓதிநீர்கள், ஆனால் (அல்லாவுக்கு பயந்த) உங்கள் கண்ணீர் எங்கே? என்று கேட்டார்."(Abu Nu'aym al Asbahani, Hilyat al-Awliya', vol. 2, p. 55, Muhammad Fathi Mus'ad,The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.177 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)
இது அவள் அல்லாவின் தீவிர பக்தை என்று காட்டவில்லை. இந்த நிகழ்ச்சி முகமதின் சாவிற்கு பின்னும் அவளின் பதின்ம வயது கடந்த பின்னும் நடந்ததால், அனேகமாக அவளுடைய Stockholm மனநிலையை விட்டு மீண்டிருப்பாள். இதை அவள் கிண்டலாக சொல்லி இருப்பாள். ஒபாமா சௌதி மன்னனின் கையை முத்தமிடும் போது காலை மடக்கி குனிந்து முத்தமிட்டார். அடுத்த முறை அவர் கிடையாக விழுந்து காலணிகளை முத்தமிடவேண்டும் என்று நான் அறிவுறுத்தினேன். அப்படி என்றால், நான் சவுதி மன்னனின் தீவிர பக்தனா? முஸ்லிம்களிடத்தில் அடிப்படை அறிவும் (common sense) பகுத்தறிவுச் சிந்தனையும் (rational thinking) மருந்துக்கும் இல்லை.
http://www.geocities.com/mutmainaa1/people/safiyah.html என்ற பக்கத்தில் இருந்து எடுக்கப் பட்டது.
தூதரின் சாவிற்கு பிறகும் கூட அவரின் சோதனைகள் குறையவில்லை. ஒரு முறை, அவரின் அடிமைப்படுத்தப்பட்டபெண் நம்பிக்கையாளர்களின் [முஸ்லிம்களின்] தலைவரான உமரிடம் சென்று "நம்பிக்கையாளர்களின் தலைவரே, சபியா சப்பாத்தை [Sabbath = யூதர்களின் ஒய்வு நாள்] அனுசரிக்கிறார், யூதர்களிடம் தொடர்பு வைத்திருக்கிறார்" என்று கூறினார். உமர் சபியாவை அதைப் பற்றிக் கேட்டார். அவர் "அல்லா சப்பாத்திற்கு பதிலாக வெள்ளிக்கிழமையை அறிவித்ததற்கு பிறகு நான் சப்பாத்தை விரும்பவில்லை. எனக்கு உறவுள்ள யூதர்களுடன் மட்டுமே தொடர்பு வைத்துள்ளேன்" என்று கூறினார். பிறகு சபியா தன்னுடைய அடிமைப்படுத்தப்பட்டபெண்ணிடம் உமரிடம் பொய் கூறும் அளவுக்கு உன்னை பிடித்தது எது என்று கேட்டார். அந்த பெண்ணும் "ஷைத்தான்" என்று கூறினார். சபியா, "போ, உனக்கு சுதந்திரம் கொடுக்கிறேன்" என்றார்.
இந்த நிகழ்ச்சி முகமதின் சாவிற்கு பின்னும் சபியா கீழ்படிந்த முஸ்லிமாக இருந்தார் என்று நிரூபிக்கிறது.
இந்த ஹதிதினால் உண்மையை மறைக்க முடியவில்லை. சபியாவின் அடிமைப்படுத்தப்பட்ட பெண் சபியா சப்பாத்தை அனுசரிப்பதையும், மதினாவில் உள்ள அடிமைப்படுத்தப்பட்ட யூதர்களோடு தொடர்பு வைத்திருப்பதையும் பார்த்தார். அந்த அப்பாவிப் பெண் கூட அடிமைப்படுத்தப்பட்டவர் தான். அவர் எந்த மாதிரியான வேதனைகளை தாங்கிக் கொள்ள வேண்டியிருந்ததென்று யாருக்கும் தெரியாது. அனேகமாக அவர் ஈரானிலோ அல்லது எகிப்திலோ கைப்பற்றப்பட்டிருக்க வேண்டும். அவரை அசுத்தமான தீட்டானவள் என்று கருதும் பகைமையான மக்களின் மத்தியில் மாட்டிக் கொண்டிருக்கிறார். அனேகமாக ஏதேனும் ஆதாயம் கிடைக்காதா என்ற நம்பிக்கையில் அவர் தான் பார்த்ததை உமரிடம் தெரிவித்திருக்கலாம். விசாரிக்கப்படும் போது சபியா என்ன சொல்வார்? அவரால், முன்கோபத்திலும் வன்முறையிலும் பெயர் போன உமரை எதிர்கொண்டு, தான் முகமதின் மோசடிகளை நம்பியதில்லை என்று அறிவிக்க முடியுமா? தனது உயிரைக் காத்துக்கொள்ள அவர் தன் நம்பிக்கையை மறைக்க வேண்டியிருந்தது. இப்போது முஸ்லிம்களின் அன்னைகளில் ஒருவரின் வார்த்தைக்கு எதிராக தன் வார்த்தை எடுபடுமா என்று பயந்த அந்த பெண் தன் உயிருக்கு அஞ்சி ஷைத்தான் தான் தன்னை இவ்வாறு செய்ய தூண்டியது என்று கெஞ்சினார். இஸ்லாம் என்பது ஒரு துயரம். ஒவ்வொரு கதையும் ஒரு துயரத்தில் நடக்கும் மற்றொரு துயரமே. எல்லா பாத்திரங்களும் பாதிக்கப்பட்டவர்களாகவும் அதேசமயம் தங்கள் பங்குக்கு மற்றவர்களை பாதிப்பவர்களாகவும் விளங்குகிறார்கள். தனது வெற்றியைப் பார்த்து ஷைத்தான் மிகவும் பெருமைப்படவேண்டும்.
ஒரு ஹதீதை படிக்கும்போது அது நமக்கு பகுத்தறிவுடன் சிந்திக்கவும் உதவுகிறது. அதில் உள்ள வார்த்தைகளின் வெளிப்படையான பொருளில் உண்மை இல்லை. அவைகளில் உள்ள மறைமுகமான பொருளில் தான் உண்மை ஒளிந்து கொண்டு இருக்கிறது. ஒரு ஹதிதைப் புரிந்து கொள்ள அதில் இலைமறைகாயாக ஒளிந்துள்ள பொருளைத்தான் நாம் தேட வேண்டும்.
முஸ்லிம்கள் படிக்கும் அதே குரானையும் ஹதிதையும் தான் நான் படிக்கிறேன். இருந்தாலும், அவர்கள் 1400 ஆண்டுகளாக பார்க்காதவைகளை நான் கண்டேன். காரணம் என்னவென்றால், நான் எதையும் கண்ணை மூடிக்கொண்டு ஓதுவதில்லை. அவைகளை ஆராய்ந்தும் பார்த்தேன். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு மதப் புத்தகத்தையோ அல்லது மற்ற புத்தகத்தையோ படிக்கும் போது, எதையும் சோதிக்கும் மனதுடன் படிக்க வேண்டும்.
சபியா முகமதின் குடும்ப உறுப்பினர்களுடன் அன்பும் அக்கறையும் கொண்ட உறவை ஏற்படுத்திக் கொண்டார். அவர் பாத்திமாவுக்கு தன் அன்பின் அடையாளமாக ஒரு நகையை அன்பளிப்பாக கொடுத்தார். அவர் தூதரின் சில மனைவிகளுக்கும் தான் கைபரில் இருந்து கொண்டு வந்திருந்த தன் நகைகளை அன்பளிப்பாக அளித்தார். . (Ibn Sa'd, Tabaqat, vol.8, p.100, Muhammad Fathi Mus'ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.172 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)
வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், அவர்களின் அன்பைப் பெறுவதற்கும் அவர்களின் பகைமையை குறைத்துக்கொள்ளவும் சபியா முயற்சித்தார். வலியப்போய் சமாதானம் செய்து கொள்வது என்பது நலிந்தவர்களின் தற்காப்பிற்கான உபாயம்.
சபியாவுடனான முகமதின் நிக்காவும் அதன் ஞானமும்
ஒரு பிரபலமான இஸ்லாம்வெறுப்பி (அது நானாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இந்த இஸ்லாம் வெறியனுக்கு (Islamist) என் பெயரைக் குறிப்பிடுவதற்கு தயக்கம்) கூறிகொள்வதைப் போல சபியா தூதரை மணக்கும்படி கட்டாயப் படுத்தப்பட்டார் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. தூதர் சாகும் வரை சபியா அவருக்கு நம்பிக்கையானவராக இருந்தார் என்பது எல்லோரும் அறிந்ததே.
மெய்யாலுமா!? அப்படியென்றால், அவருக்கு மலர்களை அனுப்பிய ஆண்களையும் செல்போனில் அழைத்த ஆண்களையும் பார்க்க மறுத்துவிட்டாரா? அவருக்கு வேறு ஏதேனும் போக்கு இருந்ததா? நீங்கள் உங்கள் மனைவியை அறையில் பூட்டி வைத்திருக்கும் போது அவர் உங்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறார் என்று கூறிக் கொள்ள முடியாது. சபியாவுக்கு மதீனாவில் எந்த சுதந்திரமும் இல்லை. அவருக்கு வேறு போக்கிடமும் இருக்கவில்லை.
சபியா தன்னைத் தவிர வேறு யாரையும் 'பார்க்கவில்லை' என்பதை தூதரே உறுதிசெய்தது Muhammad Husayn Haykal, op. cit., p. 374, ல் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதை இணையத்திலும்http://www.bismikaallahuma.org/index.php/articles/umm-ul-mukminin-safiyyah-the-jewish-wife-of-muhammadpஎன்ற பக்கத்தில் பெறலாம்.
Martin Lings பதிவு செய்துள்ளபடி, தூதரே பின்வரும் வாய்ப்பை அவருக்கு கொடுத்திருக்கிறார்.
அவர் [தூதர் முகமது] அப்போது சபியாவிடம் அவரை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்க தயார் என்றும், அவர் ஒன்று தங்கள் மக்களிடம் திரும்பச்சென்று யூதராகவே இருக்கலாம் அல்லது இஸ்லாமை ஏற்றுக்கொண்டு தனக்கு மனைவியாக வரவேண்டும் என்றும் கூறினார். சபியா "நான் அல்லாவையும் அவரின் தூதரையும் ஏற்கிறேன்" என்றார். அவர்கள் வீடு திரும்பும் வழியில் முதல் நிறுத்தத்தில் நிக்கா செய்து கொண்டனர். (Martin Lings,Muhammad: His Life Based On The Earliest Sources (George Allen & Unwin, 1983), p. 269,http://www.bismikaallahuma.org/index.php/articles/umm-ul-mukminin-safiyyah-the-jewish-wife-of-muhammadp என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.)
அவரை அடிமைத்தளையில் இருந்து விடுவிப்பானா? அவருடைய கணவர் கொல்லப்பட காரணமே அவன் தான். அவருடைய அப்பாவும் பெரியப்பாவும் கொல்லப்பட காரணமே அவன்தான். அவரின் சகோதரர்களின் படுகொலைகளும் அவனாலே தான் நடந்தது. அவரின் பெண் உறவினர்கள் எல்லோரும் முஸ்லிம்களால் அடிமைப்படுத்தப் பட்டதற்கு காரணமும் அவனே. அவர் எங்கே போவார்? அவர் முகமதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் வேறொரு முஸ்லிமால் அடிமைப்படுத்தப்பட்டு அவனின் காமவெறியை தனித்துக் கொள்ளப்பயன்படும் பாவையாக வேண்டியிருந்திருக்கும்.
சபியாவுடனான நிக்கா, பகையை குறைக்கவும் உறவை வளர்க்கவும் உதவுமாகையால், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது கூட. John L. Espositoகீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.
அரேபிய தலைவர்களின் வழக்கத்திற்கிணங்க, பல நிக்காக்கள் கூட்டணிகளை உறுதி செய்வதற்காக செய்யப்பட்டவை. மற்ற நிக்காக்கள் பாதுகாப்பு தேவைப்படுகின்ற போரில் உயிரிழந்த தன் சகாக்களின் விதவைகளுடன் செய்யப்பட்டது. (John L. Esposito, Islam: The Straight Path, pp. 19-20,http://www.bismikaallahuma.org/index.php/articles/umm-ul-mukminin-safiyyah-the-jewish-wife-of-muhammadp என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)
John Esposito பணத்திற்காக மனசாட்சியை விற்றுவிட்டவர். முகமது சபியாவை நிக்கா செய்ததன் மூலம் யாருடன் அரசியல் கூட்டணியை பலப்படுத்த விரும்பினான்?, அவருடைய இனக்குழுவே பூண்டோடு அழிக்கப்பட்டுவிட்டது. [அந்த இனக்குழுவின் தலைவரான] அவருடைய தந்தை சிரைச்சேதம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு விட்டார். இரண்டு சொட்டு அடிப்படை அறிவு இருந்தால் கூட இந்த பொய்களை கரைத்து விடலாம்.
சபியாவுடனான நிக்கா என்பது அவருக்கு மிகுந்த கௌரவம் கொடுக்கும் செயல். ஏனென்றால், அது அவருடைய மாண்பை மட்டும் காப்பாற்றவில்லை, அவர் அடிமைப்படுத்தப்படுவதில் இருந்தும் காப்பாற்றி இருக்கிறது.
கடைசியாக ஜவடி நான் சொல்வதையே சொல்கிறார். இதையேதான் மேலே எழுதி இருக்கிறேன். இந்த சொம்புதூக்கி தன் வார்த்தையையே மறுத்துப் பேசுவதைப் பாருங்கள். கொஞ்சநேரத்திற்கு முன்னர்தான் முகமது சபியாவுக்கு சுதந்திரம் கொடுத்தான் என்றார். இப்போது சபியாவுக்கு இருக்கும் ஒரேஒரு மாற்று வேறொரு முஸ்லிமால் அடிமைப்படுத்தப்பட்டு அவனின் காமவெறியை தனித்துக்கொள்ளப் பயன்படும் பாவையாக வேண்டியிருந்திருக்கும் என்று ஒத்துக்கொள்கிறார்.
Haykal இவ்வாறு எழுதிகிறார்:
தான் வெற்றிகண்ட மன்னர்களின் மனைவிகளையும் மகள்களையும், அந்த பெண்களின் துயரத்தை குறைக்கும் விதமாகவும் அவர்களின் மாண்பைக் காக்கும் விதமாகவும், மணந்து கொள்வது தான் பெரிய போர்த்தலைவர்களின் வழக்கம். அதேபோன்றுதான் தூதர் சபியாவை அடிமைத்தளையில் இருந்து விடுவித்து நிக்கா செய்து கொண்டார்.(Muhammad Husayn Haykal, The Life of Muhammad (North American Trust Publications, 1976), p. 373,http://www.bismikaallahuma.org/index.php/articles/umm-ul-mukminin-safiyyah-the-jewish-wife-of-muhammadp என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)
உண்மையிலேயே இஸ்லாமிய மனதைப் பார்த்தால் எனக்கு மலைப்பாக இருக்கிறது. யாரோ உங்கள் வீட்டைத் அதிரடித் தாக்குதல் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களையும் உங்கள் மகன்களையும் கொன்றுவிட்டு உங்கள் மகள்களையும் மனைவியையும் அடிமைப்படுத்தி உங்கள் மகளை வல்லுறவு கொண்டு அவளை தன் மனைவி என்று அழைத்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படிச்செய்வதன் மூலம் அவளின் துயரம் குறைக்கப்படுமா? அல்லது அவளின் மாண்பு தான் காக்கப்படுமா?
இதுபோன்ற விகாரமான சிந்தனை எப்படி வந்தது. முஸ்லிம்களை பொறுத்த மட்டில், நிக்கா என்ற ஒப்பந்தத்தினால் தான் ஒரு பெண்ணுடைய மற்றும் அவருடைய குடும்பத்தினுடைய மானம் காப்பாற்றப்படும். பெண்ணானவள் ஒரு 'ஔரத்', அதாவது மூடிமறைக்க வேண்டிய அந்தரங்க உறுப்பு. அவளுக்கு நிக்கா நடந்தால் மட்டுமே அவள் மூடப்பட்டு அவளின் மானம் காப்பாற்றப்படும். நிக்காவின் பிறகு அவளை வல்லுறவு கூட கொள்ளலாம். இஸ்லாமிய சட்டத்தின் படி அது வல்லுறவு அல்ல.
தூதர் சபியாவுடனான நிக்காவின் மூலம் யூதர்கள் கொண்டிருந்த தூதருக்கும் இஸ்லாமுக்கும் எதிரான பகைமையை முடிவுக்கு கொண்டு வர விரும்பினார். ஆனால் அந்தோ பரிதாபம், அவர்கள் தூதருக்கும் இஸ்லாமுக்கும் எதிரான தங்களின் வெறுப்பைக் கைவிடவே இல்லை. ஏனென்றால் கெட்ட எண்ணத்துடனும் பிடிவாதமாகவும் இருப்பது அவர்களின் இயல்பு. ( See Muhammad M. as-Sawwaf, Zawjat ar-Rasul at-Tahirat wa Hikmat T'adudihinn, pp. 76-79, Muhammad Fathi Mus'ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.168 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)
இது போன்ற வாதங்களைக் கேட்க எனக்கு வாந்தி தான் வருகிறது. முகமது ஒரு யூதப் பெண்ணை பலாத்காரஉறவு கொண்டு அவரை தன் மனைவி என்று அழைத்துக் கொண்டதற்காக யூதர்கள் அவனை நேசிக்க வேண்டும் என்றா எதிர்பார்க்கிறார்கள்? அந்த பெண்ணின் முழு குடும்பமும் இனக்குழுவும் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அவர்கள் மறந்து விடவேண்டுமா? இந்தளவுக்கு கல்நெஞ்சக்காரர்களாக எப்படி இருப்பது? முஸ்லிம்கள் நம்மை படுகொலைகள் செய்வதில் எந்த தவறையும் பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் குரானில் இருந்து சில நிக்கா வாசகங்களை படித்துவிட்டு நமது பெண்களை வல்லுறவு கொள்வதற்கு நாம் அவர்களுக்கு நன்றியோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நாம் இந்த ஜென்மங்களுடன் எப்படி சேர்ந்து வாழ்வது? அவர்கள் வேற்று கிரகவாசிகள். நமது மதிப்புகளுக்கும் அவர்களின் மதிப்புகளுக்கும் சம்பந்தமே இல்லை.
தூதரின்சபியாவைப்பற்றியகண்ணோட்டம்.
தூதரின் சகாவான பிலால் இப்னு ரபா (Bilal ibn Rabah), சபியாவையும் மற்ற ஒரு யூத பெண்ணையும் அவருக்கு முன்னால் கொண்டு வரும்போது போரில் படுகொலை செய்யப்பட்ட யூதர்களின் உடல்கள் வழியாக கொண்டு வந்தபோது, தூதர் பிலாலை நோக்கி "பிலால், உன் நெஞ்சில் சிறிதும் ஈரம் இல்லையா, இரண்டு பெண்களை அவர்களின் கணவர்களின் கொல்லப்பட்ட உடல்களின் வழியாகக் கூட்டி வருகிறாயே?" என்று கடிந்து கொண்டார். (A. Guillaume (மொழிபெயர்ப்பு.), The Life of Muhammad: A translation of Ibn Ishaq's Sirat Rasul Allah (Oxford University Press, 1978), p. 515,http://www.bismikaallahuma.org/index.php/articles/umm-ul-mukminin-safiyyah-the-jewish-wife-of-muhammadp என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)
இப்னு ஐசக்கின் சிராத்தில் [வாழ்க்கை வரலாறு] இருந்து இதைப் பற்றிய முழுபத்தியையும் படித்துப் பார்க்கலாம்.
"அல்லாவின் தூதர், இப்னு அபி அல் ஹுக்யகின் (Ibn Abi al-Huqyaq) கோட்டையான அல் கமுஸ் (al-Qamus) ஐ கைப்பற்றிய பிறகு, சபியா பின்த் ஹுயாய் பி. அக்தாப் (Safiyyah bt. Huyayy b. Akhtab) மற்றொரு பெண்ணுடன் அவரின் முன் கொண்டுவரப்பட்டார். அவர்களைக் கொண்டு வந்த பிலால் அவர்களை படுகொலை செய்யப்பட்ட யூதர்களின் உடல்களின் வழியாக கொண்டு வந்தான். சபியாவுடன் வந்த பெண் அந்த உடல்களைப் பார்த்தபோது கதறி அழுது தன முகத்தை அடித்துக் கொண்டு தலையில் மண்ணை அள்ளிக் கொட்டிக்கொண்டாள். அல்லாவின் தூதர் அவளைப் பார்த்து, "இந்த சனியனை இங்கிருந்து கொண்டு போங்கள்" என்றார். அவர் சபியாவை தன பின்னால் விட்டு விடும்படியும் அவளை தனக்காக தேர்ந்தேடுத்திருக்கிறேன் என்றும் கட்டளை இட்டார்."
பிலால் முகமதிடம் சபியாவையும் அவளின் கணவரின் தங்கையையும் அன்றிரவுக்காக அவர்களில் ஒருவரை முகமது தேர்ந்தெடுப்பதற்காக கூட்டி வருகிறான். அப்போதுதான் 'அல்லாவின் கருணை' (pbuh) கினானாவை சித்ரவதை செய்து கொன்று முடித்திருந்தான். தனது சகோதரனின் கொல்லப்பட்ட உடலைக் கண்டதும், கினானாவின் தங்கை புத்தி பேதலித்துப் போனாள். 'அல்லாவின் கருணை' அவள் கன்னத்தில் அறைந்து "இந்த சனியனை இங்கிருந்து கொண்டு போங்கள்" என்று கத்தினான். அந்த 'சனியனின்' ஒரே ஒரு குற்றம் தன் சகோதரனின் கொல்லப்பட்ட உடலைக் கண்டு கதறியதுதான். பிறகு இந்த 'என்சான் காமெல்' (Ensaane Kaamel = அதிசிறந்த மனிதன்) பிலாலை நோக்கி "பிலால், உன் நெஞ்சில் சிறிதும் ஈரம் இல்லையா, இரண்டு பெண்களை அவர்களின் கணவர்களின் கொல்லப்பட்ட உடல்களின் வழியாகக் கூட்டி வருகிறாயே? " என்று கடிந்து கொள்கிறான்.
இதைத்தான் முஸ்லிம்கள் தங்கள் தூதரின் இளகிய நெஞ்சம் என்று கூறிக் கொள்கின்றனர்.
ஒரு சமயத்தில் ஜைனாப் பின்த் ஜஹ்ஷ் (Zaynab bint Jahsh) ம் சபியாவும் தூதருடன் பயணம் போயிருந்தனர். சபியாவின் ஒட்டகம் நோய்வாய்ப்பட்டது. தூதர் ஜைனாபிடம் "சபியாவின் ஒட்டகம் நோய்வாய்ப்பட்டுவிட்டது, அவளுக்கு உன்னுடைய ஒட்டகங்களில் ஒன்றைக் கொடு " என்று கூறினார். அதற்கு அவள் "இதுபோன்ற யூதப் பெண்ணுக்கு ஜென்மத்துக்கும் கொடுக்க மாட்டேன்" என்றாள். தூதர் அவளிடம் கோபம் கொண்டு இரண்டு மாதத்திற்கு அவளை நெருங்க வில்லை. (Ahmad, vol. 6, pp. 336-337, Muhammad Fathi Mus'ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.173 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)
இந்த ஹதிதில் இருந்து நாம் என்ன அறிகிறோம்? முஸ்லிம்கள் இதில் என்ன எழுதி இருக்கிறதோ அதை மட்டும் தான் அறிந்து கொள்வார்கள். நியாயமான மக்களுக்கு இந்த ஹதித் முகமதின் அராபிய மனைவிகளுக்கிடையே சபியா எப்படி தனிமையில் வாழ்ந்தால் என்பதைக் காட்டுகிறது. தனது எதிரிகளான அவர்களின் அன்பைப்பெற அவளால் முடிந்தவரை முயன்றாள். அவர்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்தாள். அவள் உண்மையாக இல்லை என்பது நார்சிஸ்ட் முகமதைத் தவிர எல்லோருக்கும் தெளிவாக தெரிந்தபோதும் முகமதை விரும்புவதைப்போல் நடித்தாள். இந்த இளம் பெண்ணுக்கு உயிருடன் இருக்க அவ்வளவு தீவிரமான ஆசை இருந்தது.
சபியா தன்னை உண்மையாகவே விரும்புவதாக என்னுமளவிற்கு முகமது ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. தனது கூரிய தந்திரத்திற்கும் மாறாக, இந்த நார்சிஸ்ட் ஒரு மூடன். கைபரில் ஒரு பெண்மணியிடம் அவரின் உறவினர்களை எல்லாம் கொன்றொழித்து விட்டு தனக்கு சமையல் செய்து கொடுக்கும் படி கேட்க ஒரு மூடனால் அல்லாமல் வேறு யாரால் முடியும்? அவர் அவனுக்கு விஷம் வைத்துக் கொல்லப் பார்த்தாள். துரதிர்ஷ்ட வசமாக அவன் முழூக்கறியையும் தின்று முடிக்கும் முன் இந்த விஷயம் வெளிப்பட்டுவிட்டது.
நார்சிஸ்டுகள் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்கள். முகமது தான் மிகவும் சிறப்பானவன் என்றும் அதனால் எல்லோராலும் இயற்கையாகவே நேசிக்கப்பட வேண்டும் என்றும் நினைத்தான். யாரேனும் அவனை விரும்பாவிட்டால் அதற்கு காரணம் அவர்களின் இதயத்தில் தீய்மை குடி கொண்டிருக்கிறது என்றும் நினைத்தான். இதே மனநோயினால் முஸ்லிம்களும் பீடிக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால் யதார்த்தமோ மிகவும் வேறுபட்டது. சபியாவுக்கு தன் சொந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்வது தான் இலக்கே. Stockholm மனநிலை இருந்த போதிலும் தன் உறவினர்களை எல்லாம் கொன்று தன் வாழ்க்கையையும் அழித்துவிட்ட அந்த ஆண்மையற்ற கிழவனை காதலிக்கும் அளவுக்கு அவளுக்கு புத்தி கெட்டுப் போகவில்லை. Stockholm மனநிலை காதலுக்கு சமம் கிடையாது.
தூதர் சபியாவை மரியாதையுடனும், பரிவுடனும் மற்றும் அன்புடனும் நடத்துவது வழக்கம். "அல்லாவின் தூதர் தன் மனைவிகளுடன் ஹஜ் சென்றார். வழியில் இருப்பதிலேயே நோஞ்சானாக இருந்த எனது ஒட்டகம் மண்டியிட்டு விட்டது. ஆகையால் நான் அழுதேன். தூதர் என்னிடம் வந்து என் கண்ணீரைத் தன் கைகளினாலும் ஆடையினாலும் துடைத்தார். அவர் என்னை அழவேண்டாம் என்று ஆறுதல் கூறக்கூற நான் மேலும் மேலும் அழுதேன்" என்று சபியா கூறினார். (Ahmad, vol.6, p. 337, Cited in Muhammad Fathi Mus'ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.176 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)
இந்த கதை கல் நெஞ்சத்தையும் கரையச்செய்யும். உங்களுக்கு இதயம் என்று ஒன்று இருந்தால் உங்களால் அழாமல் இருக்க முடியாது. அந்த இளம் பெண்ணின் நிலையில் உங்களை எண்ணிக் கொள்ளுங்கள். நீங்கள் கைப்பற்றப்பட்டு உங்கள் உறவினர்களைக் கொன்ற அதே எதிரிகளின் மத்தியில் வாழும் ஒரு பெண். உங்களுக்கு பேச்சுத் துணையாகவோ ஆறுதல் அளிக்கக் கூடியவர்களாகவோ யாரும் இல்லை. உங்களைச் சுற்றி உள்ள எல்லோராலும் வெறுக்கப் படுகிறீர்கள். உங்களை விரும்பும் ஒரே ஒரு மனிதனும் உங்கள் தந்தையையும் கணவனையும் கொன்றவன்.
அவளுடைய ஒட்டகம் நோய்வாய்ப்பட்டபோது அவளால் தன் அழுகையை அடக்கமுடியவில்லை. அந்தளவு வலியை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தனது ஒட்டகத்திற்காகத்தான் தேற்றமுடியாத அளவுக்கு அழுகிறாள் என்று நினைப்பது முட்டாள்தனம். அவள் தன் தனிமையை எண்ணிக் கதறுகிறாள். பதினேழு பதினெட்டு வயது என்பது ஒன்றும் அவ்வளவு பெரிய வயதில்லை. எனக்கு பதினாறு வயதில் என் நாட்டை விட்டு வந்தேன். எனது பெற்றோர்கள் உயிருடன் இருந்தார்கள். நான் எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்களிடையில் வாழ்ந்து வந்தேன். அப்படி இருந்த போதிலும், என் குடும்பத்தைப் பற்றிய ஏக்கம் என்னை வாட்டியது. சில இரவுகள் நான் நிலவைப் பார்த்துக் கொண்டு எனது அம்மாவும் என்னைப் போன்று நிலவைப் பார்த்துக் கொண்டு இருப்பார் என்று எண்ணி ஓசையில்லாமல் அழுவேன். சபியாவின் இதயத்தில் இருந்த வலியை யாரறிவார்கள்? அந்த இளம்பெண் தனது ஜன்னலின் முன் நின்று கொண்டு, அவளது அறையின் இருளில், ஒவ்வொரு இரவும், நட்சத்திரங்களைப் பார்த்து, அதில் எது தனது கணவன், எது தனது தந்தை, எவைகள் தனது சகோதரர்கள், எது தனது பெரியப்பா என்று யோசித்துக் கொண்டிருந்திருப்பாள். நான் என் வயது நண்பர்களுடன் வாழ்ந்தேன். இளவயது பையன்கள் எதைச் செய்வார்களோ அதையே செய்து மகிழ்ச்சியாக காலத்தைக் கடத்தினோம். சபியா தன்னந்தனியாக இருந்தாள். முகமது சாகக்கிடக்கும்போது சபியா அவனிடத்தில் தான் சாக வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினாள். ஒருவேளை அதை உண்மையாகத்தான் சொல்லியிருப்பாள். அவள் பல கோடி முறை தனக்கு இறப்பு வரக்கூடாதா என்று ஏங்கி இருப்பாள்.
நான் செய்த செயல்களிலேயே மிகவும் வலி மிகுந்தது தபரியைப் படித்தது தான். அந்தப் புத்தகத்தில் அவ்வளவு துயரம் நிறைந்திருக்கிறது. ஆனால் வரிகளை மேலோட்டமாகப் படிக்காமல் அவற்றின் உட்பொருள் புரிந்து படிக்க வேண்டும். உங்களால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக உங்களை வைத்துப் பார்க்க முடியவேண்டும். இது முஸ்லிம்களால் செய்ய முடியாத ஒன்று. அவர்கள் சிரிக்கவும் கெக்களிக்கவும் கூடச் செய்வார்கள். இஸ்லாமின் தாக்கத்தின் விளைவாக அவர்கள் மனிதத்தன்மையே அற்ற மற்றவர்களின் மீது அன்போ பரிவோ அற்ற பேய்களாக மாற்றப் பட்டிருக்கிறார்கள்.
http://thamilislam.tk
No comments:
Post a Comment