பிரசார கூட்டத்தில் பங்கேற்ற
காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் மீது,
நேற்று வாலிபர் ஒருவர் ஷூவை
வீசினார். உடனடியாக அந்த வாலிபரை,
போலீசார் கைது செய்தனர். அன்னா
ஹசாரே அணியைச் சேர்ந்தவர்கள்
மீது, இரண்டு நாட்களுக்கு முன் ஷூ
வீசப்பட்ட நிலையில், தற்போது, ராகுல்
மீதும் ஷூ வீசப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில், வரும் 30ம்
தேதி, ஒரே கட்டமாக சட்டசபை
தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அந்தக் கட்சியின் பொதுச் செயலர் ராகுல், தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே முதல்கட்ட பிரசாரத்தை முடித்த அவர், தற்போது இரண்டாவது கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தூரத்தில் விழுந்த ஷூ : இந்நிலையில், டேராடூனில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் ராகுல் பங்கேற்ற போது, அவரை நோக்கி வாலிபர் ஒருவர், ஷூவை வீசினார். ஆனால் அந்த ஷூ, ராகுல் இருந்த இடத்திலிருந்து, 10 மீட்டர் தூரத்தில் விழுந்தது. உடன், ஷூ வீசிய கிஷன்லால் என்ற வாலிபரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என,
டேராடூன் போலீஸ் அதிகாரி கோஸ்வாமி கூறினார். ஷூ வீசிய வாலிபரை, காங்., தொண்டர்களும், மற்றவர்களும் தாக்க முற்பட்ட போது, "அவரைத் தாக்க வேண்டாம்' என்றும் ராகுல் கேட்டுக் கொண்டார். பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, இரண்டு நாட்களுக்கு முன், உத்தரகண்ட் மாநிலத்தில், அன்னா ஹசாரே அணியினர் பிரசாரத்தைத் துவக்கிய போது, அங்குள்ள அரங்கம் ஒன்றில் அவர்களின் மீது ஷூ வீசப்பட்டது. அந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் முடிவதற்குள், ராகுல் மீது ஷூ வீசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.,வை விமர்சித்த ராகுல் : முன்னதாக, பல்வேறு தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசிய ராகுல், ஊழல் விவகாரம் தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்தார்
பா.ஜ.,வை விமர்சித்த ராகுல் : முன்னதாக, பல்வேறு தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசிய ராகுல், ஊழல் விவகாரம் தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்தார்
அப்போது அவர் கூறியதாவது: ஊழலை எதிர்த்துப் போராடுவதில், நாங்கள் அக்கறை காட்டவில்லை என, பா.ஜ., கட்சியினர் சொல்கின்றனர். ஆனால், தங்கள் கட்சி ஆளும் கர்நாடகா, சத்திஸ்கர், உத்தரகண்ட் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் நடக்கும் ஊழல்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சியோ, ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் உட்பட பலரை சிறைக்கு அனுப்பியுள்ளது. பலமான லோக்பால் மசோதாவை காங்., தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த மசோதா, பார்லிமென்டில் நிறைவேறவிடாமல், பா.ஜ., தடுத்து விட்டது. இவ்வாறு ராகுல் பேசினார்.
No comments:
Post a Comment