Tuesday, January 31, 2012

சவூதிக்கு வேலைக்கு சென்ற இந்திய பெண்கள் சிறைபிடிப்பு: கட்டாயப்படுத்தி விபச்சாரம்


டெல்லி: வேலை வாங்கித் தருகிறேன் என்ற பெயரில் சவூதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 56க்கும் மேற்பட்ட இந்திய பெண்கள் அங்கு சிறைபிடிக்கப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.


கடந்த 2 மாதத்தில் டார்ஜிலிங், கலிம்பாங் மற்றும் நேபாலைச் சேர்ந்த 56க்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு ஏஜென்சிகள் மூலம் சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றனர். சவூதிக்கு சென்ற அவர்கள் அங்கு சிறைபிடிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சம்பாதிப்பவர்கள் அந்த அப்பாவி பெண்களின் பாஸ்போர்டுகளைப் பறித்து வைத்துள்ளனர்.

இதனால் அந்த பெண்கள் வேறு வழியின்றி தினம், தினம் நொந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் டார்ஜிலிங்கைச் சேர்ந்த நிஷ் ராய் என்ற பெண் மட்டும் எப்படியோ தனது பாஸ்போர்டை எடுத்துக் கொண்டு இந்தியாவுக்கு தப்பியோடி வந்துவிட்டார்.

இங்கு வந்தவுடன் தனக்கு நேர்ந்த கொடூரத்தை டார்ஜிலிங் போலீசில் தெரிவித்தார். மேலும் சவூதியில் இது போன்று 56க்கும் மேற்பட்ட இந்திய பெண்கள் சிக்கித் தவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து டார்ஜிலிங் போலீசார் கூறியதாவது,

மேற்கு வங்க அரசு மற்றும் சிஐடி போலீசார் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கவிருக்கின்றனர். சவூதியில் சிக்கியுள்ள பெண்களின் குடும்பத்தாரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக 2 ஏஜென்சி நிபுணர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர். 

source:tamil.oneindia

--
http://thamilislam.blogspot.com

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails