கடந்த 2 மாதத்தில் டார்ஜிலிங், கலிம்பாங் மற்றும் நேபாலைச் சேர்ந்த 56க்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு ஏஜென்சிகள் மூலம் சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றனர். சவூதிக்கு சென்ற அவர்கள் அங்கு சிறைபிடிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சம்பாதிப்பவர்கள் அந்த அப்பாவி பெண்களின் பாஸ்போர்டுகளைப் பறித்து வைத்துள்ளனர்.
இதனால் அந்த பெண்கள் வேறு வழியின்றி தினம், தினம் நொந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் டார்ஜிலிங்கைச் சேர்ந்த நிஷ் ராய் என்ற பெண் மட்டும் எப்படியோ தனது பாஸ்போர்டை எடுத்துக் கொண்டு இந்தியாவுக்கு தப்பியோடி வந்துவிட்டார்.
இங்கு வந்தவுடன் தனக்கு நேர்ந்த கொடூரத்தை டார்ஜிலிங் போலீசில் தெரிவித்தார். மேலும் சவூதியில் இது போன்று 56க்கும் மேற்பட்ட இந்திய பெண்கள் சிக்கித் தவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து டார்ஜிலிங் போலீசார் கூறியதாவது,
மேற்கு வங்க அரசு மற்றும் சிஐடி போலீசார் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கவிருக்கின்றனர். சவூதியில் சிக்கியுள்ள பெண்களின் குடும்பத்தாரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக 2 ஏஜென்சி நிபுணர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.
இணையத்தளத்தில் 'செக்ஸ்' குறித்து அதிகம் தேடுதலை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன. கூகுள் இணையத்தளத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்கள் தொடர்பான தரவுகளின்படி, செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது. இந்தியா இரண்டாமிடத்திலும் வியட்நாம் மூன்றாமிடத்திலும் எகிப்து நான்காமிடத்திலும் இந்தோனேஷியா ஐந்தாமிடத்திலும் உள்ளதாக 'கூகுள் ட்ரென்ட்ஸ்' தரவுகள் வெளிப்படுத்துகின்றன.






