Thursday, November 10, 2011

இந்த வார டவுண்லோட் ட்ரைவர் புரோகிராம் பேக் அப்


சில வேளைகளில் உங்கள் பெர்சனல் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும். அப்போது விண்டோஸ் சிஸ்டத்தில் மாறா நிலையில் (by default) இல்லாத சில ட்ரைவர் புரோகிராம்களும் தேவையாயிருக்கும். நம்மிடம் ஒரு காலத்தில் தரப்பட்ட ட்ரைவர் சிடிக்கள் காணாமல் போயிருக்கும். அல்லது இடம் மாறி, தேடினாலும் கிடைக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இணையத்திலிருந்து தான் அவற்றை டவுண்லோட் செய்து, பயன்படுத்த வேண்டும். அவற்றில் சில நமக்குப் பயன்படுத்தும் நிலையில் கிடைக்காது. சில இயங்காது. இந்தச் சூழ்நிலை நம்மில் பலருக்குப் பல வேளைகளில் ஏற்பட்டிருக்கும்.

இது போன்ற சிக்கல்களில் நமக்கு உதவிட Double Driver என்ற இலவச புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. இந்த புரோகிராம், நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள அனைத்து ட்ரைவர்களையும் தேடிக் காட்டுகிறது. அத்துடன் அவற்றை பேக் அப் செய்து பின்னாளில் பயன்படுத்தத் தருகிறது. இது நிச்சயமாய் நமக்குப் பெரிய உதவியாய் தான் இருக்கும். இது எப்படி இயங்குகிறது என்று பார்க்கலாம்.
1. முதலில் http://doubledriver.en.softonic. com/?gclid=CLycloHVjawCFU0a6wodbmCrng என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து Double Driver என்னும் இந்த புரோகிராமினை தரவிறக்கம் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் பதியவும். இதனை முதலில் திறக்கையில், காலியாக ஒரு விண்டோ காட்டப்படும்.
2. இந்த விண்டோவில் மெனு பார் கீழாகக் காணப்படும் "Scan" என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும். உடனே உங்கள் கம்ப்யூட்டர் ஸ்கேன் செய்யப்படும். அப்போது, காலியாகக் காட்டப்பட்ட விண்டோவில்,கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ட்ரைவர் புரோகிராம்கள் காட்டப்படும். உங்களிடம் விண்டோஸ் இன்ஸ்டலேஷன் சிடி இருந்தால், அதில் உள்ள மைக்ரோசாப்ட் தந்துள்ள ட்ரைவர் புரோகிராம்கள் தவிர்த்து மற்ற புரோகிராம்களின் ட்ரைவர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.
3. அனைத்து ட்ரைவர் புரோகிராம்களையும் பேக் அப் எடுக்க, backup டேப்பினைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். உடன் அனைத்து ட்ரைவர் புரோகிராம்களும் ஸிப் செய்யப்பட்டு ஒரு பைலாகத் தயார் செய்யப்படும். 
இதனை சிஸ்டம் ட்ரைவ் இல்லாத இன்னொரு ட்ரைவ் அல்லது ஸ்டோரேஜ் மீடியாவில், சேவ் செய்து வைத்திடலாம். பின்னர், எப்போது தேவைப் பட்டாலும், இந்த பைலை விரித்து, தேவைப்படும் ட்ரைவர் புரோகிராம்களைப் பயன் படுத்திக் கொள்ளலாம். 

source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails