Monday, December 20, 2010

வேர்ட் - சின்ன சின்ன விஷயங்கள்



நாம் அன்றாடம் பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பு சார்ந்த சின்ன சின்ன தகவல்கள் இங்கு தரப்படுகின்றன. உங்கள் நினைவை ரெப்ரெஷ் செய்து கொள்வதற்காக. தெரிந்ததுதானே என்று ஒதுக்க வேண்டாம்.  வேர்ட் தொகுப்பைத் திறந்தவுடன் உங்களுக்கு, அதன் மெனு மற்றும் டூல்பார்கள் அமைந்திருக்கும் விதம் பிடிக்கவில்லையா? கவலைப்படாதீர்கள்; உங்கள் விருப்பப்படி மாற்றிவிடலாம்.  எந்த டூல் பாரின் இடத்தை மாற்ற விரும்புகிறீர்களோ, அந்த டூல்பாரின் ஓரத்தில் மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். கர்சர்  நான்கு கால்கள் கொண்ட ஒரு அடையாளமாக மாறும். அப்படியே அழுத்தி இழுத்து, எங்கே இருக்க வேண்டுமோ அங்கே விட்டுவிடவும்.  மெனுபாரில், நிறைய பட்டன்கள் உள்ளன. சிலவற்றைப் பார்த்தவுடன் அவை எதனைக் குறிக்கின்றன என்று தெரியும். ஆனால் பல பட்டன்கள் எதற்காக என்று தெரிவதில்லை. இவற்றின் பெயர் மற்றும் பயன்பாடு அறிய,  மவுஸின் கர்சரை இந்த பட்டன் அருகே கொண்டு செல்லுங்கள். உடனே அந்த பட்டனின் பெயர் தெரியும்.
டாகுமெண்ட்டில் ரூலர் இல்லையா? ரூலரைக் கொண்டு வரவும் மறைக்கவும் View  மெனு சென்று Ruler   என்பதில் கிளிக் செய்திடுங்கள்.  
டாகுமென்ட் அமைக்க,புதிய பைலாக   காலியாக உள்ள பக்கம் ஒன்றைத் திறந்தவுடன் அதில் தரப்பட்டிருக்கும் மார்ஜின் உங்களுக்குப் பிடிக்கவில்லையா?  அதனை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களா? அப்படி யானால் File  மெனுவில் Page Setup  செல்லவும். அங்கு Margins   டேப்பில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் மார்ஜின் வெளியைக் கூட்டவும் குறைக்கவும் வசதிகள் தரப்பட்டிருக்கும். மாற்றிக் கொள்ளலாம். காலியாக இருக்கும் போதுதான் மாற்ற வேண்டும் என்பதில்லை. டாகுமெண்ட் உருவானபின்னும் மேலே சொன்ன வழியில் மாற்றலாம். மாற்றுவதற்கேற்ப உங்கள் டாகுமெண்ட் தோற்றமும் மாறும். நீங்கள் மாற்றிக் கொள்ளும் மார்ஜின் நீங்கள் உருவாக்கும் அனைத்து டாகுமென்ட்களிலும் வர வேண்டும் எனத்திட்டமிட்டால் மார்ஜின் செட் செய்த பின்னர் Default  என்பதில் கிளிக் செய்திடுங்கள். இதனை அழுத்தும்போது வேர்ட் உங்கள் நார்மல் டெம்ப்ளேட் மாற்றப்படுவதால் உங்கள் டாகுமென்ட் அனைத்தும் மாற்றம் பெரும் என்ற எச்சரிக்கைச் செய்தியினைத் தரும். ஏற்றுக் கொள்ளுங்கள்.
வேர்ட் திறந்தவுடன் கிடைக்கும் எழுத்து வகை (பொதுவாக டைம்ஸ் நியூ ரோமன்  என்ற எழுத்துதான் இருக்கும்.) உங்களுக்குப் பிடிக்கவில்லையா? நீங்கள் எப்போதும் ஏரியல் அல்லது வெர்டனா அல்லது முற்றிலும் வேறாக ஒரு தமிழ் எழுத்து வகையினை தொடக்க எழுத்தாக வைத்துக் கொள்ள திட்டமிட்டால் கீழே குறித்துள்ள படி செயல்படவும். Format மெனுவில் இருந்து Font  என்பதை செலக்ட் செய்திடவும். நீங்கள் பிரியப்படும் எழுத்துவகையைத் தேர்ந்தெடுக்கவும். தமிழ் பாண்ட் ஆக இருந்தாலும் தேர்ந்தெடுக்கவும். மேலும் அதன் சைஸ், தடிமனாக அல்லது சாய்வாக மற்றும் பிற பண்புகளைத் தேர்ந்தெடுத்தபின்    Default  என்பதைத் தேர்ந்தெடுங்கள். இதனை அழுத்தும்போது வேர்ட் உங்கள் நார்மல் டெம்ப்ளேட் மாற்றப்படுவதால் உங்கள் டாகுமென்ட் அனைத்தும் மாற்றம் பெரும் என்ற எச்சரிக்கைச் செய்தி யினைத் தரும். கவலைப்படாமல் ஓகே கிளிக் செய்து வெளியேறுங் கள். இனி நீங்கள் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்க  புதிய பக்கத்தினைத் திறக்கையில், அது நீங்கள் தேர்ந்தெடுத்த எழுத்து வகையுடன் தான் திறக்கப்படும்

source:dinamalar

--
http://thamilislam.tk

Sunday, December 19, 2010

கம்ப்யூட்ட கேள்வி - பதில்


கேள்வி: எப்படியும் மாதம் ஒருமுறை ஏதேனும் ஒரு இமெயிலில், அதனைப் பார்வேர்ட் செய்தால், பணம், அதுவும் டாலராகக் கிடைக்கும் என்று செய்தி வருகிறது. இதனை நம்பலாமா? பெரும்பாலும் மத சம்பந்தப்பட்டது மற்றும் பரிதாபத்தைத் தூண்டுவதாக உள்ளது. பணம் எப்படி நமக்குக் கிடைக்கும்?   -கே. தேவசேனா, திருத்தணி

பதில்:  முதலில் நம் உழைப்பு எதுவுமின்றி நமக்குப் பணம் கிடைக்காது என்ற எண்ணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம், நம்மை எதிலாவது சிக்க வைக்கும் முயற்சிகளே. வெளிநாட்டுப் பணம் என்றவுடன் இது உண்மையாகத்தான் இருக்கும் என்றெல்லாம் எண்ண வேண்டாம். சிறுவன் ஒருவன் புற்றுநோயில் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், அந்த மெயிலை அனுப்பினால், பணம் கிடைக்கும்  அல்லது மைக்ரோசாப்ட் அல்லது கூகுள் நிறுவனம் நோய்க்கான வைத்திய செலவினை ஏற்றுக் கொள்ளும் என்றும் கடிதம் வரும். நீங்களே யோசித்துப் பாருங்கள். எத்தனை பேர் மெயிலைக் கண்டுபிடிக்க முடியும்? பின்னர் அவர்களின் பேங்க் அக்கவுண்ட் அல்லது முகவரி எப்படி கிடைக்கும்?  இந்தச் சிக்கலில் சிக்கினால், சில வேளைகளில் உங்கள் பெர்சனல் பேங்க் தகவல்கள் திருடப்பட்டு, உங்கள் பணம் திருடப்படும். எனவே இவற்றைப் பார்த்தவுடனேயே அழித்துவிடுங்கள். ட்ரேஷ் பாக்ஸில் கூட இருக்க வேண்டாம்.   

கேள்வி:  கேமராவின் திறனை எப்போதும் மெகா பிக்ஸெல் என்று சொல்கிறீர்கள். இது என்ன அளவு? எப்படித் தெரிந்து கொள்வது? சற்று விளக்கவும்.    –மெ. கார்த்திகேயன், காரைக்கால்
பதில்: அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல். ஏனென்றால், கேமரா மட்டுமின்றி, மொபைல் போனில் உள்ள கேமரா குறித்தும் பேசப்படுகையில் இந்த மெகா பிக்ஸெல் அளவு சொல்லப்படுகிறது. இங்கு இதனைக் காணலாம். 
கீழே குறிப்பிட்டுள்ள தகவல்கள் பொதுவானவை. சில நிறுவனங்கள் தயாரிக்கும் கேமராக்களில் இது சிறிய அளவில் அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும்.
2 மெகாபிக்ஸெல்ஸ்: 1600 x 1200
3 மெகாபிக்ஸெல்ஸ்: 2048 x 1536
4 மெகாபிக்ஸெல்ஸ்: 2274 x 1704
5 மெகாபிக்ஸெல்ஸ்: 2560 x 1920
6 மெகாபிக்ஸெல்ஸ்: 2816 x 2112  
7 மெகாபிக்ஸெல்ஸ்: 3072  2304
8 மெகாபிக்ஸெல்ஸ்: 3264 x 2468

கேள்வி: ஐ.எஸ்.ஓ. இமேஜ் கட்டாயம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டுமா? ஒவ்வொரு முறை சிடி அல்லது டிவிடி எழுதுகையில் இந்தக் கேள்வி கம்ப்யூட்டரில் வருகிறது. எனக்குச் சொல்லிக் கொடுத்தவர், இதனை அலட்சியப்படுத்தி விடுங்கள் என்றார். அலட்சியப்படுத்தலாம் என்றால் ஏன் இது ஒவ்வொரு முறையும் கேட்கப்படுகிறது?  –டி.கே. உமையாள், கே.புதூர், மதுரை.
பதில்: உங்கள் நீண்ட கடிதத்தில் இருந்து, இந்த சந்தேகம் குறித்து பல நாட்கள் சிந்தித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. பல வாசகர்கள் இது குறித்துக் கேட்டுள்ளனர். இதோ அது என்னவென்று பார்ப்போம்.
ஐ.எஸ்.ஓ. இமேஜ் என்பது ஐ.எஸ்.ஓ. என்ற துணைப் பெயர் கொண்ட  பைலைக் (.iso) குறிக்கிறது. 
நாம் தயாரிக்கும் சிடி அல்லது டிவிடியின் டிஸ்க் இமேஜ்  அல்லது ஆப்டிகல் இமேஜ் என்பதற்கான இன்னொரு பெயர் தான் ஐ.எஸ்.ஓ. இமேஜ். ஏற்கனவே உள்ள பைல்களுக்கான இமேஜ்தான் இது. அதனால் தான் சிடி மற்றும் டிவிடி பர்னிங் உடன் இது இணைந்து பேசப்படுகிறது. ஐ.எஸ்.ஓ. பைல் இதற்கான ஸ்பெஷல் சாப்ட்வேர் மூலம் சிடியில் உள்ள பைல்கள் அனைத்திற்குமான காப்பி ஆக உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் சிடியில் உள்ள பைல்களை எடிட் செய்திடலாம். எனவே மியூசிக் அல்லது டேட்டா சிடி ஒன்றை நீங்கள் உருவாக்குகையில் அதற்கான ஐ.எஸ்.ஓ. இமேஜ் ஒன்றும் உருவாக்கப்படுகிறது. மியூசிக் மட்டுமின்றி சிடியில் என்ன தகவல்களை எழுதினாலும் அந்த பைல்களுடன் கூடிய சிடியின் ஐ.எஸ்.ஓ. இமேஜ்  பைலும் உருவாக்கப்படுகிறது. இதனை எந்த பர்னிங் சாப்ட்வேர் தொகுப்பின் மூலமும் உருவாக்கலாம். இதற்கான பர்னிங் சாப்ட்வேர் கம்ப்யூட்டருடனேயே கொடுக்கப்பட்டிருக்கலாம். அல்லது சிடி டிரைவ் வாங்குகையில் தரப்பட்டிருக்கலாம். அல்லது நீங்களே தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் எதனையாவது வாங்கியிருக்கலாம்; அல்லது டவுண்லோட் செய்திருக்கலாம். எந்த வகை சாப்ட்வேர் புரோகிராம் என்றாலும் அதன் மூலம் நிச்சயம் ஐ.எஸ்.ஓ. பைல் கிடைக்கும். இது தேவையா என்றால், அது நம் விருப்பத்தைப் பொறுத்தது. ஹார்ட் டிஸ்க்கில் இடம் இருந்தால், அதற்கென ஒரு பெயர் கொடுத்து எழுதி வைத்துக் கொள்ளலாம். பின் நாளில் உதவும். 

கேள்வி: கண்ட்ரோல் + ஆல்ட்+ டெலீட் கொடுத்து கிடைக்கும் இயங்கும் பைல்கள் குறித்த அட்டவணையில்,    "lsass.exe"  என்னும் ஒரு பைல்  . காட்டப்படுகிறது. இது வைரஸ் பைலா? இது எதற்காக எப்போதும் தெரிகிறது?  –எஸ். சம்பத், போரூர், சென்னை
பதில்: வைரஸ் என்று எண்ணி அழித்துவிடாதீர்கள். விண்டோஸ் இயக்கத்திற்குத் தேவையான முக்கிய பைல் இது. lsass (LSASS)  என்பது  Local Security Authority  Subsystem Service   என்பதன் சுருக்கமாகும். விண்டோஸ் இயக்கத்தின் பாதுகாப்பினையும்,  கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களையும்   கண்காணித்துச் செயல்படும் ஒரு பைல் இது.  C:/windows/system32 or C:/winnt/system32   என்ற போல்டரில் இந்த பைல் காணப்படும். இதனை அழிக்கக் கூடாது. கம்ப்யூட்டர் பாதுகாப்பிற்கு இந்த பைல் தேவை. எனவே, உங்களுக்கு கண்ட்ரோல் + ஆல்ட் +டெலீட் கீகள் மூலம் கிடைக்கும்    டாஸ்க் மேனேஜர் மூலம், இதனை நிறுத்தவோ, அழிக்கவோ முயற்சிக்கக் கூடாது. முதலில் விண்டோஸ் அதனை அனுமதிக்காது. உங்களுக்கு ஒரு கூடுதல் தகவல் சொல்லட்டுமா?   2004 ஆம் ஆண்டில் Sasser  என்னும் வைரஸ் பரவி வந்த போது, உங்களைப் போலவே,  பலரும் அது இந்த பைலுடன் இணைந்ததாக எண்ணினார்கள்.   எனவே இந்த பைல் டாஸ்க் மேனேஜரில் இருந்த போது இதனை வைரஸாக எண்ணிப் பயந்தார்கள். இப்போது அப்படி எதுவும் இல்லை. எனவே உங்கள் கம்ப்யூட்டர் வாட்ச்மேனாக, இந்த பைலை எண்ணிக் கொள்ளுங்கள். இந்த பைல் நம் நண்பன்தான்.

கேள்வி: ஜிமெயில் பயன்படுத்துகிறேன். இதில் பயன்படுத்த முக்கிய ஷார்ட்கட் கீகளைத் தரவும். அவை இயங்க என்ன செட் செய்திட வேண்டும்? சாதாரணமாக சில ஷார்ட் கட் கீகளை அழுத்திய போது அவை இயங்கவில்லை.   –ஆ. நாகராஜ் மாணிக்கம், மதுரை
பதில்: ஜிமெயிலில் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் செயல்பட, சில செட்டிங்ஸ் அமைப்புகளை மேற்கொள்ள வேண்டும். பின்னரே அவை செயல்படும். கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும். 
1. ஜிமெயில் பக்கத்தில் வலதுபுறம் மேலாக,  Settings  என்பதில் கிளிக் செய்திடவும்.  
2.அடுத்து Settings  பக்கம் கிடைக்கும். இதில் "Keyboard Shortcuts" என்பதனை அடுத்துள்ள ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும்.   கீ போர்ட் ஷார்ட்கட் கீகள் செயல்பட இதுதான் வழி தருகிறது.
3. இதனை அடுத்து  Save Changes  என்பதில் கிளிக் செய்திடவும். இனி அனைத்து கீ போர்டு ஷார்ட்கட் கீகளும் செயல்படும். நீங்கள் கேட்டுக் கொண்டதற் கிணங்க, ஒரு சில முக்கியமான ஷார்ட்கட் கீகளைத் தருகிறேன். 
/ – செய்திகளைத் தேட
c  புதிய இமெயில் செய்தி உருவாக்க
n அடுத்த மெசேஜ் பெற
 இருவருக்கிடையேயான பல மெசெஜ் அடங்கிய செய்தி (இணிணதிஞுணூண்ச்tடிணிண) திறக்க
p முந்தைய மெசேஜ்
r  அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் கடிதத்திற்கு பதில் தயாரிக்க.

கேள்வி: வேர்ட் 2010 தொகுப்பில் தயாரிக்கப்படும் ஆவணங்களில் உள்ள சொற்களை அடிக்கோடிடுகையில், கோட்டினை மட்டும் கலரில் அமைக்க முடியுமா?  எனக்கு வரும் சில ஆவணங்களில் அது போல உள்ளது. –எஸ்.நீரஜா, சென்னை
பதில்: ஆம், நீங்கள் கூறுவது சரியே. டெக்ஸ்ட்டில் சில சொற்களை முக்கியமாகக் காட்டிட, அதில் அடிக்கோடிடுகிறோம். இந்த முக்கியத்துவத்தை மேலும் கூட்டிட, அல்லது உடனடியாகக் கண்களில் படும்படி காட்ட, கோடுகளை மட்டும் கலரில் அமைக்கலாம். கோடிட உங்களுக்குத் தெரியும். டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் +க் அழுத்தவும். அடிக்கோடு இடப்படும். இதனை மட்டும் கலரில் அமைக்க, மீண்டும் அந்த சொல்லைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து  "Font"  டயலாக் பாக்ஸ் திறக்க வேண்டும். இதற்கு ரிப்பனில் ஹோம் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில்  "Font" பிரிவில் வலது கீழாக உள்ள அம்புக்குறியில் கிளிக் செய்திடவும். அல்லதுCTRL + SHIFT + F கீகளை அழுத்தவும்.  இப்போது "Font"  டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இதில் "Underline style" என்பதன் கீழாக பல ஆப்ஷன்கள் அடங்கிய பிரிவுகள் கிடைக்கும்.  words only, various line combinations and weights, dots, dashes,  எனப்  பல பிரிவுகள் இருக்கும். இதில் ஏதேனும் ஒரு ஸ்டைலைத் தேர்ந்தெடுத்த பின்னர்,"Underline color"  என்பதன் கீழ், கீழாக இழுக்கவும். இதில் எந்தக் கலர் வேண்டும் எனத் தேர்ந்தெடுக்க  பல்வேறு வண்ணங்கள் தரப்பட்டிருக்கும். கூடுதலாக  "More Colors"  என்ற பிரிவும்   இருக்கும். இதில் உள்ள  "Preview"  பிரிவில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணத்துடன் சொல்லில் உள்ள கோடு எப்படி தோற்றம் அளிக்கும் என்பதனைப் பார்க்கலாம்.  அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். நீங்கள் தேர்ந்தெடுத்த சொல்லில் இட்ட அடிக்கோடு, தேர்ந்தெடுத்த வண்ணத்தில் இருப்பதனைக் காணலாம்

source:dinamalar

--
http://thamilislam.tk
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails