Thursday, March 7, 2013

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2

 

கடந்த பதிவில் ஒலிவடிவில் பாதுகாக்கப்பட்ட குர்ஆனிலிருந்த குளறுபடிகளைப் பற்றி கவனித்துக் கொண்டிருந்தோம் கொண்டிருந்தோம்.

அண்ணல் அவர்களுக்கு அல்குர்-ஆன் "ஒலி" வடிவிலேயே இறக்கியருளப்பட்டதுமாறாக "வரி" வடிவில்லல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை எனவே நபிகளுக்கு முழு குர்-ஆனும் அருளப்பட்டது எழுத்து வடிவத்தில் இல்லை என்பது தெளிவாகிறது… 
                                                             நான் முஸ்லீம் தளத்திலிருந்து

அதென்ன வரிவடிவ குர்ஆன்? எழுத்துபூர்வமான ஆவணமாக அல்லாஹ் வழங்கவில்லையாம். அல்லாஹ் எழுத்துபூர்வமாக வழங்கவில்லை எனில் எவ்வாறு முஹம்மதை வந்தடைந்தன? 

வஹீ, அல்லாஹ்வின் தூதராக முஹம்மது பதவியேற்றதிலிருந்தே வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. ஹீரா குகையில் இருந்த பொழுது ஜிப்ரீல் "இறுக்கி அணைச்சு ஒரு உம்மா" கொடுத்ததிலிருந்து அவரது துர்மரணம்வரை தொடர்ந்துள்ளது. 23 ஆண்டுகள்வரை சிறிது சிறிதாக வெளியாகிக் கொண்டிருந்தது. ஹிரா குகையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் செய்திகள் சற்று விநோதமானவைகள்தான். அவைகள் நம்பிக்கை என்ற அடிப்படையில் மட்டுமே பார்க்கப்படுகிறது; அதை எந்த ஒரு முஸ்லீமும் ஆராயமுற்படுவதில்லை. 

முஹம்மது, தனது குடும்ப வாழ்க்கையிலிருந்து சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு காணாமல் போவது வழக்கம்.  ஹீரா குகையில் தங்கி வழிபாடுகள் செய்வதாக எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தார். அவ்வாறான நிலையில், அங்கு திடீரென தென்படும் முன்பின் அறிமுகமில்லாத ஒருவர்,

ஆயிஷா (ரலிஅவர்கள்  கூறியதாவது.
அந்த வானவர் (ஜிப்ரீல்நபி அவர்களிடம் வந்துதுவீராக என்றார்நபி (ஸல்)அவர்கள்நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்று சொன்னார்கள் (பின்பு நடந்தவற்றை)நபி (ஸல்அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்கூறினார்கள் வானவர் (ஜிப்ரீல்என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார்பிறகு என்னை விட்டு விட்டு ஓதுவீராக என்றார் அப்போதும் நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றேன்உடனே அவர் என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார்பிறகு என்னை விட்டுவிட்டு ஓதுவீராக என்றார்அப்போதும் நான் ஓதத்தெரிந்தவனில்லையே என்றேன்உடனே அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையாக கட்டித் தழுவினார்….
புகாரி  0003  
உதாராணத்திற்கு நீங்கள் (மட்டுமே) தனிமையிலிருக்கும் பொழுது திடீரென தென்படும் ஒரு நபர் தான் யார், எதற்காக வந்துள்ளேன் என்ற எவ்விதமான அறிமுகமின்றி படாரென்று மூச்சு திணறுமளவிற்கு "இறுக்கி அணைச்சு ஒரு உம்மா" கொடுத்தால் என்ன செய்வீர்கள்?

 அந்தத் "தழுவலுடன் கூடிய உம்மா"வை விரும்பாத நபராக நீங்கள் இருக்கும்பட்சத்தில் எதிராளியின் கன்னங்களை அறைந்து சிவக்க வைத்திருப்பீர்கள் அல்லது குறைந்தபட்சம் அவரைத் தள்ளிவிட்டு விலகி ஓடியிருப்பீர்கள்.   மீண்டும் மீண்டும் அணைப்பிற்கு காத்திருந்தால் என்னவென்று சொல்லலாம்?

ஹதீஸிலுள்ள வானவர் அல்லது ஜிப்ரீல் என்ற விபரங்கள் பிற்காலச் சேர்க்கையாகும். உண்மையில், தனக்கு "உம்மா" கொடுத்தவர் யாரென்றே முஹம்மதிற்குத் தெரியாது. அது நாமூஸ் என்கிற ஜிப்ரீல் என்பதாக பார்வையற்ற ஒரு கிருஸ்துவர், தன்னிடமிருந்த பைபிளை ஆராய்ந்து கூறுகிறார். முஹம்மதின் மனைவி கதீஜாவோ வினோதமான ஒரு சோதனையின் மூலம் ஹீரா குகையில் வந்தது காம இச்சை கொண்ட ஜின் அல்ல ஒரு நல்ல ஜின்னாக இருக்கலாம் என்று உறுதி செய்ய வேண்டியிருந்தது. ஜிப்ரீலின் அணைப்பு "ஒரு மாதிரியாக" இருந்ததோ என்னவோ? (கதீஜா செய்த ஆய்வுகளை "இஸ்லாத்தைக் கடந்த சுவடுகளின் 17வது" பகுதில் பார்த்தோம்.) ஜிப்ரீல் தன்னை யாரென்ற அறிமுகத்துடன் வந்த காரணத்தையும் கூறியிருக்கலாம். முஹம்மதிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானே அதன்படி மட்டுமே ஜிப்ரீலால் செயல்படமுடியும். இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி அதுதான் பகுத்தறிவற்ற படைப்பாயிற்றே?  

இப்பிரபஞ்சத்திற்கே அருளாகத் தேர்தெடுக்கப்பட்டவரிடம் சராசரி மனித நாகரீகத்தைக்கூட பின்பற்றாதது சற்று அல்ல மிகவுமே வினோதமானதுதான். கதீஜாவின் ஏடாகூடமான சோதனையை கண்டு வெறுத்துப்போன அல்லாஹ், அதன் பிறகு ஜிப்ரீலை மரியாதையாக நடந்து கொள்ளச் செய்ததுடன் "ஒலி வடிவிலான" அல்லாஹ்வின் கட்டளைகளை முஹம்மதிடம் வழங்கியதாகவும் ஹதீஸ்கள் கூறுகின்றன. குர்ஆன் முழுவதுமே ஜிப்ரீல் என்ற இரண்டாம் நபர் கூற ஒலிவடிவிதான் வழியாக முஹம்மதை அடைந்ததா? என்றால், நிச்சயமாக அவ்வாறில்லை. முஹம்மதின் மனதில் உள்ளுதிப்பாகவும், கனவாகவும் தோன்றியிருக்கிறது.  ஒலியல்லாத முறையிலும் வஹீ முஹம்மதை அடைந்துள்ளது. அல்லாஹ்வுடன் நேரடி உரையாடல் விண்வெளிப்பயணத்தில் பேரம் பேசியபொழுது மட்டுமே.

ஆயிஷா (ரலிஅவர்கள்  கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களுக்கு ஆரம்பமாக வந்த வேதஅறிவிப்பு (வஹீ)தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்ததுஅப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவாகவேஇருக்கும்.பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. …
புகாரி 0003  
அவ்வப்பொழுது ஜிப்ரீல் தன்னிடம் கூறும் செய்திகளையும், அல்லாஹ் உள்ளுதிப்பாக உருவாக்கும் செய்திகளையும், கனவுகளையும் உறவினர், நண்பர்கள் அண்டைவீட்டார் என்று எல்லோரிடமும் கூறத் துவங்கினார். குர்ஆன் ஒலிவடிவில் மட்டுமே முஹம்மதை வந்தடைந்தன என்பது தவறானது மட்டுமல்ல, மக்களை ஏமாற்றும் கருத்தாகும். 



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பெற்றே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆக வேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம்அல்லாஹ் எனக்கு அருளிய வேதஅறிவிப்பு (வஹீ)தான்.
முஸ்லீம்  239




முஹம்மதிற்கு 'வஹீ' என்ற முறையில் கூறப்பட்ட செய்திகள் எவை? அல்லாஹ் முஹம்மதிடம் வழங்கியதாகக் கூறும் "வஹீ" குர்ஆன் என்ற புத்தகத்தில் மட்டும்தான் உள்ளதா? என்றால் நிச்சயமாக அவ்வாறில்லை!  ஹதீஸ்களிலும் தொடர்கிறது. 

…"குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்திஹதீஸ்கள் இறைச் செய்தி அல்ல'' என்று வாதிடுவோரிடம் நாம் கேட்க விரும்புவது இது தான்:
பகலிலும்இரவிலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடக் கூடாது என்று ஏற்கனவே தடை இருந்ததாக அல்லாஹ் கூறுகிறானே அவ்வாறு தடை விதிக்கும் வசனம் எதுகுர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி என்று வாதம் செய்வோர் அந்தக் கட்டளையைக் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்ட வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மற்றொரு வஹீ மூலம் இவ்வாறு தடை செய்ய அதிகாரம் இல்லாமல் இருந்து அவர்கள் தடை செய்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் கண்டிக்கவில்லை. "நீங்கள் இரவில் அவ்வாறு நடந்து கொண்டது குற்றமில்லைமுஹம்மது தவறாகக் கூறி விட்டார்''என்று இறைவன் கூறியிருக்க வேண்டும்.

அவ்வாறு கூறாமல் "நீங்கள் செய்து கொண்டிருந்தது குற்றம் தான்நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிட்டிருக்கும் போது அது குர்ஆனில் இல்லா விட்டாலும் அதை மீறுவது பாவம் தான்என்றாலும் உங்களை நான் மன்னித்து விட்டேன்'' என்ற பொருள்பட மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் அருளியுள்ளான்.

இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ குர்ஆன் மட்டுமல்ல. நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் இறைவன் போடுகின்ற கருத்துக்களும் வஹீ தான். அவற்றையும் பின்பற்றியாக வேண்டும் என்பதை இவ்வசனம் நிரூபிக்கின்றது.
50. நபிவழியும்மாற்றப்பட்ட நோன்பின் சட்டமும்

அறிஞர் பீஜே செல்வது சரிதான்.  இஸ்லாமில், குர்ஆனை மட்டும் வைத்துக் கொண்டு எந்த ஆணியையும் பிடுங்க முடியாது.  குர்ஆனின் விளங்காத பகுதிகளுக்கு முஹம்மது மீண்டும் விளக்கம் கொடுத்திருப்பதைதான் நாம் ஹதீஸ்களில் காண்கின்றோம். அவைகளும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைகளே.

எனவே நாம் அதை ஓதும் போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக
பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.
குர் ஆன் 75:18-19
முஹம்மதின் காலத்திலேயே குர்ஆனுக்குத் தவறான பொருளைக் கூறி தர்க்கத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர். 
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலிஅவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களிடம் சென்றேன்.அப்போது இரண்டுபேர் குர்ஆனின் ஒரு வசனம் தொடர்பாகக் கருத்து முரண்பாடு கொண்டு சர்ச்சை செய்து கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள்அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் தமது முகத்தில் கோபம் தென்பட எங்களிடம் வெளியே வந்து, "உங்களுக்கு முன்னிருந்தோர்வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் அழிந்துபோயினர்'' என்று சொன்னார்கள். 
                                                                          முஸ்லீம் 5180
அன்றே அப்துல்லா ஜாமலியும் பீஜேவும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழல்களில் தர்க்கத்தினால் வெறுப்படைந்து போன அல்லாஹ், பொறுப்பை முஹம்மதிடம் சாட்டி விடுகிறான்.
…இன்னும், அவர்களின் மனங்களில் (பதியும் படியான) தெளிவான வார்த்தையை அவர்களுக்கு கூறிவீராக!
குர்ஆன் 4:63
குர்ஆனில் கூறப்படாத வஹீ இவ்வாறுதான் உருவாகியிருக்கவேண்டும்.  ஒலிவடிவில் அருளினான், இதயங்களில் பாதுகாப்பாக உள்ளது என்பவர்கள் குர்ஆனில் இல்லாத வஹீக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? குர்ஆனைத் தொகுத்தவர்களுக்கு இந்த "குர்ஆனில் இல்லாத வஹீ"யை ஏன் பொருட்படுத்தவில்லை? ஆக, தற்பொழுது நம்மிடமுள்ள இந்த 6666 வசனங்கள் மட்டுமே குர்ஆன் அல்ல என்பது தெளிவாகிறது. 

பொதுவாக ஹதீஸ்கள் என்னதான் வலுவான அறிவிப்பாளர்கள் வரிசை கொண்டிருந்தாலும், குர்ஆனுக்கு, அதாவது ஆயிஷாவின் கணிப்பின்படி 6666 வசனங்களைக் கொண்ட தொகுப்பிற்கு(மற்றவர்களின் கணிப்பின்படி இதுவும் 6212 வரை மாறுபடுகிறது) முரண்பட்டால் நிராகரித்துவிடுகின்றனர். 'வஹீ' ஹதீஸிலும் இருக்கிறது என்பது குழப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. 

மற்ற வேதங்கள் மாற்றப்பட்டுவிட்டதாக குர்ஆன் கூறுகிறது. "குர்ஆனில் இல்லாத வஹீ"க்களும் உண்டு என்கிறார் பீஜே. இப்பொழுது ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டவைகளா? என்ற கேள்வி தவிற்க முடியாததாகிறது. 

ஹதீஸ்களின் நிலையை நான் சொல்வதைவிட அறிஞர் பீஜே சொல்வதைக் கேளுங்கள்.




பீஜே இங்கு, குர்ஆனில் சொல்லப்படாத வஹீயான ஹதீஸ்களின் பரிதாப நிலையைப்பற்றி மட்டும் கூறவில்லை. ஆவணத்தின் முக்கியத்துவத்தையும் பதிவு செய்கிறார். இதற்கு மேலும் நாம் ஹதீஸ்களைப்பற்றி விவாதிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.
தொடரும்…


--
http://thamilislam.blogspot.in

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails