குர்ஆனில் இல்லாத 'வஹீ'க்களின் பரிதாப நிலையைபற்றி அறிஞர் பீஜே கூறுவதை கடந்த பதிவில் பார்த்துக் கொண்டிருந்தோம். ஹதீஸ்களின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நம்பிக்கை என்பதைத்தவிர இவர்களால் வேறெந்த பதிலையும் கூறமுடியாது; அதற்கு விடை தெரிந்திருந்தால், குர்ஆனியவாதிகளும், ரஷாது கலீபாவின் "Submitters" உருவாக வேண்டிய அவசியமில்லை.
குர்ஆனில் இல்லாத வஹீக்(ஹதீஸ்)களைப் பற்றிய அறிஞர் பீஜே வின் மாறுபட்ட நிலைகள்.
ஹதீஸ்களை ஏற்பதிலும் நிராகரிப்பதிலும் தங்களுக்கு எவ்விதமான பங்குமில்லை, அது ஹதீஸ் கலை ஆய்வாளர்களின் முடிவுதான் என்றவர், இன்று தனது மனம் போன போக்கிற்கு ஹதீஸ்களை நிராகரிப்பதப் பார்த்தோம். ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டவைகளல்ல என்பதுதான் அறிஞர் பீஜேவின் இந்த குழப்பங்களுக்குக் காரணம். அவர் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார். ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை எனும் பொழுது, குர்ஆனில் இல்லாத வஹீ என்ற கருத்து அர்த்தமற்றது.
நாம் முஹம்மதின் நிலையையும் சற்று கவனிக்கலாம்…
தனக்கு அறிவிக்கப்படும் செய்திகளை அதாவது 'வஹீ'க்களை, முஹம்மது எவ்வாறு பாதுகாத்தார்?
தனது தோழர்களின் உதவியால் எழுதி பாதுகாக்க முயன்றதாக ஹதீஸ்கள் கூறுகின்றன.
அல்பராஉ பின் ஆஸிஃப் (ரலி ) கூறியதாவது.
"இறை நம்பிக்கை கொண்டோரில் (அறப் போரில் கலந்து கொள்ளாமல்) தங்கி விடுவோரும், இறைவழியில் தம் உடைமைகளாலும் உயிர்களாலும் அறப்போர் புரிபவர்களும் சம அந்தஸ்து கொண்டவர்களாக முடியாது…" என்னும் வசனம் அருளப்பட்ட போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் இப்னுஸாபித் (ரலி) அவர்களை அழைத்தார்கள். அவர் அகலமான எலும்பு ஒன்றைக் கொண்டு வந்து, அந்த வசனத்தை எழுதினார்….
புஹாரி 2831
இவ்வாறு தனக்கு அறிவிக்கப்படும் செய்திகளை எழுதச் செய்துவந்தார் (இது மதீனாவில் நிகழ்ந்தது புரிதலுக்காக இங்கு குறிப்பிடுகிறேன்.) அவைகள் தவறுதலாக வேறு செய்திகள் எழுதப்பட்டுவிடக் கூடாதென்பதிலும் முஹம்மது கவனமாக இருந்ததாகவும் ஹதீஸ்கள் கூறுகின்றன.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் கூறுவதை எழுதி வைக்காதீர்கள். குர்ஆன் தவிர மற்றதை என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும்…
முஸ்லீம் 5734
பீஜே குர்ஆனில் கூறப்படாத வஹீ உள்ளதென்கிறார். ஆனால் முஹம்மதுவோ குர்ஆனைத் தவிர வேறெதையும் எழுத வேண்டாமென்கிறார். அதாவது தான் கூறுபவைகள் அனைத்துமே குர்ஆன் அல்ல, என்பதுதான் முஹம்மதின் பதில். அவர் குர்ஆன் என்ற ஏதோஒன்றை பிரித்து காண்பித்திருக்கிறார்; அதை தனக்குத் தெரிந்தமுறையில் பாதுகாகவும் முயற்சித்திருக்கிறார் என்பதுதான் இதன் பொருள்.
முஹம்மது சொல்-செயல் அனைத்துமே அல்லாஹ்வின் கட்டளைப்படியே இருந்ததென்ற இஸ்லாமிய நம்பிக்கையைக் கருத்தில் கொண்டால், அவர் இவ்வாறு எழுதச் செய்ததும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே இருந்திருக்கவேண்டும் மாறாக அவரது சொந்தவிருப்பமில்லை என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
…மனிதர்களிடம் குர்-ஆனை பாதுக்காக்கும் பொறுப்பை சாட்டாமல் அதனை தன்னளவில் வைத்துக்கொண்டான்.இதன் மூலம் உலகமுடிவு நாள் வரையிலும் குர்-ஆன் பாதுக்காப்பிற்கு எந்த ஒரு மனிதனும் தனிப்பட்ட முறையில் சிரத்தை மேற்கொள்ள தேவையில்லை என்பதை தெளிவாக இவ்வசனத்தில் விளங்கலாம்…
நான் முஸ்லீம் தளத்திலிருந்து…
முஹம்மதை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. நான் முஸ்லீம் தளத்திற்கு இருக்கும் அறிவுகூட இல்லாமல், மனனம் செய்து, கல், கட்டை, விட்டை, மரப்பட்டை, தோல், எலும்பு என்று கையில் கிடைத்தவற்றிலெல்லாம் எழுதிப் பாதுகாக்க முயன்றிருக்கிறார் என்பதை நினைத்தால் பரிதாபப்படாமல் வேறென்ன செய்யமுடியும்?
குர்ஆனை எழுத்தில் பாதுகாக்கும் முஹம்மதின் பணி எப்பொழுதிலிருந்து துவங்கியது?
மதீனாவில் முஹம்மது, தனக்குத் தானே அரசராக முடிசூட்டிக் கொண்டதும், அவருக்கு பணியாளர்கள் உதவியாளர்கள் அடிமைகள் என்று ஆட்களின் உதவி இருந்தது; தனக்கு வரும் வஹீயை எழுதச் செய்து கொண்டார்.
ஆனால் மக்காவில்?
அன்றைய அரேபியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் சிலர் இருந்துள்ளனர். ஏனோ அல்லாஹ்விற்கு எழுத்தறிவற்ற முஹம்மதைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் மிகுந்திருந்தது. இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, தனது தூதராக யாரைத் தேர்தெடுப்பது என்பது அல்லாஹ்வின் உரிமை அதில் நாம் தலையிடமுடியாது.
ஒரு பிரசங்கியாக முஹம்மதின் மக்கா வாழ்கையையை இரண்டாகப் பிரிக்கலாம். அதாவது முதல் மூன்றாண்டுகள் மறைமுக அழைப்புப் பணி, அதன் பிறகு பகிரங்க அழைப்புப்பணி என்று ஹிஜ்ரத் வரை, 13 ஆண்டுகள் மக்காவில் இருந்திருக்கிறார். அதன் பிறகு மதீனா வாழ்க்கை. முதலில் நாம் கவனிக்க வேண்டியது முஹம்மதின் மக்கா வாழ்க்கையைப் பற்றிதான். 13 ஆண்டுகளில் அவர் மிக சொற்பமான எண்ணிக்கையில்தான் (70-80) அடியாட்களைத் திரட்டியிருந்தார். அவர்களில் பெரும்பாலனவர்கள் அடிமைகளும், குடும்பத்திற்கு கட்டுப்படாமல் வெட்டித்தனமாக திரிந்து ஊரைச்சுற்றிக் கொண்டிருந்தவர்களும்தான். இந்த காலகட்டத்தில் முஹம்மதிற்கு எழுத்தர்கள் என்று எவரும் இருந்தாக ஹதீஸ்களில் தகவல் இல்லை.
முதலில் மறைமுக அழைப்பு என்ற காலகட்டத்தைக் கவனத்தில் கொண்டால், அவர் தனது உறவினர் மற்றும் நண்பர்கள் என்ற தனிநபர்களிடம் மட்டுமே தனது பணியை செய்திருக்கிறார். அப்பொழுது வெளியான 'வஹீ'க்கள் எவ்வாறு, யாரால் பாதுகாக்கப்பட்டது?
முஹம்மது மக்கவில் பகிரங்க அழைப்புப்பணி செய்த பொழுது எழுத்துவடிவிலான குர்ஆனின் பகுதிகள் இருந்துள்ளதாக இப்ன் இஸ்ஹாக் கூறுகிறது.
..Thereupon 'Umar returned to his sister and brother-in-law at the time when khabbab was with them the manuscript of Ta Ha, which he was reading to them. When they heard 'Umar's voice Khabbab hid in a small room, or in a part of the house, and Fatima took the page and put under her thigh…
(Page 156, Life of Muhammad a Translation of Ibn Ishaq's Sirat Rasul Allah By A.Guillaume)
உமரின் சகோதரி ஃபாத்திமாவிடம் இருந்த குர்ஆனின் பிரதி யாரால் எழுதப்பட்டது?
முஹம்மது எழுதவோ, படிக்கவோ தெரியாதவர் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. மிக சொற்பமான ஆட்களுடன் வலம் வந்து கொண்டிருந்த மக்கா கலகட்டத்தில், முஹம்மதின் எழுத்தர்கள், தெரிந்தோ தெரியாமலோ தவறாக எழுதியிருந்தாலும் எழுத்தறிவற்ற முஹம்மதால் எழுதப்பட்டவைகளை சரிபார்க்கவும் இயலாது. எழுத்தர்களின் பணியை சரிபார்த்தவர்கள் யார்?
இந்தக் கேள்வி, முஹம்மது மதீனாவிலிருந்த காலகட்டத்திற்கும் பொருந்தும். அவரது தோழர்கள் பலரும் அவரது வஹீயை எழுத்துவடிவில் தொகுத்துக் கொண்டிருந்தனர்.
…ஆனால் இவ்வேதம் அருளப்பட்டகாலத்தில் வாழ்ந்த மக்களால் இந்தக் குர்ஆனைப் பாதுகாக்க முடியும் என்று கருத முடியாது. மிகவும் பலவீனமான நிலையிலும், எதிரிகளால் பலவகையான இன்னல்களுக்கு இலக்காக்கப்பட்ட நிலையிலும், படிப்பறிவற்ற நிலையிலும் உள்ள சமுதாயம் தமக்கு வழங்கப்படும் போதனையை முழுமையாகப் பாதுகாக்கும் என்று யாராலும் எண்ணிப்பார்க்க முடியாது…
143. பாதுகாக்கப்படும் திருக்குர்ஆன் onlinepj.com
மனிதர்களுக்காக ஒரு புத்தகத்தை வழங்குவதுதான் அல்லாஹ்வின் மிகமிக நீண்டகாலத் திட்டம். அதை ஏழாம் நூற்றாண்டில் ஏறத்தாழ கல்வியறிவற்ற ஒரு சமுதாயத்தில், அவர்களுக்கு அதற்குமுன் புத்தகமென்றால் என்ன, அதை எவ்வாறு கையாளுவது, எவ்வாறு பாதுகாப்பது என்றெல்லாம் அறிந்ததிராத சமூகத்தில் வழங்கினான். குர்ஆனை வெளியிட்டதாகக் கூறப்படும் அல்லாஹ்வோ அல்லது முஹம்மதுவோ அதைக் கற்பிக்கவில்லை என்பதையே பீஜேவின் விளக்கம் கூறுகிறது. இது அவர்கள் குர்ஆனில் அனைத்துவகை தவறுகளும் இடம்பிடிக்கச் செய்திருப்பார்கள் என்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
மட்டுமல்ல, அரபி எழுத்து முறை முழுமையாக வளர்ச்சியடையாத காலகட்டத்தில் குர்ஆன் வெளிப்பட்டுள்ளது. அரபியில் தோற்றத்தில் ஒரே மாதிரி உச்சரிப்பில் மாறுபடும் எழுத்துக்கள் உள்ளன. இது முஹம்மது மரணமடைந்து நீண்ட காலத்திற்கு பிறகே புள்ளிகளும், குறியீடுகளும் சேர்க்கப்பட்டு சரிசெய்யப்பட்டது. மேலும், கவிதையின் சில பகுதிகளை மட்டுமே கூறி எஞ்சியதை வாசிப்பவர்களின் முடிவிற்கு விடுவது என்ற வழக்கமும் இருந்துள்ளது. இன்றும் குர்ஆனில் இந்த நிலையைப் பார்க்கமுடியும். குர்ஆனின் இத்தகைய அமைப்பு பிற்காலத்தில், இஸ்லாமிய அறிஞர்களுக்கு அடைப்புக்குறிகளுக்குள் "கபடி" விளையாட ஏதுவாக அமைந்துவிட்டது.
முஹம்மதின் காலத்தில் குர்ஆன் எழுத்துவடிவத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார் பீஜே.
மக்காவில் முஹம்மதிற்கு எழுத்தர்கள் என்று எவரும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அறிஞர் பீஜே, குர்ஆன் பதிவு செய்யப்பட்டதை நேரில் கண்டதைப் போன்று அடித்து விளையாடுகிறார்.
முஹம்மது மக்காவிலிருந்து வெளியேறுவதற்குமுன் அல்லாஹ், முஹம்மதை அழைத்து ஒரு முக்கியமான பேரத்தை பேசியாதாகவும் இறுதியில் சில கட்டளைகளை நேரடியாக வழங்கியதாகவும் ஹதீஸ்கள் கூறுகின்றன.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி)விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது…
புகாரி 3207
"Open heart surgery", ஈமானை நிரப்ப முடியுமா? அதென்ன அத்தகையதா? என்ற கேள்விகள் நியாயமானவைகளே! ஆனால் என்ன செய்வது இஸ்லாம் பகுத்தறிவை ஒப்புக்கொள்ள வேண்டுமே?
விண்வெளிப் பயணத்தின் துவக்க சடங்குகள், கனவு போன்ற காட்சியாம், புராக்கில் பறந்து சென்றது உண்மையான நிகழ்வாம். நடைமுறை வாழ்வுடன் முரண்படும் ஹதீஸ்களைப் புறக்கணிக்கவேண்டும் என்கிறார் அறிஞர் பீஜே. இப்படியொரு வாகனத்தை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?
அறிஞர் பீஜே வேடிக்கையான மனிதர். ஹதீஸை அவரது விருப்பம் போல மறுத்துக் கொண்டிருக்கிறார். நாமும் அவரது விளக்கத்தின் வழியிலேயே சென்று, அல்லாஹ்வும் முஹம்மதுவும் நிகழ்த்திய நேரடி பேரத்தை கவனிக்கலாம்.
….நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல(நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான்.பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க, 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்" என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, 'நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்" என்று பதிலளித்தேன். அப்போது(அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்)விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்" என்று அறிவிக்கப்பட்டது.
புகாரி 3207
இஸ்லாமின் அடிப்படை கடமைகளுள் ஒன்றான ஐங்காலத் தொழுகை என்பது குர்ஆனில் எங்குமே சொல்லப்படவில்லை. உருட்டி, மருட்டி, திரட்டி, திரித்து, திணித்தால் மட்டுமே ஐவேளைத் தொழுகை என்ற கருத்தைக் குர்ஆனிலிருந்து பெறமுடியும்.
முஹம்மதிடம் அல்லாஹ் கூறியவாறே சிறிய மாற்றம்கூட இல்லாமல் அல்லாஹ் நேரடியாக முஹம்மதிடம் வழங்கிய இந்தக் கட்டளைகளை அல்லாஹ் வழங்கியவாறே கூறமுடியுமா?
இங்கு அல்லாஹ் நேரடியாக " 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்" என்றேன்… நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்…" என்று வழங்கியதாகக் கூறப்படும் இந்தக்கட்டளை ஏன் குர்ஆனில் இடம் பெறவில்லை?
முஹம்மது குர்ஆன் என்ற ஒன்றைத் தணித்து பதிவு செய்ய முயன்றதை முஸ்லீம் ஹதீஸ் 5734-ல் கவனித்தோம். முஹம்மது கனவில் கண்டவைகளும், மனதில் உதித்தவைகளும் குர்ஆன் என்றும் அல்லாஹ்வின் கட்டளைகளென்றும் கூறி எழுதிவைத்துக் கொண்டவர்கள், அல்லாஹ், நேரடியாக வழங்கிய கட்டளைகளை காற்றில் பறக்க விட்டது ஏனோ?
குர்ஆன் பாதுகாப்பாக இருக்கிறதென்று 'பீலா' விடுபவர்கள்,
பதில் சொல்லட்டும் திறமையிருந்தால்!
தொடரும்….
http://thamilislam.blogspot.in