Sunday, July 1, 2012

சவுதி பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி வேண்டும்: மன்னருக்கு கடிதம்

சவுதி பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி வேண்டும்: மன்னருக்கு கடிதம்

  தமது வாகன சாரதிகளுக்காக காத்திருக்கும் சவுதி பெண்கள்சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி அந்நாட்டைச் சேர்ந்த பிரபல பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர் மன்னர் அப்துல்லாவுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளார்.

மற்ற நாடுகளில் இருந்து சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கும் பெண்களையாவது சவுதியில் வாகனம் ஓட்ட அனுமதிக்குமாறு அந்தக் கடிதத்தில் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர் மனால் அல் ஷரிஃப் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான மற்றபல முன்னேற்ற நடவடிக்கைகளை அறிவித்ததற்காக மன்னர் அப்துல்லாவை பாராட்டியுள்ள மனால் அல் ஷரிஃப், பெண்களை வாகனம் ஓட்ட அனுமதிக்காதது என்பது நீண்டகாலமாக இருந்துவரும் வெறும் பழங்கால நம்பிக்கைகளின் விளைவுதானே தவிர கடவுள் வழிபாட்டுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் வாகனம் ஓட்டும் வீடியோ காட்சியை யூடியுப் இணையதளத்தில் வெளியிட்டதனால் மனால் அல் ஷரீஃப் கைது செய்யப்பட்டார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், சவுதியில் பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கான உரிமை வழங்கப்பட வேண்டுமென்று கடந்த ஆண்டிலிருந்து போராடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


source:BBC


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails