Tuesday, October 11, 2011

கலாநிதி, தயாநிதி - சி.பி.ஐ., தமாஷ்:


"ஏர்செல்' நிறுவனத்தை விற்க நிர்பந்தம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக, சன் "டிவி' கலாநிதி மற்றும் அவரது சகோதரர் தயாநிதியின் வீடுகள் உட்பட ஒன்பது இடங்களில் மட்டும் நேற்று சி.பி.ஐ., பெயரளவுக்கு ரெய்டு நடத்தியது. பரபரப்பான இந்த மெகா ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மலேசியா, மொரீஷியஸ் போன்ற வெளிநாடுகளிலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், இந்த வழக்கில் இப்போதைக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.


சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் விசாரணை கமிஷன், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி, கடந்த ஜனவரி மாதம் ஒரு அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. அதில், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்த போதும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தன என, குற்றம் சாட்டப்பட்டது. "தயாநிதி கடந்த 2004 - 2007ல் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தை விற்பதற்கு, தன் பதவியைப் பயன்படுத்தி, மறைமுகமாக நிர்பந்தம் செய்தார்' என்று அந்நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன் கடந்த மே மாதம் புகார் கொடுத்தார். ஜனவரி, மே மாதங்களில் எழுந்த ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக, கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் தாமதமாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் துவக்கியது.


இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள தயாநிதி, கலாநிதி வீடுகள், சன், "டிவி' அலுவலகம் மற்றும் டில்லி, ஐதராபாத் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் மட்டும் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சன், "டிவி' நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் ஏராளமான அலுவலகங்கள் உள்ளன. இதன் துணை நிறுவனங்கள் வேறு ஏராளமாக உள்ளன. அந்த அலுவலகங்கள் பக்கம் சி.பி.ஐ., கவனத்தைச் செலுத்தவே இல்லை.


தலைநகர் டில்லியில் சி.பி.ஐ., வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தொலைத்தொடர்புத் துறை முன்னாள் மத்திய அமைச்சர் (தயாநிதி), சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குனர் (கலாநிதி), பிரிட்டன் மற்றும் மலேசியாவில் இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இயக்குனர், மற்றொரு மலேசிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைவர், சென்னை, மலேசியா, பிரிட்டனில் இயங்கும் மேலும் மூன்று தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் பெயர் தெரியாத அதிகாரிகள், நபர்கள் மீது, சி.பி.ஐ., நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்துள்ளது.இவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 120 (பி), ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 7, 12 மற்றும் 13 (1)(டி)யுடன் இணைந்த பிரிவு 13 (2)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த ரெய்டு குறித்து சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது:தயாநிதி மற்றும் கலாநிதி மீதான வழக்கு பற்றிய அத்தனை ஆவணங்களும் ஏற்கனவே எங்கள் வசம் உள்ளன. இப்போது நாங்கள் தேடிக் கொண்டிருப்பது, அவற்றுக்கான துணை ஆவணங்கள் மட்டுமே. இந்தச் சோதனையில் எந்த ஆவணமுமே கிடைக்காவிட்டாலும், வழக்கை நடத்த ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இப்போது நடக்கும் ரெய்டு வழக்கை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சி தான்.இன்னும் சில ஆவணங்கள், பத்திரிகைகள் மூலமாக, பொதுமக்களின் பார்வைக்கே வந்துவிட்டன. அந்த வகையில், கலாநிதி, தயாநிதி மீதான வழக்கு, சரியான திசையில் தான் சென்று கொண்டிருக்கிறது. கைது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, உடனடியாக எதுவும் சொல்வதற்கில்லை. இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பாதையில், இந்த வழக்கும் செல்லும்.சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பு இருப்பதால், எங்களுடைய செயல்பாடுகளில் எந்த வகையான அலட்சியமோ, கவனக்குறைவோ இருக்கப் போவதில்லை. இரு நாட்களுக்கு முன் தான், அவர்களிடம் டில்லியில் எங்கள் உயரதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர். அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையைத் தொடர்ந்து, மலேசியா, மொரீஷியஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் விசாரணை நடத்த வேண்டும். அதற்கு எத்தனை காலம் ஆகும் என இப்போது கூற முடியாது. அதன் பின் தான், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.


குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பெயரளவுக்கு நடந்த ரெய்டு, குற்றப் பத்திரிகை தாமதம் போன்றவற்றை வைத்து பார்க்கும் போது, தயாநிதி, கலாநிதி மீதான நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பு என்று தான் கூறப்படுகிறது. "ஒன்பது மாதங்கள் கழித்து, ஒரு சில இடங்களில் மட்டும் ரெய்டு நடத்தி எவ்வளவு ஆவணங்களை கைப்பற்றி விட முடியும்?முக்கியமான ஆவணங்கள் எல்லாம் இன்னுமா இந்த அலுவலகங்களில் இருக்கும்? வழக்கை திசை திருப்பவும், மத்திய அரசு சந்தித்து வரும் பிரச்னைகளில் இருந்து மீடியாக்களின் கவனத்தை திருப்பவும் தான் இது போன்ற நாடகத்தை சி.பி.ஐ., நடத்துகிறது,' என, கம்யூனிஸ்ட், பா.ஜ., கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.


தயாநிதி மீது முதல் தகவல் அறிக்கை, நேற்று முன்தினம் பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் தயாநிதி, கலாநிதி, ரால்ப் மார்ஷல், அனந்தகிருஷ்ணன் தவிர, சன் டைரக்ட் மலேசிய கம்பெனிகளான, ஆஸ்ட்ரோ, மேக்சிஸ் ஆகிய மூன்று கம்பெனிகள் சேர்க்கப்பட்டுள்ளன.


அட்டை பெட்டிகளில் அள்ளி செல்லப்பட்டன:தயாநிதியின் டில்லி வீட்டிற்குள், காலை 7.30 மணிக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தத் துவங்கினர். இடைவிடாது அவர்கள் சோதனையைத் தொடர்ந்தனர். மதியம் உணவு இடைவேளையின்போது கூட, வெளியில் யாரும் வரவும் இல்லை. தயாநிதியின் வீட்டின் முன், செய்தியாளர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்தனர்.யாரையும் உள்ளே நுழைய விடாது கேட் இழுத்துப் பூட்டப்பட்டிருந்தாலும், உள்ளே கார் பார்க்கிங் ஏரியாவில் டவேரா கார் நின்று கொண்டிருந்தது. சோதனையை 4 மணி வாக்கில் முடித்துவிட்டு அந்த காரில் கிளம்பி, அதிகாரிகள் வெளியில் செல்லலாம் என்று எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்தனர். சோதனையின் முடிவில், நான்கு பெரிய அட்டைப் பெட்டிகள் டவேரா காருக்குள் ஏற்றப்பட்டன. அந்த பெட்டிகளில், சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. வேறு ஒரு வழியாக அந்த டவேரா கிளம்பிச் சென்றுவிட்டது. பின்னர் நடந்தே வெளியில் வந்த அதிகாரிகள், வீட்டின் முன் வந்து நின்ற இன்னொரு காரில் ஏறிச் சென்று விட்டனர்.


"டிவி' தெரிந்த ரகசியம் : சென்னையில் உள்ள, சன், "டிவி' தலைமை அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவே, பிரபல ஆங்கிலச் செய்தி சேனலின் நேரடி ஒளிபரப்பு வாகனம் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதிகாலை 6 மணியளவில் அந்த நிறுவனத்தின் நிருபர்கள் வந்தனர். பின்னர் தான் சி.பி.ஐ., அதிகாரிகள் ஒரு காரில் அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தனர். "சி.பி.ஐ., ரெய்டு குறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும்; அவர்கள் தான் எங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். ரெய்டு எல்லாம் சும்மா ஒப்புக்குத்தான்' என அவர்கள் பேசிக் கொண்டனர்.


என்னென்ன பிரிவுகளில் வழக்கு?


இந்திய தண்டனைச் சட்டம் 120 (பி): குற்றச்சதி. இரண்டு ஆண்டுகளும் அதற்கு மேலும் தண்டனை வழங்கத்தக்க கிரிமினல் குற்றங்களுக்கு உரிய சதித் திட்டத்தைத் தீட்டுதல். இந்தப் பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு மாத சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.


ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7: ஏதேனும் ஒரு பொது ஊழியர், சட்டப்பூர்வமான வருமானம் தவிர, கூடுதல் ஆதாயத்துக்காக மேற்கொள்ளும் அலுவல் சார் நடவடிக்கை. இப்பிரிவின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு மாதத்தில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.


ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 12: ஏதேனும் ஒரு பொது ஊழியர், சட்டப்பூர்வமான வருமானம் தவிர, கூடுதல் ஆதாயத்துக்காக மேற்கொள்ளும் அலுவல் சார் நடவடிக்கைக்கு ஆதரவளிப்பது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், இப்பிரிவின்படியும் ஆறு மாதத்தில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.


ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 13 (2) உடனான 13 (1)(டி): ஒரு பொது ஊழியர் லஞ்சமாகவோ, சட்டவிரோதமான வகையிலோ, தனக்காகவோ, பிறருக்காகவோ அதிகார துஷ்பிரயோகம் செய்து, பொதுநல நோக்கமில்லாத செயலைச் செய்து, அதற்காக பொருளோ, பயனோ ஆதாயமாக அடைதல். இத்தகைய குற்ற நடத்தையில் ஈடுபடும் அரசு ஊழியருக்கு, ஓராண்டுக்கு குறையாமல், ஏழாண்டுகள் வரையிலான சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.


சென்னையில் ரெய்டு நடந்த இடங்கள் : 
1.போட் கிளப் ரோட்டில் முதல் அவென்யூவில் உள்ள தயாநிதி வீடு
2.2வது அவென்யூவில் உள்ள கலாநிதி வீடு
3.7மந்தைவெளிபாக்கத்தில் உள்ள சன், "டிவி' அலுவலகம்
4.நுங்கம்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி சுனிதா ரெட்டி வீடு
5.கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை அலுவலகம்



source:dinamalar
--
http://thamilislam.tk

Tuesday, October 4, 2011

குர்ஆன், கிருஸ்தவர்களால் திருத்தம் செய்யப்பட்டதே....!

இந்த கட்டுரையில் ஈசா அவர்களை பற்றிய சொர்கத்தின் கற்பனை தவிர மற்ற அனைத்து விசயங்களும் மிகவும் அழகாக இதன் ஆசிரியரால் விளக்கப்பட்டுள்ளது.வாசகர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்கின்ற படியால் வெளியிடுகிறோம்



அல்லாஹ்வின் வார்த்தைகளை ஒருவராலும் திருத்தம் செய்ய முடியாது…! இது குர்ஆனின் வாக்குமூலம்.  குர்ஆன் சுய பாராட்டல்களை செய்து கொண்டாலும், இத்தனை தூதர்களும் வேதங்களும் ஏன்? என்ற கேள்வியைத் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. சரி…!  முஹம்மது நபி மற்றும் குர்ஆனின் தேவை எதன் காரணமாக ஏற்பட்டது?  இதற்கான பதிலை குர்ஆனே கூறுகிறது.
...ஒருசாரார் அல்லாஹ்வின் வாக்கியத்தைச் செவியேற்று, பிறகு அதனை நன்கு விளங்கிய பின்னரும் அவர் அறிந்தவர்களாயிருக்கும் நிலையிலும் (தெரிந்து கொண்டே) அதை மாற்றி விட்டனர்.
(குர்ஆன் 2:75)
தனது தூதர்களின் வாயிலாக வெளிட்ட செய்திகளை மனிதர்கள்  மாற்றிவிட்டனர் என்ற காரணத்தினால் புதிய தூதர்களையும், வேதங்களும் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதை அல்லாஹ் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறான். மேலும், முன்னர் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகளை, சரி கண்டதை மனிதர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக, உறுதிமொழிகளையும்  வாரி வழங்குகிறான். இது ஒரு முரண்பாடாகும்.
நிச்சயமாக நாம்தாம் இந்த திக்ரை (நினைவூட்டல்) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதனை உறுதியாக பாதுகாப்பவராகவும் இருக்கிறோம்.
(குர்ஆன் 15: 9)
இதை ஏற்பதற்கில்லை, ஏனெனில் வழக்கம்போல குர்ஆனும் மனிதர்களால் மாற்றப்பட்டிருக்க வேண்டும். இம்முறை கிருஸ்துவர்கள்  இத்திருப்பணியைச் செய்திருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
எப்படி என்கிறீர்களா?
        குர்ஆன் கூறும் தூதர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால் ஈஸா நபியின் (இயேசு) செயல்பாடுகள் அன்பு நிறைந்ததாகவும், தெய்வீகத் தன்மை கொண்டதாகவும், முஹம்மது நபியின் செயல்பாடுகள் விநோதமாகவும் குரூரமாகவும் காட்சி செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். இது ஏன் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? இதை குர்ஆன், ஹதீஸ்களின் அடிப்படையில் ஆராயலாம்.
ஆதாரம் 1
ஈஸா நபியை, அல்லாஹ் தனது உயிரிலிருந்து ஊதி, புனிதத் தன்மையுடையவராகப் பிறக்கச் செய்தான்.
(அதற்கு) நிச்சயமாக நானோ - பரிசுத்தமான ஓர் ஆண்குழந்தையை உமக்கு நான் கொடையாக அளிப்பதற்காக (வந்துள்ள) - உம் ரப்பின் தூதர் என்று அவர் கூறினார்..
(குர்ஆன் 19:19)
        முஹம்மதுவோ காதல், காமம், இச்சை என்ற அற்ப உணர்வுகள்  காரணமாகப் பிறந்தவர். அதாவது ஈசாவின் பிறப்பு புனிதமானது என்றால் மனித உடலுறவுகளால் பிறப்பது புனிதமற்றதாக ஆகிவிடுகிறது. இதற்கும் நிறைய குர்ஆன் வசனங்கள் உள்ளன, மேலும் முஹம்மது நபி சிறுவராக இருக்கும் பொழுதே இதயத்தில் கருப்பு தசைக்கட்டியாக உருவாகுமளவிற்கு  பாவங்களைச் செய்திருக்கிறார். பாவத்தை நீக்கி தூய்மைப்டுத்த அவருக்கு சிறப்பு இரண சிகிச்சை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. குழந்தைகளுக்கு செய்யப்பட்ட முதல் OPEN HEART SURGERY இதுதான். முஹம்மது விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னும் இதே இரணசிகிச்சை தேவைப்படுமளவிற்கு பாவங்களைச் செய்திருந்தார்.  (இஸ்லாம் அறிவியல்பூர்வமான மார்க்கமில்லை என்று எந்த முட்டாள் சொன்னது? பாவத்தை இரணசிக்சையின் முலம் நீக்கும் முறையை உலகிற்கு அறிமுகம் செய்ததது இஸ்லாம்தான்)
ஆதாரம் 2
ஒரு திரைப்பட நகைச்சுவை காட்சியில், கற்பில் சிறந்தவர் யார் என்று கூடியிருப்பர்களைப் பார்த்து ஒருவர் கேட்பார். உடனே ஒவ்வொருவரும், போட்டி போட்டுக்கொண்டு கண்ணகி, மாதவி, சீதை என்று புரணகாலத்து கதாபாத்திரங்களைக் கூறுவர். அப்பொழுது கேள்வியைக் கேட்டவர்,  உங்களது தாய், மனைவி, சகோதரிகள் உறவினர்கள் என்று ஒருவரும் கற்பில் சிறந்தவர்களாகத் தெரியவில்லையா? என்பார்.
        இந்த காட்சியை குர்ஆனிலும் காணலாம். ஈஸா நபியின் தாயார் மரியம் அவர்களது கற்பிற்கு குர்ஆனின் பல வசனங்கள் சான்றிதழ்களை வழங்குகிறது. அம்மையாரது பெயரில் ஒரு அத்தியாயமே இருக்கிறது.  ஆனால் முஹம்மது நபியின் தாயார் ஆமீனாவின் பெயர் ஒருமுறைகூட குறிப்பிடப்படவில்லை. மேலும் முஹம்மது நபியின் மனைவியர்கள் தங்களது கற்பை பேணிப்பாதுகாக்க வேண்டுமென்ற எச்சரிக்கைகளும் (குர்ஆன் 33:28-33)  அறிவுறுத்தல்களுமே காணப்படுகிறது. ஹதீஸ்களோ முஹம்மது நபியின் மனைவியரின் கற்பு விமர்சனத்திற்குள்ளான உண்மைகளைக் கூறுகிறது
ஆதாரம் 3
ஈஸா நபி, கைக்குழந்தையாக இருந்த பொழுதே தனது பணியைப் பற்றித் தெளிவாக பேசியதாகக் குர்ஆன் கூறுகிறது.
(ஜிப்ரீல் என்னும்) பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு நான் உம்மை உறுதிப்படுத்திய பொழுது, தொட்டிலி(ல் குழந்தையாக நீர் இருந்த நேரத்தி)லும், வாலிபத்திலும் நீர் பேசியதையும்...
(குர்ஆன் 5:110, 19:29-33)
முஹம்மது நபி ஒரு தற்குறி வாழ்நாள் முழுவதுமே எழுதவும், படிக்கவும் பிறர் உதவியை எதிர்பார்த்திருந்தவர். அல்லாஹ் முஹம்மது நபியை மக்கள் தனது தூதரென்று நம்பவேண்டும் என்பதற்காக கல்லைப் பேச வைத்தான், சந்திரனைப் பிளந்து ஒட்டினான், விண்வெளிக்கு அழைத்துச் சென்றான், இப்படி எதை எதையோ செய்தான். ஆனால் அவரது நபித்துவ தொழிலுக்கு உதவுமாறு எழுத்தறிவை வழங்கியிருக்கலாமே…!
ஆதாரம் 4
ஈஸா நபி களி மண் பறவையைச் செய்து அதற்கு உயிரூட்டி பறக்கவிட்டவர். இதன் மூலம் அவரது உணவிற்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து கொள்ளும் திறமை இருந்ததை நம்மால் அறியமுடிகிறது.
என்னுடைய உத்திரவைக் கொண்டு களிமண்ணால் பறவையின் வடிவத்தைப்போன்று நீர் உண்டாக்கி அதில் நீர் ஊதியதும் என் உத்திரவைக்கொண்டு (உயிருள்ள) பறவையாக அது ஆனதையும்; …
(குர்ஆன் 5.110)
ஆனால் முஹம்மது நபி, தனது வயிற்றுப் பிழைப்பிற்காக மனைவியின் தயவை எதிர்பார்த்திருந்தார், வசதியான வாழ்க்கைக்காக, தன்னைவிட பதினைந்து வருடங்கள் மிகைத்த ஒரு மூதாட்டியை திருமணம் செய்ததை, புரட்சிகரமான விதவைத் திருமணம் என்றெல்லாம்  புனைய வேண்டியிருந்தது. அல்லாஹ்விற்கோ, முஹம்மது நபியின் வழிப்பறிக் கொள்ளை, சூறையாடல்களை ஹலால் என அறிவிக்க வேண்டியிருந்தது.
அன்ஃபால் அல்லாஹ்வுக்கும்  அவன் ரஸூலுக்கும் உரியவை;
(குர்ஆன் 8.1)
செல்வச் செழிப்பான மூதாட்டியின் மரணத்திற்குப் பிறகு அவரது பொருளாதாரம் படுபாதாளத்திற்குச் சென்றது. (சிங்கிள் "டீ"க்குகூட வழியின்றி தவித்தார்) இவ்வாறாக முஹம்மது தனக்கு தேவையான உணவிற்குக்கூட உழைக்கும் திறமையற்றவராக இருந்துள்ளார்.
ஆதாரம் 5
ஈஸா நபி இறந்த மனிதர்களையும் உயிரூட்டினார்.
என் உத்திரவைக் கொண்டு இறந்தவர்களை (மண்ணறையிலிருந்து) உயிருள்ளவர்களாக  நீர் வெளியாக்கியதையும்;
(குர்ஆன் 5.110)
தன்னை சித்திரவதை செய்து சிலுவையில் அறைந்து கொல்ல முயன்ற பொழுதும் பொறுமையுடன் இருந்தார். எவரையும் தாக்க முயற்சிக்கவில்லை. ஆனால் முஹம்மது நபி தனக்கெதிரா சூழ்ச்சி செய்வதாகக் கூறிக்கொண்டு தன்னை மறுத்தவர்களைக் கொன்று குவித்தார். பனூ குறைழாவில்,  ஒரே நாளில் 900 பேர்களது தலைகளை வெட்டி எறிந்து உலக சாதனை  படைத்தார்.
ஆதாரம் 6
ஈஸா நபி, பிறவிக் குருடருக்கும்  பார்வையை வரவழைத்தார்.
இன்னும் என் உத்திரவைக் கொண்டு பிறவிக் குருடனையும் வெண்குஷ்டனையும் நீர் சுகப்படுத்தியதையும்;
(குர்ஆன் 5.110)
அல்லாஹ், 'ஹலால்' என்று அனுமதித்த கண்ணியமிக்க தொழிலான கொள்ளையடித்தல் மூலம்  முஹம்மது நபி சேமித்து வைத்திருந்த ஒட்டகங்களை உக்ல் குலத்தைச் சேர்ந்த  சிலர் 'ஹராமான' முறையில் திருடிச் சென்றனர் அவர்களை விரட்டிச் சென்று, மாறுகால் மாறுகை வெட்டி, அவர்களது   கண்களையும் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால்  குத்தி குருடாக்கினார் (புஹாரி ஹதீஸ் :6802).
ஆதாரம் 7
ஈஸா நபி பெண்களின் மீது இச்சையின்றி துறவு வாழ்கையை வாழ்ந்தவர். முஹம்மது நபி பல மனைவிகளுடனும், போர்களில் ஆண்களைக் கொன்று அவர்களது மனைவியர்களையும், பெண் குழந்தைகளையும் பாலியல் அடிமைகளாகக் கைப்பற்றினார். மேலும் மருமகள் (வளர்ப்புமகனின் மனைவி) மீதும் இச்சை கொண்டு அவரைத் தனது மனைவியாக்கிக்  கொண்டார்.(குர்ஆன் 33.37) அல்லாஹ்வே(?) வெறுப்படைந்து இனி திருமணம் செய்யக்கூடாது (குர்ஆன் 33.52) என்று தடைவிதிக்குமளவிற்கு முஹம்மது நபியின் செயல்பாடுகள் இருந்தது.
ஆதாரம் 8
அல்லாஹ்,  ஈஸா நபியை அன்பானவராகவும் மன்னிக்கும் குணமுடையவராகவும் ஆக்கினான். அவர் அடிமைமுறையை வெறுத்தார். அல்லாஹ்,  முஹம்மது நபியை போர்களின் மூலம் அப்பாவி பொதுமக்களை அடிமைகளாகக் கைப்பற்றுபவராக ஆக்கினான்.
ஆதாரம் 9
தீராவியாதிகளான வெண்குஷ்ட நோயாளிகளையும்,  தொழு நோயாளிகளையும்  ஈஸா நபி குணப்படுத்தியதாக குர்ஆன் கூறுகிறது. 
இன்னும் என் உத்திரவைக் கொண்டு பிறவிக் குருடனையும் வெண்குஷ்டனையும் நீர் சுகப்படுத்தியதையும்;
(குர்ஆன் 5.110)
முஹம்மதிற்கு அப்படி எந்த ஒரு ஆற்றலும் இருக்கவில்லை.  அவரிடம் அற்புதங்களை செய்து கண்பிக்குமாறு வற்புறுத்திய பொழுது,
"தம் இறைவனிடமிருந்து ஏதேனும் ஓர் அத்தாட்சியை அவர் நம்மிடம் கெண்டு வர வேண்டாமா? என்று அவர்கள் கூறுகின்றனர் முந்தைய வேதநூல்களிலுள்ள  தெளிவு-விளக்கம் அவர்களிடம் வர வில்லையா?"
(குர்ஆன் 20:133)
என்று கூறி நிலைமையை சாமாளித்தார். அடிமைப்பெண் மரியத்துல் கிப்தியாவிற்குப் பிறந்த தனது மகன் இப்ராஹிமின் நோயை குணப்படுத்த, அல்லாஹ்விடம் முஹம்மது நபி பல இரவுகள் அழுதுபுலம்பி பிரார்த்தனை செய்தும் கூட, ஏனோ அல்லாஹ் செவிசாய்க்கவில்லை.
ஆதாரம் 10
ஈஸா நபி இறக்கவில்லை என்கிறது குர்ஆன், அவரைக் கொலை செய்ய முயன்றவர்களின் நிழல் கூட ஈஸா நபியின் மீது விழாமல் அல்லாஹ், அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டதாகவும் கூறுகிறது. இன்றுவரை மரணமடையால் இரண்டாம் வானில் வசித்து வருவதாக கூறுகின்றனர். முஹம்மது நபி தனது விண்வெளிப் பயணத்தின் பொழுது இத்தகவலை உறுதிசெய்துள்ளார் (அங்கு ஹூருலீன்களுடன் (சொர்கத்து கன்னிப் பெண்கள் உல்லாசமா இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை.)
ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
(குர்ஆன் 4:158)
இத்தகைய நல்லெண்ண நடவடிக்கைகளை முஹம்மது நபியின் விஷயத்தில் அல்லாஹ் மேற்கொள்ளவில்லை. முஹம்மது நபியை எதிரிகளின் விஷத்தால் கொடுமையான வேதனைகளை அனுபவித்து மரணமடையச் செய்து, (புஹாரி ஹதீஸ் -2617) அவரது உடலை மண்ணில் புதைத்து அழுகச் செய்தான்
மேற்கண்ட ஆதாரங்கள் கூறும் உண்மைகளைக் காணும் பொழுது இவை இஸ்லாமின் புனித புத்தகத்தின் மூலத்தில் இருப்பவைகளா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
எவர் (அல்லாஹ்வின்) ரஸூலுக்கு வழிப்படுகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு விட்டார்.
(குர்ஆன் 4:80)
இப்படி, அல்லாஹ்விற்கே இணையான முஹம்மது நபியை ஒரு மூன்றாம்தர குற்றவாளியைவிட கீழ்தரமாக சித்தரிப்பதிலிருந்தே குர்ஆன் கிருஸ்துவர்களால் மாற்றப்பட்டுள்ளதை அறியலாம். ஆனால் இதை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ள  மறுக்கின்றனர்.
குர்ஆனுக்கான மூல படிவங்கள், முதல் திரட்டு ஆகியவைகளை உதுமான் கலிபாவாக இருக்கும்போது அழித்துவிட்டார் என்பதையும் இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

தஜ்ஜால்


--
http://thamilislam.tk
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails