--
www.thamilislam.co.cc
அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
மும்பை : இயக்குனர் சுதிர் மிஸ்ரா இயக்கி, இன்னும் திரைக்கு வராத ஒரு இந்தி படம், இணைய தளத்தில் வெளியாகியுள்ளது, பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டின் பிரபல இயக்குனர் சுதிர் மிஸ்ரா. இவர் "தேரா கியா ஹோகா ஜான்னி'என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில், நெய்ல் நிதின் முகேஷ், சோஹா அலி கான் போன்றோர் நடித்துள்ளனர். பிரிட்டனை மையமாக கொண்டு செயல்படும் "மெடிசென்ட்' கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் இதைத் தயாரித்துள்ளது. இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும், லண்டனில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது.
படத்திற்கான பின்னணி இசைச் சேர்ப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. வரும் ஏப்ரலில் படத்தை திரையிட, தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், அதற்குள் இந்த படம் "யூ டியூப்'என்ற இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, "மெடிசென்ட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மனு குமரன் கூறுகையில்,"இதுகுறித்து, யூ டியூப் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளோம்.
எங்கள் படம் குறித்த வீடியோவை இணைய தளத்தில் இருந்து நீக்கி விடும்படி கூறியுள்ளோம். இருந்தாலும், இணைய தளத்தில் இருந்து, படத்தின் வீடியோ இன்னும் எடுக்கப்படவில்லை. மும்பை "சைபர் கிரைம்'போலீசாரிடமும் இதுகுறித்து புகார் அளித்துள்ளோம்'என்றார்.
அதிகாரப்பூர்வமாக தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்னரே, இணைய தளத்தில் படம் வெளியானது, பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
source:dinamalar